I’m Game

Rating 3/5

a K Vijay  Anandh review

சில ஆண்டுகளுக்கு முன், கைகளை இழந்த ஒருவருக்கு உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் இன்னொருவரின் கையை பொருத்தி வெற்றிகரமாக அதனை இயங்கவும் வைத்திருப்பார்கள், மருத்துவர்கள். இந்த செய்தி, கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. அதை இவர்களும் படித்திருப்பார்கள். ஆனால், அதை மையமாக வைத்து இப்படி ஒரு அட்டகாசமான கதையை எழுதப்போகிறோம் என்று  அவர்களே நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள், சஜீர் பாபா, இஸ்மாயில் அபுபக்கர்,   பிலால் மொய்டு. இந்த மூவரும் எழுதிய கதையை அட்டகாசமாக இயக்கியிருக்கிறார்  நிகாஸ் ஹிதாயத். இந்த  நால்வர் கூட்டணியுடன் துல்கர் சல்மான் உம் இணைந்து ஐம் கேம் எனும் படத்தை கொடுத்திருக்கிறார்கள்.

கயாது லோஹரை மிகச்சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

எந்த இலக்கும் இல்லாமல் அப்பா காசை சூதாடி கரியாக்கிக்கொண்டிருக்கும் துல்கர் சல்மான் ஒரு விபத்தில் தனது வலது கையை இழக்கிறார். வணிக ரீதியில் மிகப்பெரும் சூதாட்டங்களின் மூலம் பெரும்பணம் புரளும் ஒரு கிரிக்கெட் லீக்கில்  நேர்மையான  திறமையான கிரிக்கெட்டராக அறிமுகமாகிறார்  ஆண்டனி வர்கீஸ்.

அவருதான் அந்த டீம் மேனேஜர் ஆனால், அவருதான் சூதாட்டம் நடத்தும் பெரும்புள்ளி வில்லன் மிஷ்கின்., ஒரு சவாலான கதாபாத்திரத்தில் பட்டையைக்கிளப்பியிருக்கிறார்.

ஒரு பக்கம் மல்டி மில்லியன்ர் துல்கர் சல்மான், ஆடம்பர பங்களா, கம்பெனி, கார் என்றும் இன்னொரு பக்கம் லீக் கிரிக்கெட் , மைதானம், ஆட்டம் என்றும் பிரமாண்டத்தை காட்டி ரசிகர்களுக்கு பெரிய தீனி போட முயன்றிருக்கிறார்கள்.

துல்கர் சல்மான், கேரளம் பெற்றெடுத்த இந்த பிள்ளை அப்பாவை விட  அதிக தூரம் தாண்டி, இன்று பான் இந்தியன் ஸ்டார்களில் முக்கியமான ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிரார்.  அப்படிப்பட்ட  ஒருவருக்கான கதை தேர்வாக ஐ ம் கேம் இல்லை என்றாலும், தொழில்நுட்ப  ரீதியாக  ஹாலிவுட் படங்களுக்கு சவால்  விடும் வகையில் எடுத்திருக்கிறார்கள்.

கதையாக இன்னும், காட்சிகளாக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் !

 

 

 

 

 

 

 

 

Comments (0)
Add Comment