காடுவெட்டி

mysixer rating 3/5

92

a K.Vijay Anandh review

காதல் இந்த ஒற்றை வார்த்தையை இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும் யாராலும் புரிந்து கொள்ள முடியாது. காதல் நல்லதா ? கெட்டதா ?  நல்லதை விளைவிக்குமா ?  கெட்டதை விளைவிக்குமா ? என்று இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை யாராலும் விளங்கிக் கொள்ள முடியாது.

காதலன் காதலி அவர்கள் குடும்பத்தினர் என்று ஒரே நடிகர்களை வைத்து நகர்ப்புற காதலையும் கிராமப்புற காதலையும் ஒப்பிட்டு உணர்வுபூர்வமான ஒரு கதையை கொடுத்திருக்கிறார் சோலை ஆறுமுகம்.

நகர்ப்புற காதல், பல கோடி மக்கள் தொகை கொண்ட நகரம். பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட அறிமுகம் இல்லாதவர்களாக இருக்கும் நிலை. ஏதோ ஒரு வகையில் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய நிலை இல்லாத இரு குடும்பங்கள். அந்த குடும்பத்தில் இருக்கும் ஒரு ஆணிற்கும் பெண்ணிற்கும் ஏற்படும் காதல் எவ்வளவு சமூகமாக திருமணத்தில் முடிகிறது,  அதன் மூலம் இரு குடும்பங்களும் இணைந்து அவர்களுக்கு பிறந்த குழந்தையை கொண்டாடி மகிழ்கிறது என்பது ஒரு பக்கம்.

அதே குடும்பம் அதே காதலர்கள். கிராமம். நல்லது கெட்டது வணிகம் கல்வி பொருளாதாரம் என்று அந்த கிராமத்தில் இருக்கும் 50 100 குடும்பங்களை சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும். அந்த ஊரை விட்டு தள்ளி வைக்கப்படும் நிலை ஏற்பட்டால் அவர்கள் கதி அதோ கதி என்கிற துர்பாக்கிய நிலை. அந்த நிலையில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த வெவ்வேறு கிராமத்தை சேர்ந்த ஆணிற்கும் பெண்ணிற்கும் ஏற்படும் காதல் அந்த குடும்பங்களை எப்படி புரட்டிப் போடுகிறது? படிப்பறிவு இல்லாத அந்த கிராம மக்களை சமூகத் தலைவன் என்கிற பெயரில் ஒரு பக்கம் தவறாக வழிநடத்தும் தலைவன்,  இன்னொரு பக்கம் சமூக பாதுகாப்புக்கு நிற்கும் தலைவன் என்று இன்னுமும் அவர்களது வாழ்க்கை போர்க்களம் போல காட்சியளிப்பது ஆச்சிரியம் அல்ல.  மண்ணிற்கும் வெண்ணிற்கும் ஆன போரை காலம் காலமாக சொல்லி வரும் கலையை ஒரு மூச்சாக கொண்டு வளர்த்து வரும் அவர்களுக்கு அந்தப் போர்க்களம் புதிதல்ல.

சங்கீர்த்தனா – அகிலன் இருவரும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற காதலர்களாக மிகவும் எதார்த்தமாக நடித்து அந்த கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

மூத்த சமூகப் போராளி அரசியல்வாதி ராமதாஸ் ஐயாவை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் ஏ எல் அழகப்பன் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது போர்படை தளபதியாக காடுவெட்டி குருவாக ஆர் கே சுரேஷ் அதிரடியாக நடித்திருக்கிறார்.

50 100 குடும்பங்கள் வசிக்கும் ஒரு கிராமத்திலிருந்து கல்விக்காக செல்லும் பெண்கள் பிற சமூகத்தினரால் நாளைய காதலுக்கு இரையாக்கப்படும் பொழுது அந்த கிராமத்தில் வசிக்கும் மற்ற பெண்களின் கல்வியும் அதன் மூலம் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியும் முடங்கிப் போவது ஒரு எதார்த்தமான நிகழ்வாகவே படுகிறது . அப்படியானால் அந்த இடத்தில் காதல் என்பது அழிவிற்கான வித்தாகி விடுகிறது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஒட்டுமொத்தமாக காதலை பிடித்து கொண்டாடுபவர்களுக்கும் பிறரது காதலில் குளிர் காய்பவர்களுக்கும் ஒட்டுமொத்தமாக ஒரே ஒரு பதில் தான். படத்தில் கதாநாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் சுப்பிரமணியம் சிவா சொல்லும், ” ஒரு பெண்ணின் அப்பாவாக இருந்து பார் அப்பொழுதுதான் அந்த வலி உனக்கு புரியும்.. ”  என்பது. இது சில நேரங்களில் பொருந்தாத காதலில் சிக்கிக் கொள்ளும் மகன்களுக்கும் பொருந்தும், மகன்களின் தந்தையருக்கும் பொருந்தும்.

அவ்வப்பொழுது  நண்பர்களுக்காக நடிகனாக தலையை காட்டிக் கொண்டிருந்தாலும், இந்தப் படத்தில் ஒரு முழுமையான நடிகராக தலைசிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார் சுப்பிரமணிய சிவா. தன் மகளின் உணர்வுகளை மதித்து, வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் என் மகளை பட்டினி மட்டும் போட்றாதீங்க என்று காதலனின் கரம் பிடித்து கதறுவது நம்மையும் கண்கலங்க வைக்கும் .

இன்னுமா ஜாதி பார்க்கிறாங்க? இன்னுமா மதம் பாக்குறாங்க ? என்று கேட்கும் பெரும்பாலான முட்டாள்கள் ஜாதி பார்த்து மதம் பார்த்து தான் ஓட்டு போட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சன உண்மைஜாதி பார்த்து மதம் பார்த்து தான் ஓட்டு போட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சன உண்மை. அப்படி தேர்தலில் ஓட்டு வாங்கி ஜெயித்து உன் வீட்டிற்கு எந்த சூழ்நிலையிலும் கஞ்சி கொடுக்க கூட வராதவனை விட உன் உறவோடு குடும்பத்தோடு ஒட்டி விளையாட வரும் மருமகளோ மருமகளோ தான் சார்ந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் பெற்றோர்களுக்கு முழு உரிமை உள்ளதாகவேப்படுகிறது.

நம்மை மதரீதியாக பிரித்தாள்வதற்காக எவனோ ஒரு எச்சை ஆதிக்க சாதி அடிமை சாதி என்று போகிற போக்கில் கக்கிச் சென்ற கருத்துக்களை நக்கிப் பிழைத்து அரசியல் செய்யும் சமூக விரோதிகளை அற்புதமாக அடையாளம் காட்டியிருக்கிறார் இயக்குனர். இறுதியில் அந்தத் தலைவனின் கோரமுகம் தெரிந்து அவர்களே , அவனை  அடித்து விரட்டுவதாக காட்சிப்படுத்திருப்பதும் ஒரு ஆரோக்கியமான முன்னெடுப்பு.  பிற சமூகத்தினர் மீது அவனுக்குள் இருக்கும் வன்மத்தை – அவர்களது பெண்களை  அசிங்கப்படுத்தி- தனது சமூக இளைஞர்களை வழிகாட்டவாக்கி –  தீர்த்துக் கொள்ள முயலும் சுய ரூபத்தை காட்சிப்படுத்தி இருக்கும் விதமும் அருமை விதமும் அருமை.

முதலிலேயே குறிப்பிட்டது போல மானுட சமூகம் இருக்கும் வரை காதலும் இருக்கும் காதல் சார்ந்த பிரச்சினைகளும் இருக்கும் அதற்கான தீர்வையோ விடையையோ எவ்வளவு பெரிய சமூகநீதி கொம்பனாலும் கொடுத்து விட முடியாது.

காதலைப் பற்றி சொல்லும் படத்தில் இடைச்செருகலாக இருந்தாலும், 14 கிராமத்திற்கு இரண்டே பள்ளிக்கூடம் இருக்கும் நிலையில் 10 டாஸ்மாக் இருப்பதாக, கலெக்டரை நடுவழியில் நிறுத்தி ஒரு பெண் புகார் கொடுப்பது தமிழ்நாட்டின் காவல் நிலையம் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது. கலெக்டராக நடித்திருக்கும் ஜே எஸ் கே கோபியும் இரண்டு காட்சிகள் வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

காடுவெட்டி, பொருந்தா காதல் ஒரு வெட்டி வேலை என்று அடித்து சொல்லியிருக்கிறது.