பிடி சாருக்கும் ஆங்கில ஆசிரியைக்கும் திருமணம் செய்துவைத்த

ஐசரி கே கணேஷ்

95

பி டி மாஸ்டர் படம் பற்றி தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் பேசிய போது, “ அறிமுக இயக்குநர் என்றெல்லாம் யோசிக்காமல் கதைக்கு என்ன தேவையோ அவற்றையெல்லாம் வழங்கினோம். பிரபு, கே பாக்யராஜ், பாண்டியராஜ், தியாகராஜன், மதுவந்தி, முனீஷ்காந்த், பட்டிமன்ற ராஜா, தேவதர்ஷினி என்று பெரிய நட்சத்திரப்பட்டாளமே இருக்கிறார்கள்.  இசை இல்லாமலேயே படத்தை பார்த்துவிட்டேன். மிகவும் திருப்தியடைந்தேன். இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் நான் நினைத்தை விட சிறப்பாக எடுத்திருக்கிறார்.  அதன் பரிசாக, இரண்டாவது படம் எங்கள் நிறுவனத்திலேயே இயக்க முன்பணம் கொடுத்துவிட்டேன்.. சிறிது நேரமே வந்தாலும் மதுவந்தி ஒரு முக்கியமான பாத்திரத்தி;ல்  நடித்து அசத்தியிருக்கிறார். காதல், நகைச்சுவை, பொழுதுபோக்கு தாண்டி \படத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை பேசியிருக்கிறோம். அது நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்…” என்றார்.

தொடர்ந்து பேசிய  ஐசரி கே கணேஷ், “பொதுவாக, பி டி மாஸ்டருக்கும் ஆங்கில ஆசிரியைக்கும் ஒரு காதல் மலரும் என்பது ஒரு நம்பிக்கை. நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது, நிஜமாகவே அதை பார்த்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால், எங்களது பி டி மாஸ்டருக்கும் ஆங்கில ஆசிரியைக்கும் திருமணம் செய்துவைத்ததே நான் தான்…” என்று கலகலப்பூட்டினார். மதுவந்தி உள்ளிட்ட பி டி சார் படக்குழுவினர் அனைவரும் மிகவும் ரசித்தனர்.

அறிமுக இயக்கு நர் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ஆதி நடிப்பில் – இசையில் உருவான பி டி சார் வரும் மே 24 ல் வெலியாகிறது.

நிகழ்ச்சியில் ஆதியின் 25வது பட இசையமைப்பை கெளரவிக்கும் விதமாக ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்தினார் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ்.

ஆதியின் 25வது இசையமைப்பை கொண்டாடிய படக்குழு