சட்டமும் நீதியும் 2

Rating 4/5

a K Vijay Anandh review

பல்லவி:-

நான் என்பவன் உலகை அறியான்
நானா என்பவன் தன்னை அறியான் / 2

நானும் என்பவன் தோல்வி அடையான்
நியாயம் உணர்ந்தவன் நிமமதி அடைவான்

சரணம்:-

அவரவர் மனதில் ஆளுக்கொரு நியாயம்
உண்மை ஒன்றுதான்
ஆடிடுமே தாயம்

ஏற்றி வைக்காதே வலிகளை – தவறை
ஏற்றுக்கொள்வதே விடுதலை

சட்டம் நிற்பது நூறுசாட்சியில்
நீதி நிற்பது மனசாட்சியில்

பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுதியிருக்கும் இந்த அற்புதமான பாடல் வரிகள் தான் சட்டமும் நீதியும் 2 வின் மொத்த எபிசோடுகளும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களில் ஒப்பனிங் பாடலாக வரும் அளவிற்கு அர்த்தங்கள் பொதிந்த இந்தப்பாடல், இந்த இணைய தொடரின் இறுதியில் வரும் போது, தொடருக்கு சரியான ஒரு பினிஷிங் கொடுத்து விடுகிறது.

பாரிஸ்டர் ரஜினிகாந்த், என்பது  நடிகர் திலகம் ஏற்று நடித்திருக்கும் ஒரு அட்வகேட் கதாபாத்திரத்தின் பெயர், அது எந்தளவுக்கு பிரசித்திபெற்றதோ அதே அளவிற்கு, அட்வகேட் சுந்தரமூர்த்தி கதாபாத்திரமும் இன்று உலகம் முழுவதும் பிரபலமாகியிருக்கிறது. இணைய தொடர்களின் வீச்சு உலகம் முழுவதிலுமாக பரந்து விரிந்து இருப்பதால், உலகின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் அமைந்துள்ள நீதிமன்ற வளாகங்களில் சுந்தரமூர்த்தி மாதிரி ஒரு அட்வகேட் நமக்கு கிடைக்கமாட்டாரா என்று தேட ஆரம்பித்துவிட்டார்கள் என்றால் அது மிகையல்ல. சரவணனின்  நடிப்பு பயணத்தில் பருத்தி வீரன் சித்தப்பு கதாபாத்திரத்திற்கு பிறகு மிகப்பெரிய அளவில் அவருக்கு பெயரையும் புகழையும் கொடுத்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரம் இது தான்.  இவரும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.

சரி.. எதிர்த்து வாதாடும் வக்கீல், மிகச்சரியாக ரஜினிகாந்த் பட பார்முலாவை பிடித்திருக்கிறார்கள். ஆம், சந்திரா எனும் கம்பீர கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார், மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.

முதல் எபிசோடில் இன்ஸ்பெக்டர் பிரேம் கொல்லப்படுகிறார்.உடன் பணியாற்றும்  நாலு காவலர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்படுகிறார்கள்.  ஒரு சிறிய சாட்சி கூட இல்லாத இந்த கேஸில் அவர்களை எப்படியாவது குற்றவாளிகளாக காட்டி வழக்கை முடிக்க பார்க்கிறது, காவல்துறையும் நீதிமன்றமும், விடுவாரா நம்ம சுந்தரமூர்த்தி, நாலு  பேரும் நிரபராதிகள் என்று தீர்ப்பு வாங்கி விடுதலையும் வாங்கி கொடுக்கிறார்.

அதன் பிறகு, ஒரு டிவிஸ்ட்., சட்டுனு முடித்துவிட்டாலும் இணையத்தொடரின் குழு முக்கியமாக இயக்குனர்  பாலாஜி செல்வராஜின் விருப்பப்படி அது ஒரு அட்டகாசமான கிரைம் திரில்லராக  சட்டமும் நீதியும் 3 திரைப்படமாகவே  எடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

அதுவரை,  சட்டமும் நீதியும் 2 வை  Z5 இல் கண்டுகளியுங்கள்!

 

Comments (0)
Add Comment