கார்டியன்

117

a K.Vijay Anandh review

இன்றைய தேதியில் நயன்தாரா மற்றும் திரிஷாவுக்கு அடுத்து படங்களில் மையக்கதாபாத்திரத்தில்  நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகையாக ஹன்சிகா மோத்வானி வலம் வருகிறார் என்றால் மிகையாகாது.

அன்லக்கி என்று பிறரால் உதாசீனப்படுத்தப்படும் குழந்தைகளுக்கு கார்டியனாக அன்சிகா மோத்வானி களமிறங்கும் அதிரடி திகில் படம் தான், கார்டியன்.

ஹன்சிகா மோத்வானியின் குழந்தைப் பருவத்தில் வரும் குழந்தை நட்சத்திரமாகட்டும், ஹன்சிகா மோத்வானி காப்பாற்றும் குழந்தை நட்சத்திரமாகட்டும் இரண்டு குழந்தைகளுமே மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

சுரேஷ் மேனன் அபிஷேக் ஸ்ரீமன் போன்ற மிரட்டல் வில்லன்கள் மோதுகிறார்கள் என்றால் அதற்கு பலமான கதாநாயகனோ கதாநாயகியோ வேண்டும். இந்தப் படத்தில் அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக, ஹன்சிகா மோத்வானி சிறப்பாக நடித்திருக்கிறார் சிறப்பாக நடித்திருக்கிறார்.

வில்லன்களால் பாதிக்கப்படும் நடிகையும் சிறப்பாக நடித்திருக்கிறார், கஜினி படத்தில் அசின் வில்லன்களிடம் அடிபட்டு உயிரை விடும் காட்சிகளை நினைவுபடுத்துகிறார்.

இந்த உலகில் அன்னைக்கு என்று யாருமில்லை, பெற்ற தாய் இருந்தாலும் மறைந்தாலும் அவர் நம்மை என்றும் லக்கியாகவே வைத்திருப்பார் என்கிற கருத்தை,  சபரி மற்றும் குரு சரவணன் ஆகிய இருவரும் சிறப்பாக இயக்கி இந்த படத்தின் மூலம்  ரசிகர்களுக்கு சொல்லி இருக்கிறார்கள்.