ராம் சரணுக்கு வேல்ஸ் பல்கலை கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது

200

வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி மற்றும் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் (VISTAS) பதினான்காவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் ISRO விஞ்ஞானி வீர முத்துவேல்,  நடிகர் ராம்சரண் ஆகியோருக்கு  டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.

இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) தலைவர் பேராசிரியர் டி.ஜி.சீத்தாராம் கலந்து கொண்டார். பட்டதாரி மாணவர்களுக்கு, தொடர்ச்சியான கற்றல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல், திறன் மேம்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஊக்கமளிக்கும் உரை நிகழ்த்தினார். சமூகத்திற்கு பங்களிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

இளங்கலை பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பிஎச்டி உட்பட மொத்தம் 4555 பட்டதாரிகள் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழாவில் 80 தங்கப் பதக்கங்கள் மற்றும் 100 பி எச்.டி பட்டங்களை மாணவர்கள் பெற்றனர்.

அந்தந்த துறைகளில் வல்லுநர்களின் சிறந்த பங்களிப்பைப் பாராட்டி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அவர்கள் முறையே இஸ்ரோவின் சந்திரயான் -3 திட்ட இயக்குநர் டாக்டர் பி.வீரமுத்துவேல்,  ராம் சரண் கொனிடேலா, திரைப்பட நடிகர், Dr. GSK வேலு, Trivitron Healthcare இன் நிறுவனர் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மற்றும் பத்மஸ்ரீ. ஷரத் கமல் அச்சந்தா, இந்திய தொழில்முறை டேபிள் டென்னிஸ் வீரர ஆவர்.

கெளரவ டாக்டர் பட்டம் வாங்கியது குறித்து ராம்சரண் கூறுகையில், “சென்னை என்றுமே எனக்கு பிடித்த ஊர், இது வாய்ப்புகளின் புகலிடம், எந்த துறையில் சாதிக்கவேண்டுமென்றாலும் அதற்கான வாய்ப்புகளை கொடுக்கும் ஊர். இதே சென்னையில் பிறந்து பள்ளிப்படிப்பை ஆரம்பித்து இன்று அதே சென்னையில் கெளரவ டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறேன், இது என்னுடைய முதல் டாக்டர் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டாக்டர் பட்டத்திற்காக எனது அம்மா ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்… படித்து பட்டம் வாங்குவதாக இருந்தால் எனக்கு மெக்கானிகல் இஞ் ஜினியரிங்கில் பட்டம் வாங்க ஆசை..: என்றார். வேல்ஸ் பிலிம்ஸ் எடுக்கும் படத்தில் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, why not ..? ” என்று பதிலளித்தார். அதையே வேல்ஸ் பல்கலை கழக வேந்தரும் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பாளருமான ஐசரி கே கணேஷ் வழிமொழிந்தார்.

இதே நிகழ்ச்சியில், தமிழ் நாடு பாஜக கட்சியின் மாநில செயலாளர் SG சூர்யா, கார்பரேட் சட்டப்பிரிவில் ஆராய்ச்சி படிப்பினை வெற்றிகரமாக நிறைவு செய்து PHD பட்டம் வாங்கினார். கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற ராம்சரணும், பிஹெச்டி டாக்டர் பட்டம் பெற்று சூர்யாவும் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.