Game of Change 

mysixer rating 5/5

162

 

-a  K Vijay Anandh review

Game of Change

பொது ஆண்டுக்கு பின் 4 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை, ஏறத்தாள 800 ஆண்டுகள் உலகின் முதல், மாணாக்கர்கள் தங்கிப்படிக்கும் பல்கலைக்கழகம் என்கி பெருமை பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம் காட்டப்படுகிறது. அதன் பிரமாண்டத்தையும் தொன்மையையும் ரசித்து முடிக்கும் முன், அதுஹ்தியார் கில்ஜி என்கிற கொடுங்கோலனால் சிதைக்கப்படுகிறது. அந்த பல்கலைக்கழக பிரமாண்டமான நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த மருத்துவம் , வானியல், விவசாயம் , அறிவியல், இலக்கியம் ஆகிய துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த லட்சக்கணக்கான ஓலைச்சுவடிகள் எரித்து சாம்பலாக்கப்படுகின்றன. உண்மையில் மனிதகுலத்திற்கே பேரிழப்பு என்றால் மிகையல்ல.

ஆனாலும் , இந்த பாரத தேசம் ஞானத்தின் பிறப்பிடம் அல்லவா ? கடந்த 1200 ஆண்டுகளாக முகலாயனும் கிருத்துவனும் ஏற்படுத்திய பேரழிவுகளைப் புறந்தள்ளிவிட்டு தனது ஞானத்தால் இன்று பிரமாண்டமாக வளர்ந்து நிற்கத்தானே செய்கிறது !

ஒருபக்கம், தேச வளர்ச்சிக்கு அரசு நிர்வாகம் மற்றும் திட்டங்கள் காரணமாக இருந்தாலும் , பல்வேறு துறை சார்ந்த தனி நபர்களின் பங்களிப்புகள் இன்னொரு பக்கம் நம் தேச வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக விளங்குகின்றன.

மாறிவரும் டிஜிட்டல் உலகிற்கு ஏற்ப , அந்த சாதனையாளர்கள் டிஜிட்டல் வழியாக உலகம் முழுவதிலும் இருக்கும் மாணவர்களுக்கு நல்ல கல்வி, அனைவருக்கும் நல்ல இசை , நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறை , அவர்களின் வியாபார அபிவிருத்திக்கு நல்ல ஆலோசனை ஆகியவற்றைழங்கிவருகிறார்கள்.

அப்படிப்பட்ட சாதனையாளர்கள் மற்றும் அவர்கள் செயது கொண்டிருக்கும் பணிகள் ஆகியவற்றை தொகுத்து  கேம் ஆஃப் சேஞ்ச் என்கிற மோட்டிவேஷனல் டாக்குமென்டரியை தயாரித்துங்கியிருக்கிறார்கள் சித்தார்த் ராஜசேகர் மற்றும் மீனா சாப்ரியா.

Internet Lifestyle Hub எனும் நிறுவனத்தை 2018 ல் தொடங்கியவரும் You Can Coach  என்கிற புத்தகத்தின் ஆசிரியருமான சித்தார்த் ராஜசேகர் இந்த டாக்குமென்டரியை மீனா சாப்ரியா உடன் இணைந்து சர்வதேசத்தரத்தில் தயாரித்திருக்கிறார்.

ஹாலிவுட்டை சேர்ந்த பிளயர் சிங்கர் , Success Gyan  நிறுவனர் சுரேந்தர் , பேமிலி பிட்னெஸ் நடத்தும் திநாஷ் , உணவுப்பழக்கத்தின் மூலமே நோய்களை குணமாக்க முடியும் என்கிற நோக்குடன் நல்ல உணவுகளை சாப்பிட மக்களிடையேயும் நல்ல உணவுகளை விளைவிக்க விவசாயிகளிடையேயும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வரும் டாக்டர் பிரபாகர் ராஜ் என்று ஒரு சில முக்கியமான சாதனையாளர்களின் அனுபவமும் சமுதாயப்பங்களிப்புமாய் இந்த டாக்குமெண்டரி விரிகிறது .

சிதின் இயக்கியிருக்கும் இந்த டாக்குமெண்டரிக்கு அவருடன் சேர்ந்து திரைக்கதை எழுதியிருக்கிறார் ஷோம். ஆகாஷ் சேதியின் அற்புதமான ஒளிப்பதிவு , ஸ்ரீராக் ஷாஜியின் மெஸ்மெரிஸம் செய்யும் இசை என்று இந்த டாக்குமென்டரி மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கிறது . கிஷோர் திரிபாதி யின் கலை வெளிப்பாடுகளில் நாளந்த பல்கலைக்கழகம் நம் கண் முன் வந்து நிற்கின்றது.

ஒரு தீ விபத்தில் மோசமாக பாதிக்கப்பட்டு , மீண்டு வந்து பேமிலி பிட்னஸ் கோச்சாக வலம் வந்து கொண்டிருக்கும் திநாஷ், ” தீ எனது புத்தியை அழிக்கவில்லையே ..” என்று கூறுவது போல பஹதியார் கில்ஜி நமது பல்கலை கழகத்தை எரித்திருக்கலாம் , ஆனால் இந்தியர்களின் அறிவை அல்லவே ! அது அணையாமல் பல யுகங்களாக கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு தான் இருக்கிறது , அந்தழமான அகலமானந்தியர்களின் ஞானம் , இந்த உலகத்திற்கு என்றுமே பயன்பட்டுக்கொண்டே இருக்கும் !

Game of Change , a must watch documentary!