K. தேவபாலனின் Bright Ray Productions

தொழில்நுட்ப விற்பன்னர்களின் சங்கமம்

64
  • K. Vijay Anandh

தமிழ் நாடு அரசின் சார்பாக சமீபத்தில்  நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த லோகோ என்று அழைக்கப்படும் இலட்ச்சினையும் அதனை அனிமேட் செய்திருந்த பாங்கும் அந்த மாநாட்டில் பங்குபெற்றவர்களை மட்டுமல்லாது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இதனை உருவாக்கியவர்கள் யார்..? என்கிற தேடலில் Bright Ray Productions என்கிற நிறுவனத்தை பற்றியும்  அதனை உருவாக்கிய K தேவபாலன் என்கிற இளம் படைப்பாளியைப்பற்றியும் அறிந்துகொள்ள முடிந்தது.

அவரை தொடர்பு கொண்டு பேசிய போது பல சுவராஸ்யமான தகவல்கள் நமக்கு கிடைத்தன.

லொயோலா கல்லூரியில் விஸ்காம் படித்த கே தேவபாலன் வீடியோ துறையில் விஸ்வரூபம் எடுத்த  விதம் மிகவும் சுவராஸ்யமானது. அவரது கடின உழைப்பும், தொழில் நுட்பங்கள் மீது கொண்ட தீரா காதலும், வீடியோக்களை உருவாக்க அவரது அர்ப்பணிப்புடன் கூடிய மெனக்கெடல்களும் இன்று டிஜிட்டல் வீடியோக்கள் துறையில் அவருக்கு மிகச்சிறந்த அங்கீகாரத்தை கொடுத்திருக்கின்றன. இது குறித்து கே தேவபாலனிடம் கேட்டபோது, “விஸ்காம் முடித்ததும் இயக்குநர்கள் சேரன் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோருடன் உதவி இயக்குநராக பணியாற்றினேன். எனக்கு, ஆவணப்படங்கள், கார்பரேட் படங்கள், ஹெல்த்கேர் சம்பந்தமான படங்கள், விளம்பரப்படங்கள், வணிகபடங்கள் மற்றும் குறும்படங்கள்  இயக்குவதில் பெரிதும் ஆசை. அதனால், இன்றைய தேதியில் அதிகரித்து வரும் டிஜிட்டல் வீடியோக்களின் தேவையை கருத்தில் கொண்டு, பிரைட் ரே புரொடக்‌ஷன்ஸ் எனும் நிறுவனத்தை தொடங்கினேன். இயக்குநர்கள் சேரன், ரா பார்த்திபன் மற்றும் பா ரஞ்சித் அவர்கள் எனது நிறுவனத்தையும் என்னையும் ஊக்குவித்து பல தரமான படைப்புகளை வழங்க உந்துதலாக இருந்தார்கள்…” என்றார்

தொடர்ந்து பிரைட் ரே புரொடக்‌ஷன்ஸ் பற்றி பேசும்போது, ” வீடியோக்களின் தேவைக்கேற்ற ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட துறைகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து எனது ஒவ்வொரு படைப்பையும் வழங்கி வருகிறேன். தொழில் நுட்பங்களை பொருத்தவரை, ஒவ்வொரு தொழில் நுட்பமும் அறிமுகமாகும் அடுத்த நொடியே அவற்றை கண்டறிந்து கற்றுத்தேர்ந்து அவற்றின் மூலம் தரமான வீடியோக்களை உருவாக்கி எங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகின்றோம்..” என்கிறார் கே தேவபாலன்.

 

நன்கு படித்த தொழில் நுட்பங்களில் சிறந்து விளங்கக்கூடிய அணியாக பணியாற்றுவது, சரியான பட்ஜெட்டில் வீடியோக்களை எடுத்து தருவது, கண்ணியமான &  நேர்த்தியான வீடியோக்களை உருவாக்குவது, எழுத்தாக்கம் முதல் பட ஆக்கம் வரை அத்தனையையும் பார்ப்பவர்கள் ரசிக்கும் படியான முழுமையான வீடியோக்களாக தருவது, ஏற்றுக்கொள்ளத்தக்கவகையில் பொருட்களை பார்வையாளர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வீடியோக்களை கவனமாக உருவாக்குவது மற்றும் சம்பந்தப்பட்ட வீடியோக்களுக்கு தேவையான ஆய்வுகள், படம்பிடிக்கவேண்டிய இடங்கள், தேவையான தொழில் நுட்பங்கள் மற்றும் எளிமையான அனைவராலும் புரிந்துகொள்ளத்தக்க கதைகளை – contents – உருவாக்குவது, தேவையான விஷுவல் எஃபெக்ட்டுகள் சேர்த்து நேர்த்தியான வீடியோக்களாக உருவாக்கி அவற்றை குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது போன்றவை பிரைட் ரே புரொடக்‌ஷன்ஸின் சிறப்பம்சங்கள்.

விளம்பரப்படங்கள் & ஜிங்கிள்ஸ், பிராண்ட் பில்டிங், கார்பரேட் பிலிம்ஸ், மருத்துவம் மற்றும் கல்வித்துறை சம்பந்தப்பட்ட வீடியோக்கள், அனிமேஷன் வீடியோக்கள்,  இன்ஃபோகிராபிக்ஸ் – Infographics – ஒரு குறிப்பிட்ட தலைப்பிலான வரைகலையுடன் கூடிய தகவல் வீடியோ, மற்றும் ஆவணபடங்கள் ஆகியவற்றை பிரைட் ரே புரொடக்‌ஷன்ஸ் தரமாக உருவாக்கி தங்களது வாடிக்கையாளருக்கு வழங்கிவருகிறது.

பிரைட் ரே புரொடக்‌ஷன்ஸின் குறிப்பிடத்தக்க படைப்பாக கே தேவபாலன் இயக்கிய ஆவணப்படமான ”காணி, மேற்கு தொடர்ச்சி மலை வாழ் பூர்வகுடி மக்கள்” திகழ்கிறது.

திருநெல்வேலி மாவட்ட கலை மன்றத்தின் முழு பங்களிப்புடன்  கே தேவபாலன், Bright Ray Productions  என்கிற தனது நிறுவனம் மூலம் இந்த ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார். காணி இன மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வியல், திருவிழாக்கள் மற்றும் சடங்குகள், பாரம்பரியங்கள் மற்றும் சமூக பழக்கவழக்கங்கள், உணவு மற்றும் மருத்துவ முறைகள்  மற்றும் கல்வி அவர்களது வேலை வாய்ப்பு ஆகிய ஐந்து தலைப்புகளில் அற்புதமாக பார்ப்பவர்களை முழுமையாக கவரும் வண்ணம் அழகாக இயக்கியிருக்கிறார்.

திருமணம் குறித்த தகவல்களை மூட்டு காணி 3 முடிச்சு போடப்பட்ட மலர் சரத்தின வாயிலாக மற்றவர்களுக்கு சொல்வதும், ஒருவர் இறந்த மரண செய்தியை அறிவிக்க ஒரே ஒரு முடிச்சை அவிழ்ப்பதன் வாயிலாக தகவலை பரிமாறுவதும் சுவாரசியமாக இருக்கின்றது. அடர்ந்த வணங்கள், அங்குவாழும் காணி இன மக்கள் ஆகியோர் பற்றி மேலும் பல சுவராஸ்யமான தகவல்களடங்கிய இந்த ஆவணப்படத்தை Bright Ray productions இன் யூடியூப் சேனலில் கண்டு மகிழலாம்.

மரிய செல்வத்தின் எழுத்தாக்கம், நவீன் குமாரின் அற்புதமான ஒளிப்பதிவு, பொன்னுவேல் தாமோதரனின் நேர்த்தியான எடிட்டிங் மற்றும் ஒலிச்சேர்க்கை ஸ்ரீராம் பாலகிருஷ்ணனின் அற்புதமான நிறக்கோர்வை ஆகியவற்றை மிகவும் நேர்த்தியாக பயன்படுத்தி காணி என்கிற இந்த ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார் கே.தேவபாலன்.

இந்த ஆவணப்படம் 2022 இல் தமிழ் நாடு அரசின் சுற்றுலாத்துறையின் விருதினை வென்றிருக்கிறது. 2023 இல் 2வது தேசிய சுற்றுலா குறும்பட விழாவில் காணி ஆவணப்படம் விருது பெற்றிருக்கிறது. சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த 20 படங்கள் வரிசையில் இடம்பிடித்திருக்கின்றது, அதற்கான சான்றிதழ் இயக்கு நர் கே தேவபாலனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியன் பிலிம் ஹவுஸ் விருதுகளின் முதல் பதிப்பில் பல்வேறு போட்டி பிரிவுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இவர்களது வீடியோக்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பெரிய அங்கீகாரங்களை பெற்ருவருவதால் தனி நபர்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை தரமான வீடியோக்களுக்கான ஒரே தேர்வாக கே தேவபாலனின் பிரைட் ரே புரொடக்‌ஷன்ஸ் திகழ்கிறது என்றால் அது மிகையல்ல.

Follow Bright Ray Productions on social media

Website www.brightray.co

YouTube @brightrayproductions

Facebook Bright Ray productions

Instagram brightrayproductions

Linkedin Bright Ray Productions

e-mail brightrayproductions@gmail.com