கிளாஸ்மேட்ஸ்

mysixer rating 2.5/5
 உத்திரகோசமங்கை கோவில், பாம்பன் பாலம், ஏர்வாடி தர்ஹா , அப்துல் கலாம் மற்றும் கமல்ஹாசன்  என இராமநாதபுரம் மாவட்டத்தின் பெருமைகளை சொல்லி தொடங்கும்  படம் மொத்தத்தில் கொஞ்சம் தள்ளாடி விடுகிறது.

 

கமல்ஹாசன், அம்மாவடத்தின் பரமக்குடிக்காரர் என்றால்  நெருங்கிய நண்பர்களான கால் டாக்சி டிரைவர் அங்கையற்கண்ணனும் குட்டிப்புலி  ஷரவணசக்தியும்   குடிக்கு அடிமையான மகா குடிகாரர்கள். புதிதாக கல்யாணம் ஆன அங்கையர் கண்ணன் அழகான மனைவியுடன் பொறுப்பான கணவனாக வாழ்ந்து வந்தாலும், சம்பாதிக்கும் காசு நண்பன் ஷரவணசக்தியுடன் சேர்ந்து குடித்து பொழுதைக் கழிக்கிறார்கள். டீச்சர் வேலைக்கு போகும் மனைவி, பாசத்துடன் இருக்கும் மகள் என ஒரு அன்பான குடும்பத்துடன் வாழும் சக்தி சரவணன், தினந்தோறும் நண்பன் அங்கையற் கண்ணனுடன் குடிப்பதை மட்டும் நிறுத்துவதில்லை. ஒரு கட்டத்தில் இருவரும் அவர்களது மனைவியை சந்தேகப்பட ஆரம்பிக்கிறார்கள்.

 

குடிப்பதை நிறுத்தி விட்டு மனைவி மற்றும் ஐ.ஏ.எஸ்.கனவுடன் இருக்கும் மகள் அபி நட்சத்ரா உடன் வாழும்  மயில்சாமி   குடும்பத்தில் அவர்கள் இருவரும் சேர்ந்து குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

 

துபாயில் இருந்து வரும் ஷரவணசக்தி மச்சான் ஷாம்ஸ் க்கு பெண் பார்த்து திருமணம் ஏற்பாடு நடக்கிறது.  திருமணத்துக்கு முதல் நாள் ஷாம்ஸ் குடித்துவிட்டு போட்ட ஆட்டத்தின் வீடியோ வைரலாக திருமணம் நின்று விடுகிறது. குடித்துவிட்டு ஷரவணசக்தி, அங்கையற் கண்ணன் மற்றும் மயில்சாமி ஆகிய மூவரும் போதையில் காரில் போகும்போது கார் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டு அதில் மயில்சாமி அகால மரணம் அடைகிறார். இதனால், ஐ.ஏ.எஸ்.கனவுடன் இருக்கும் மகள் அபி நட்சத்ரா மற்றும் மனைவி ஆதரவு அற்ற தனித்து நிற்கிறார்கள். அத்துடன் அங்கையற்கண்ணன் மற்றும் ஷரவணசக்தி குடும்பம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

 

தயாரிப்பாளரும், கதையின் நாயகனுமான  அங்கையர்க்கண்ணன் தனது கதாபாத்திரத்தை நன்றாக வெளிப்படுத்தி உள்ளார். இயக்குனரும், இரண்டாம் நாயகனாகனுமான சக்தி சரவணன் வழக்கம் போல சில  இடங்களில் வழக்கத்தை விட ஓவராக நடித்தும் இருக்கிறார

பிராணா, மயில்சாமி, டி எம் கார்த்திக், சாம்ஸ், எம்பி முத்துப்பாண்டி, அபி நட்சத்திரா, அருள்தாஸ், மீனாள், எஸ்ஆர் ஜாங்கிட் ஐபிஎஸ் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

 

குடி பழக்கம் எப்படி குடும்பத்தை  கெடுக்கும் என்னும் கதைக்களத்தில் காமெடி, சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களுடன் அசத்தலான கிளைமாக்ஸ் காட்சியுடன் இயக்கிய குட்டிப்புலி ஷரவண சக்தி திரைக்கதையில் கூடுதல் கவனம் செலத்தியிருக்கலாம்.

 

பள்ளி மற்றும் கல்லூரி தோழர்களாக இருக்கும் கிளாஸ்மேட்ஸ் classmates மட்டும் போதும் இந்த கிளாஸ்மேட்ஸ் Classmates மட்டும் வேண்டாம் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறது இந்த கிளாஸ் மேட்ஸ்.
Comments (0)
Add Comment