கார்த்தியின் 25 ஆவது படமான ஜப்பான் படத்தின் டிரையலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தமன்னா கோலிவுட்டில் கிடைத்த முதல் நண்பர் கார்த்தி என்று நெகிழ்ந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “கோலிவுட்டில் எனது ஆரம்ப நாட்களில் எனக்கு ஒரு போதும் நண்பர்கள் இருந்ததில்லை. அந்த சமயத்தில் கார்த்தி எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். சென்னையை எனக்கு சிறப்பானதாக ஆக்கியதற்காக ஞானவேல் ராஜா மற்றும் இயக்குநர் சிவா ஆகியோருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இது போன்ற மனிதர்கள் தான் சென்னை எனக்கு சிறந்ததாக இருக்கப் போகிறது என்கிற நம்பிக்கையை அளித்தார்கள். கார்த்தியுடன் பணியாற்றிய சமயத்தில் எப்போதும் சினிமாவைப் பற்றியும் அவருக்கு பிடித்தமான கதாபாத்திரங்களை பற்றியும் தான் பேசிக் கொண்டிருப்பார். அவர் வெற்றிகரமாக 25 படங்களை நிறைவு செய்து விட்டார் என்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இனி அடுத்தடுத்து வரும் படங்களிலும் இதுபோன்று மிகப்பெரிய வெற்றியை அவர் பெறவேண்டும் என நான் வாழ்த்துகிறேன்”என்றார்.