மச்சி ஒரு குவார்டர் சொல்லு-விலிருந்து தப்பித்த ஜீவா, காப்பாற்றிய தமிழ் நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
எம் ராஜேஷ் இயக்கத்தில் சிவா மனசுல சக்தி படத்தில் வரும் மச்சி ஒரு குவார்டர் சொல்லு என்கிற வசனம், மதுபிரியர்கள் தாண்டி, அனைத்து இளைஞர்கள் மத்தியிலும் பிரபலமாக ஆக்இ, அதுவே ஜீவா செல்லும் இடங்களிலெல்லாம், அவரைப்பார்த்து பலரும் மச்சி ஒரு குவார்டர் சொல்லு எனுமளவிற்கு ஆகிப்போனது. அதுமட்டுமல்லாமல், பலரும் ஜீவா வைப் பார்க்கும் போதெல்லாம், அந்த வசனம் பேச வற்புறுத்திவந்தனர்.
2009 ஆம் ஆண்டு ஒட்டிக்கொண்ட இந்த குவார்டர் சொல்லு வசனம், அவர் சமீபத்தில் 83 படத்தில் இந்தியாவின் அதிரடி ஓபனிங் பேட்ஸ்மேன் ஸ்ரீகாந்த் ஆக நடித்த பிறகும் கூட தொடர்ந்தது. அதிலிருந்து தப்பிக்க முடியாமல், ஜீவாவும் தர்மசங்கடத்திற்கு உள்ளானார்.
இந்த நிலையில், சமீபத்தில் கரூர் சம்பவத்தையடுத்து, “படிச்சு படிச்சு சொன்னாங்களே… ரூல்ஸ பாலோ பண்ணுங்க… ரூல்ஸ பாலோ பண்ணுங்கன்னு..” என்று அழுதுகொண்டே தமிழ் நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியது, சமூகவலைத்தளங்களில் பல கோடி பேரால் கிண்டல் செய்யப்பட்ட வந்தது.
அந்த டயலாக்கை, தனது தலைவர் தம்பி தலைமையில் படத்தின் கிளைமாக்ஸில் சரியான இடத்தில் ஜீவா பயன்படுத்தி இருப்பார், உண்மையில் அதைவிட பொறுத்தமான வசனம் யாராலும் எழுதியிருக்கவும் முடியாது. திடீர் திட்டமாக, தலைவர் தம்பி தலைமையில் படம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு, ஜீவா உள்ளிட்ட படக்குழுவினர் திரையரங்குகளுக்கு விசிட் செய்து வருகின்றனர். அப்படி, செல்லுமிடங்களில், “மச்சி ஒரு குவார்டர் சொல்லு..” என்கிற வசனத்தை மறந்துவிட்டு, “ படிச்சு படிச்சு சொன்னேனேடா..” வை பேசுமாறு ரசிகர்கள் ஜீவாவை வற்புறுத்த, அவரும் ஜாலியாக, அந்த வசனத்தை பேசி ரசிகர்களை மகிழ்வித்துவருகிறார்.
எப்படியோ, மச்சி ஒரு குவார்டர் சொல்லு விலிருந்து, ஜீவாவை அமைச்சர் காப்பாற்றிவிட்டார் என்று பலரும் முணுமுணுத்து வருகின்றனர். ஏன்.. ஜீவாவே அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கக்கூடும் தானே!