BreakFast

Rating 3.5/5

a K Vijay Anandh review

கிருத்திக் மோகன் மற்றும் அமிதா ரங்கநாத்தின் , மூன்றே மாத மணமுறிவுக்கு முன்னதான கவுன்சிலிங்கில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. கவுன்சிலிங் கொடுப்பவர் டாகடர் கஸ்தூரி. இருவருக்குள்ளும் இருக்கும் ஒருவர் மறறொருவர் மீது வைத்திருக்கும் காதலை புரிந்துகொள்ளும் அவர், அவர்களுக்கு இன்னொரு காதல் கதையை சொல்லி சிகிச்சை அளிக்கிறார். இறுதியில் இருவரும் பிரிந்தார்களா ? அல்லது அந்த கதையின் தாக்கத்தில் இணைந்தார்களா ..? என்பதே கிளைமாக்ஸ் ஆக இருந்தாலும், அங்கேயும் ஒரு சர்ப்ரைஸ் டிவிஸ்ட் கொடுத்து அசத்திய விதத்தில் , பிரேக் ஃபாஸ்ட், செம்ம டேஸ்ட் கிவிடுகிறது.

ராணவ்ரோஸ்மின் காதல் அழகு , ஒரு கவிதையாக படைக்கப்பட்டிருக்கிறது. தோழியருடன் சேர்ந்து , லேட் ஆனா பீசாவை இலவசமாக வாங்கிக்கொள்வதிலிருந்து , பின் அவனையே தனது கணவனாகவும் தனது கம்பெனிக்கு எம் டி ஆகவும் ஆக்கி அழகு பார்ப்பது வரை , ஒரு காதல் கதையை இவ்வளவு வேகமாக சொல்லமுடியுமா ? என்று வியக்க வைத்திருக்கிறார் இயக்குனர் காந்தி கிருஷ்ணா.

ராணவ்ரோஸ்மின், இருவரும் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். ரோஸ்மின் , நெசமாவே ஒரு படி மேல தான் , வசீகரித்திருக்கிறார்.

அதைப்போலவே , கிரித்திக் மோகன் , அமிதா ரங்கநாத் ஆகியோரில் அமிதா , அசால்டாக ஸ்கொர் செய்து அசத்துகிறார்.

நாயகனின் அம்மாவாக வரும் அர்ச்சனாவும் கலங்க வைத்திருக்கிறார்.

கதை சொல்லும் கஸ்தூரி யார் என்பதை அமிதா கண்டுகொள்ளும் இடமும் அதனைத்தொடர்ந்து வரும் காட்சிகளும் மிக்வும் எமோஷனலாக படமாக்கப்பட்டுள்ளன. கஸ்தூரியும் , அற்புதமாக நடித்திருக்கிறார்.

ஜிவி பிரகாஷ்குமாரின் இசை , எம் வி பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு ஆகியவையும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றன.

கனிகள் கனிவதற்கு சிறிது நேரம் எடுத்துக்கொள்கினறன. சிதைவது நொடிப்பொழுதில் நடந்து விடுகிறது. அதுபோலத்தான் காதலும். அதனை சரியாக புரிந்துகொண்டால் , கேட்டுப்போகாத கனியாக வாழ் நாள் முழுவதும் அன்பை பொழிந்து கொண்டிருக்கும்.

ப்ரேக்ஃபாஸ்ட , இன்றைய தலைமுறை காதலர்களுக்கு ஒரு பாடம் !

Comments (0)
Add Comment