AI உதவியுடன் மீண்டும்

நாகூர் ஹனிபா பாடல்

171

 

இசைமுரசு என்று அழைக்கப்படும் நாகூர் E.M ஹனீஃபாவின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு மிகச் சிறப்பாக கொண்டாடி வருகிற வேளையில் அதற்கு மேலும் சிறப்பு சேர்க்கின்ற விதமாக AI தொழில் நுட்பம் மூலம் பதிவு செய்யப்பட்ட நாகூர் ஹனிபாவின் குரலில் உருவான பாடலை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டார்.

வி. ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வழங்க, நேசம் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கும்  ‘ஹபீபி ‘ திரைப்படத்தை இயக்குகிறார் மீரா கதிரவன்.

இந்தப் படத்திற்காக செயற்கை நுண்ணறிவு (A I ) தொழில்நுட்பத்தில் இசைமுரசு நாகூர் E.M ஹனீஃபா அவர்களின் குரலிலில் யுகபாரதியின் வரிகளில் சாம் .C.S இசையில் ஒரு பாடலை உருவாக்கியுள்ள இந்த பாடலை கீழ்க்கண்ட லிங்கில் கேட்டு மகிழலாம்.

பாடலை பட குழு உருவாக்கியது என்றால் செயற்கை நுண்ணறிவு மூலம் நாகூர் ஹனிபாவை இணைத்து ஹபீபி படத்தின் போஸ்டரை இயக்குனரும் ஊடகவியலாளருமான ஐ எஸ் ஆர் செல்வகுமார் உருவாக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.