குற்றம்புதிது, இத்திரைக்கதையும் புதிது – ரஜித்

18

கட்டுடலுடன் கதா நாயகன் பின்னணியில் மதுசூதன் ராவ் மற்றும் ராமச்சந்திரனின் கர்ஜித்தல், அவர்களின் பின்னணியில் தன் காந்தக்கண்கலுடன் கவரும் சேஷ்விதா என்று குற்றம்புதிது போஸ்டரே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது என்றால் மிகையல்ல.

டாக்டர் எஸ் கார்த்திகேயன் தனது மகன் தருண் கார்த்திகேயனை ஹீரோவாக களமிறக்க கேட்ட 40 க்கும் மேற்பட்ட கதைகளில், ரஜித் கூறிய குற்றம்புதிது திரைக்கதை மிகவும் புதிதாக இருந்ததால் அதனை தேர்ந்தெடுத்து களத்தில் குதித்திருக்கிறார்கள்.

திரைக்கதை ஜாம்பவான் கே பாக்யராஜ் கலந்துகொண்ட, படத்தின் துவக்கவிழாவில் இதுகுறித்து பேசிய அறிமுக இயக்குநர் ரஜித், ” நிச்சயம் இந்தப்படத்தின் திரைக்கதை, இந்திய அளவில் மிகவும் புதுமையாக கற்பனைக்கு எட்டாத அளவில் இருக்கும்..” என்றார்.

அறிமுக நாயகன் தருண் கார்த்திகேயன் கூறும் போது, “ எனக்கு நெகட்டிவ் ரோல் தான். முதல்படத்திலேயே இப்படி நடிக்கவேண்டுமா..? என்று யோசித்த போது, இப்படத்தின் திரைக்கதை என்னை கட்டிப்போட்டுவிட்டது…” என்றார். இப்படத்திற்காக, கடுமையான உடற்பயிற்சிகள் செய்து, அறிமுகப்படத்திலேயே இளம் ரசிகர்களை கவரும் வண்ணம் தன்னை தயார்ப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

இவரது கண்களுக்கே ரசிகர்கள் சொக்கிப்போவது உறுதி என்கிற அளவிற்கு, இதுவே நிறைய பேசும் என்கிற அளவிற்கான அழகான கண்களுடன் களமிறங்கியிருக்கும் சேஷ்விதா, “ அப்பா – மகளுக்கான ஒரு அழகிய உறவில் எனக்கும் நிறைய ஸ்கோர் செய்ய வாய்ப்பிருக்கும் இந்தப்படத்தில் அறிமுகமாவதில் மிகவும் பெருமைப்படுகிறேன்..” என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர் எஸ் கார்த்திகேயனும், “ இதில் மதுசூதன் ராவ் தான் பிரதானமான கதாபாத்திரம். ஆனாலும்,  என் மகன் தருண் கார்த்திகேயனுக்கு அவரது நடிப்புத்திறனை முழுமையாக வெளிப்படுத்திக்கொள்ளும் அளவிற்கு அவரது கதாபாத்திரம் அமைந்திருந்து. அவர் தமிழ்த்திரையுலகில் ஒரு நிரந்தர இடம் பிடிப்பார் குற்றம்புதிது படம் மூலம் அறிமுகமாவதில்..” என்றார்.

GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் தனது மகன் தருண் கார்த்திகேயனுடன் இணைந்து  பிரமாண்டாமாக தயாரிக்கும்  குற்றம் புதிது  வெர்ஷன் 1  படத்தில் தருண் கார்த்திகேயன், சேஷ்விதா , மதுசூதன் ராவ், ராமசந்திரன், பாய்ஸ் ராஜன்,பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா மற்றும் தினேஷ் செல்லையா,ஸ்ரீகாந்த்,மீரா ராஜ்,டார்லிங் நிவேதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ரஜித்,கிரிஷ் பாடல் வரி எழுத, ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கரண் B கிருபா இசையமைக்கிறார் ,கமலக்கண்ணன் படத்தொகுப்பை கவனிக்கிறார். STORYBOARD சந்திரன், நடன இயக்குனர் வரதா,COSTUME DESIGNER கெசியா,COSTUMER சம்பத், MAKEUP ARTIST “AIRPORT” RAJA, பாடகர்கள் அனந்து,ரஜித்,STILL PHOTOGRAPHY S. SAKTHIPRIYAN,PUBLICITY DESIGNER DINESH KUMAR, இப்படத்திற்கு மக்கள் தொடர்பாளராக நித்தீஸ் ஸ்ரீராம், மணவை புவன்,தயாரிப்பு மேலாளராய் ஆனந்த் பணியாற்றுகிறார். மேலும் இப்படத்தின் VISUAL EFFECTS பணிகளை WIREFRAME MEDIA நிறுவனம் ஏற்றுள்ளது.

இமாதம் 23-ம் தேதி தொடங்கும் இப்படப்பிடிப்பு ஒரேகட்டமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.