இந்தியன் || நீளம் குறைப்பு

லைகா அதிரடி , ரசிகர்கள் ஆனந்தம்

202

லைகா தயாரிப்பில், கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில்  “இந்தியன் 2” திரைப்படம் ஜூலை 12 அன்று வெளியானது. யாரும் எதிர்பாராத விதமாக சமூக  வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்கள் வெளிவந்தன.. அவை சாமான்ய ரசிகர்களை திரையரங்குக்கு செல்வதா…?  வேண்டாமா ?,   என்று தயங்க வைத்த நிலையில், படத்தின் அடிப்படையான ” ஊழலை வீட்டில் இருந்து தடுப்போம்… ” என்கிற கருத்து   மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று அவர்களை குடும்பத்தோடு திரையரங்குக்கு செல்ல வைத்தது.

இந்நிலையில், அவர்களுக்கு இன்னும் சிறப்பான அனுபவத்தை தரும் பொருட்டு குடும்பங்களோடு அனைவரும் கொண்டாடுவதற்கேற்ப 11 நிமிடங்கள் 51 வினாடிகள் குறைக்கப்பட்ட புதிய பதிப்பு, இப்போது அனைத்து திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

தயாரிப்பு நிறுவனத்தின் இந்த செயல். நன்றாக வேலை செய்திருக்கிறது. எதிர்மறையான விமர்சனங்களை முறியடித்து, திரையரங்குகள் நிரம்ப ஆரம்பித்து, படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.