விஸ்வநாத் & Sons

Rating 3/5

a K Vijay Anandh review

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகச்சிறந்த கதாநாயக அறிமுக காட்சி. உடைந்த பிஸ்டலை ஒட்டவைத்து ஒலிம்பிக்கில் தங்கமெடல் வாங்கும் சஞ்சய் விஸ்வநாதாக சூர்யா.

துப்பாக்கி சுடும் வீரர், என்றால் ஏதோ நடுத்தர குடும்பம், கஷ்டப்பட்டு ஒலிம்பிக்ஸ் வந்திருக்கிறார் என்றெல்லாம் கிடையாது.

சஞ்சய்  விஸ்வநாத் வீடே ஒரு ஒலிம்பிக் மைதானத்திற்குள் கட்டப்பட்ட பிரமாண்ட அரண்மனையாக இருக்கிறது.  வீட்டில் மகாராணி மாதிரி அவரது அம்மா ராதிகா,   அம்மாவும் மகனும் என்று இருவர் சாப்பிடுவதற்கு, பத்து பதினைஞ்சு பேர் சமையல் செய்கிறார்கள்,  வீட்டு வேலையாட்கள், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு ஒரு  ஆஜானுபாகுவான பாடிகார்டு நயீம் மூசா மாதிரி சஞ்சய் விஸ்வநாத்திற்கு ஒரு கராத்தே கார்த்தி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட சபாரி அணிந்த தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள்.

டைடல் பார்க் தோற்றுவிடும் அளவிற்கு, சஞ்சய் விஸ்வநாத் இன் கார்பரேட் அலுவலகம், தனி விமானம்.

வாழ்ந்தால் இப்படி வாழணும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே …

எனக்கு தெரிந்த ஒரு டாக்டர் சான்பிரான்ஸ்சிஸ்கோ இல் இருக்கிறார் என்று அத்தை வழியனுப்பும் போது, அவரை பொண்ணு பார்க்கத்தான் பறந்து போகிறார் என்று நினைத்தால், அடுத்த 365 நாட்களும் பறந்து பறந்து ஒரு பச்சக்குழந்தையுடன் வீடு திரும்புகிறார் சூர்யா.

அங்கிருந்து ஒரு டுவிஸ்ட் தொற்றுக்கொள்கிறது.  அதன் பிறகு அந்த குழந்தை எப்படி வந்தது..? சூர்யாவுக்கு அவரது அம்மா ஆசைப்பட்டது போலவே திருமணம் நடைபெறுகிறதா ? அது தான் அடுத்த இரண்டரை மணி நேரத்திற்கான திரைக்கதை.

மமீதா Baiju உம் இன்னொரு குழந்தையாக அந்த வீட்டிற்கு வந்து கலகலப்பூட்டுகிறார்.

சூர்யா தட்டில் இருந்து ஏதேனும் எடுக்க முயல, அது எச்சில் என்று சூர்யாவும், எனக்கு பிராப்ளம் இல்லை என்று மமீதாவும்,  எனக்கு பிராப்ளம் என்று சூர்யாவும் சொல்லும் போது ஏன் இப்படி .??என்று  தோன்றுகிறது. அதன் பிறகு தான் மாதக்கடைசில சூர்யா போகும் pleasure tour பற்றி தெரியவருகிறது. ஒரு கட்டத்தில் எனக்கு பிராப்ளம் இல்லை என்று கூறி மமீதா ஜெயிக்கிறார்.

வயதுக்கு வந்தவுடனே Pleasure Tour போகும் சூர்யா , அவரது 12 வயது முதல் கணவன் இல்லாமல் அவருக்காகவே தனியாக வாழும் அம்மா பற்றி யோசிக்காமல் இருப்பது அந்த கதாபாத்திர முரண்.

கல்விச்செலவுக்காக அல்லது இதர செலவுகளுக்காக  ஒரு வருடம் தியாகம் செய்து எவனுக்கோ குழந்தை பெற்றுக்கொடுக்கும் வாடகைத்தாய் வேலை பார்க்கலாம் என்கிற விஷயத்தை இந்தியாவிற்குள்  அதுவும் நம் இளம் பெண்கள் மத்தியில் பரவாலாக்கிவிடுவார்களோ என்கிற பயம் தொற்றிக்கொள்கிறது. அதிலும், சூர்யாவுக்கு இளம் பெண் ரசிகைகள் அதிகம் என்று அவரது தந்தை சிவகுமார் ஒரு மேடையில் பேசியது நினைவிருக்கிறது.

அப்பாவின்  இரண்டாவது மனைவி, அவருக்கு கெளரவம் வாங்கி கொடுக்க என்று இரண்டாவது பாதி நகர்ந்து விடுகிறது.

கருப்பின் பிரமாண்ட வெற்றியை அடுத்து சூர்யா  நடித்திருக்க வேண்டிய கதை இது அல்ல என்று தோன்றியது!!

சூர்யாவை நிஜமாக நேசிப்பவர்கள், ஒத்துக்கொள்வார்கள்!!

Comments (0)
Add Comment