அரசு செய்யவேண்டியதை அஸ்வத்தாமன் செய்கிறார்

235

-K.Vijay Anandh

ஊர்பற்றியெரிந்து கொண்டிருக்கிறது, ஒரு பக்கம்  தமிழ் நாட்டை ஆளும் திராவிடக்கட்சியின் முதலமைச்சரும் துணைமுதலமைச்சரும் தமிழ்ப்பெரியவர்களையும் குழந்தைகளையும் ரோட்டில் ஆடவைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், கேளிக்கையில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், தமிழை உலகறியச்செய்யும் நோக்கில் சர்வதேசமும் கவனம் பெறும் வகையில் ஒரு சாதனைக்கு வித்திட்டிருக்கிறார் தமிழக பாரதிய ஜனதாவின் மாநில செயலாளரான அஸ்வத்தமன்.

TamilAI, எனும் செயற்கை நுண்ணறிவு செயலிக்கான அறிவிப்பை இன்று வெளியிட்டிருக்கிறார். இந்த நிகழ்வில், மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கலந்துகொண்டு, “ பிரதமர் நரேந்தர மோடி முன்னெடுத்துள்ள ஏ ஐ தொழில் நுட்ப முன்னெடுப்பின் ஒருபகுதியாக அஸ்வத்தாமன் எடுக்கும் இந்த முயற்சிக்கு மத்திய அரசு துணை நிற்கும்… சென்னையில் தயாராகும் வந்தேபாரத் ரயில்பெட்டிகள் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. அதிவேக ரயில்களுக்கு அதிக எடையுள்ள சக்கரங்கள் தேவை, அவற்றை உற்பத்தி செய்யும் ஆலை தமிழகத்தில் அமைக்கப்படும். ..” என்றார்.

மலேசிய தேச ஒற்றுமைக்கான துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி பேசுகையில், “ தமிழர்கள் என்றாலே சமயம், அறம் மற்றும் மறத்தை போற்றுபவர்கள்… சனாதன எதிர்பாளர்களுக்கு மலேசியாவில் இடமில்லை…  மலேசியாவில் இயங்கும் தமிழ்வழிப்பாடசாலைகள் தொடர்ந்து நடைபெறுவதற்காக என்றென்று குரல்கொடுத்துக்கொண்டே இருப்பேன்… அஸ்வத்தாமனின் இந்த முயற்சி பெரியவெற்றி பெறும்..” என்றார்.

ஐரோப்ப நாட்டிலிருந்து செம்ஸ்ஃபோர்டு நகர கவுன்சிலர் பப்பா வெற்றி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும் பொழுது, “ ஒரு இந்தியவம்சாவளியாக மட்டுமல்ல, சர்வதேச சமூத்தினரின் சார்பாக TamilAI  செயலிக்கு எங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். காந்தி தேசப்பிதாவாக இருந்தார். பாரதப்பிரதமர் நரேந்திரமோடி சர்வதேச நாடுகளுக்கும் தந்தையாக மிளிர்கிறார். அவரால், உலகின் பல்வேறு நாடுகளிலும் வசிக்கும் இந்தியர்கள் பெருமை கொள்கிறார்கள், அந்தந்த நாடுகளில் அவர்கள் உரிய மரியாதைகளை பெறுகிறார்கள்…” என்றார்.

TamilAI குறித்து அஸ்வத்தாமன் பேசுகையில், “ ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக தமிழில் தான் இதுபோன்ற செயற்கை நுண்ணறிவு செயலி உருவாகிறது. தமிழகம் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலும் பேசப்படும் தமிழ் வழக்குகளை புரிந்துகொண்டு சரியான தமிழில்  விடைகள் தரும் செயலியாக இந்த செயலி இருக்கும். இன்னும் 11 மாதங்களில் முழுமையடைந்து இந்த செயலி பயன்பாட்டிற்கு வரும். முற்றிலும் இலவசமாக இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.  உலகில் வழக்கில் உள்ள அனைத்து மொழிகளைப் பேசுபவர்களும் அவரவர் தாய்மொழியின் உதவியுடன் தமிழ் கற்றுக்கொள்ள முடியும், இந்த செயலி மூலமாக.  ஏற்கனவே செமிகண்டக்டர் பஸ்ஸை தவறவிட்டுவிட்டோம். AI இல் அந்த தவறு நடக்காது, நாளை இந்த துறையில் உலகை ஆளப்போவது இந்தியாவாகத்தான் இருக்கும்..” என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியாக தமிழர்களின் சாகச கலை நிகழ்ச்சியான மல்லர்கம்பம் மேடையேற்றப்பட்டது. சிறுவர்களும் சிறுமிகளும் அரங்கில் கூடியிருந்தவர்களின் பலத்த கரகோஷங்களுக்கிடையே சாகசங்களை நிகழ்த்திக்காட்டினர்.

பெரிய விளம்பரங்கள் இன்றி இன்று ஐ ஐ டி ஆராய்ச்சிப்பூங்கா வளாகத்தில் நடைபெற்ற TamilAI அறிவிப்பு நிகழ்ச்சியில், திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக பேராசியர், தூத்துக்குடி தொழிலதிபர், தஞ்சாவூர் விவசாயி, திரைப்பட இயக்குனர் கௌரவ், நடிகர் ரவிச்சந்திரன் உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் பல்வேறு துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களும் மாணவர்களும் பொது மக்களும்  கலந்துகொண்டனர்.

அஸ்வத்தாமனின் இந்த மகத்தான முன்னெடுப்புக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் கே அண்ணாமலை, தமாகா தலைவர் ஜிகே வாசன் உள்ளிட பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். துணைத்தலைவர் கரு நாகராஜன் உள்ளிட தமிழக பாஜக நிர்வாகிகள் பலரும் நிகழ்ச்சியில் நேரடியாக கலந்துகொண்டனர்.