மாஸ்டர் மகேந்திரன், ரிஷிகா ராஜ் வீர், ஆர்வி உதயகுமார், லிவிங்ஸ்டன், கும்கி அஸ்வின், கே பி ஒய் சரத் மற்றும் சேது ஆகியோர் நடிப்பில் மெடிக்கல் திரில்லராக உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் பல்ஸ்.
இந்த படத்தை நவீன் கணேஷ் எழுதி இயக்குகிறார். படத்தின் முதல் பார்வையை பிரபு தேவா வெளியிட்ட நிலையில், இசையமைப்பாளர் அபிஷேக் ஏ. ஆர் இசையில் ஜெகன் கவிராஜ் எழுதிய, ஊருக்கு வந்து நல்லா தூங்குங்க என்கிற பாடல் வரிகளுடன் அமைந்த வெயில் என்கிற பாடலை இசை அமைப்பாளர் சாம் சி எஸ் வெளியிட்டு இருக்கிறார்.
தீபாவளி ஐப்பசி அடைமழையில் வெளியான வெயில் பாடல், இணையதளங்களில் சூட்டை கிளப்பி வருகிறது என்றால் மிகையல்ல.