நமீதாவின் நடிப்பு பள்ளி

தொடங்கி வைத்த சரத்குமார்

109

சென்னை விருகம்பாக்கத்தில், நடிகரும் தயாரிப்பாளருமான வீரா – நமீதா நிறுவியுள்ள “FeelGood – School of Acting” பயிற்சி பள்ளியை  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்ததார் சுப்ரீம் ஸ்டார் சரக்குமார்.

தனது வாழ்த்துரையில், “எந்த தொழில் செய்தாலும் அதில் முழுமையாக ஈடுபட்டு சிறப்பாக முன்னேற வேண்டும் என்றால் அதன் அடிப்படை அந்த தொழில் பற்றிய படிப்பினை புரிந்து கொண்டு திறமையை வளர்த்து தேர்ச்சி பெற்று வர வேண்டும்.

நடிக்கும் ஆர்வம் உள்ள புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கும்வகையில், அவர்களை மெருகேற்றிட பல்வேறு பயிற்சி நிலையங்கள் இருந்தாலும், எனது நீண்ட நாள் சினிமா துறை நண்பர்கள் FeelGood பயிற்சிமையம் துவங்கியிருப்பது சிறப்பாக அமைய ஊக்குவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..” என்றார் சரத்குமார்.

Thank you : FB page of Sarath kumar