பொதுவாக அறிமுக இயக்குனர்கள் , அவர்கள் இயக்கிய பட மேடைகளில் தன்னையறியாமல் அல்லது வெள்ளந்தியாக தங்களைப்பற்றிய சுவராஸ்யமான தகவல்களை மேடையில் வாக்குமூலமாக கொடுத்து விடுவார்கள்.
பிப் 6 ., வெளியாகவிருக்கும் அபிஷன் ஜீவித் , அனஸ்வரா நடிப்பில் உருவான வித் லவ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் மதன் அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசியபோது, ” திருவாருவர் அருகே ஒரு கிராமத்தில் , நிறைமாதக்கர்ப்பிணியாக ஒருவர் துடிக்க ஆரம்பிக்கிறார் …. உடனடியாக அவரை மருத்துமனைக்கு எடுத்துசெல்ல ஏற்பாடு நடக்கிறது … திருச்சியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் அவரது கணவருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது … இரவோடு இரவாக திருவருவர் வந்த அவர் அந்த ஊரில் உள்ள அனைத்து மருத்துவமலைகளிலும் ஏறி இறங்குகிறார்… எங்குமே அப்படி ஒரு கர்ப்பிணிப்பெண் அட்மிட் ஆனதாக தெரியவில்லை …
மருத்துமனைக்கு அழைத்து செல்லும் முன்பே அவசரமாக முந்திக்கொண்டு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துவிடுகிறது … அப்படி அவசரத்துக்கு பிறந்த குழந்தை தான் நான்…
அப்பாவை அலையவைத்த பாவம் தானோ என்னவோ , திரைப்பட கனவை நனவாக்கவும் நிறைய அலைந்து விட்டேன் …
தனியாக படம் பண்ணலாம் என்று முடிவு செய்து ஸ்கிரிப்ட்டுடன் அலைந்து கொண்டிருந்த போது டூரிஸ்ட் பேமிலியில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது… நான் அபிஷந்தின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் பணியாற்றினேன். அப்போது அவர் அந்தப் படத்தில் வேலை செய்து கொண்டிருந்த சமயத்தில், என்னுடைய இந்தக் கதையை வாசித்தார். கதையைப் படித்த பிறகு, ‘ரொம்ப நல்ல ஸ்கிரிப்ட்’ என்று சொன்னார். நான் அவரிடம் இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பீர்களா என்று கேட்டபோது, அதை லைட்டாக எடுத்துக்கொண்டு, ‘கதை நல்லா இருக்கு… ஒரு நல்ல நடிகரை நடிக்க வை’ என்று சொன்னார். அந்த நேரத்தில் அவர் தனது முதல் படத்தின் ரிலீஸுக்காக ஒரு இயக்குநராகவே பெரிய மன அழுத்தத்தில் இருந்தார். அதற்குப் பிறகு, நாயகனைத் தேட ஆரம்பித்தேன். பலரைப் பார்த்தோம்… ஆனால் எதுவுமே சரியாக அமையவில்லை. இதற்கிடையில் டூரிஸ்ட்ஃபேமிலி படம் வெளியானது, அதன்பிறகு அபிஷந்த் ஒரு பெரிய இயக்குநராக உருவெடுத்தார். அதனால் அவரை மீண்டும் அந்த கதாபாத்திரத்திற்காக அணுக கூட எனக்குத் தயக்கமாக இருந்தது. .ஒரு நாள் நான் மனம் தளர்ந்த நிலையில் இருந்தபோது, என் நண்பர் பாலாவை சந்தித்தேன். ஸ்கிரிப்ட்டை மதிப்பிடுவதில் அவரை நான் மிகவும் உயர்வாக மதிக்கிறேன். அவர் என் ஸ்கிரிப்ட்டை வாசித்து, மிகவும் பாராட்டினார். அதே நேரத்தில், ‘இந்த கதைக்கு அபிஷந்த்தான் சரியான தேர்வு’ என்று சொன்னார். அதற்கு நான், ‘இப்போ அவர் பெரிய இயக்குநர் ஆகிட்டாரே’ என்று கூறினேன். அதற்கு பாலா, ‘நான் உன் சார்பாக அவரிடம் பேசுகிறேன்’ என்றார். பாலா பேசினதும், அபிஷந்த் மிக சந்தோசமாக ஒப்புக் கொண்டார். ஆனால், ‘முதலில் மதனுக்கு ஓகேவா கேளுங்க’ என்று பாலாவிடம் சொன்னார். நான் முழு மனதோடு சம்மதம் தெரிவித்தேன்.அபிஷந்தை நாயகனாக முடிவு செய்த பிறகு, தயாரிப்பாளர் மகேஷ் அண்ணாவை சந்தித்து இந்தப் படத்தை தயாரிக்க கேட்டோம். அவர் ஸ்கிரிப்ட்டை மிகவும் ரசித்தார். ஆனால், ‘இந்தப் படத்தை நான் சௌந்தர்யா ரஜினிகாந்த் மேடம் உடன்தான் செய்யப்போகிறேன். அவருக்கு ஸ்கிரிப்ட் பிடித்தால்தான் நான் தயாரிப்பேன்’ என்று கூறினார்.அதற்கு பிறகு, சௌந்தர்யா மேடமிடம் கதை சொல்ல ஆரம்பித்தோம். இரண்டாம் பாதியை நான் சொல்ல ஆரம்பிப்பதற்குள், ‘இந்தப் படத்தை நாம பண்ணலாம்’ என்று அவர் சொன்னது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருந்தது.
நாயகியாக அனஸ்வராவை போடலாம் என்று முடிவு செய்த நிலையில் , நான் அடுத்த இரண்டு மாதம் மட்டுமே பிரியாக இருக்கிறேன் என்று சொல்லிவிட்டார் … அவரது கால்ஷீட்டை பயன்படுத்தி கொள்ளும் பொருட்டு அவசர அவசரமாக இந்த படத்தை ஆரம்பித்து முடித்து இருக்கிறோம் …
மேனேஜர் பிரசாந்த், சுரேஷ் எனக்கு மிக உதவியாக இருந்தார்கள். எல்லோரும் தங்கள் சொந்தப்படம் போல வேலை பார்த்தார்கள். ஷான் ரோல்டன் மிக அற்புதமான இசையைத் தந்துள்ளார். அபிஷந்திற்கு என்னைப் பிடிக்கும், அவர் என்னை உடனே படம் செய்யுங்கள் என ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் எனக்கு மிக நெருங்கிய நண்பராகிவிட்டார்…” என்றார்.
வித் லவ் படத்தை , Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் ஆகியோர் தயாரித்து இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சுதர்ஷன் மதனை மேடைக்கு அழைத்த போது இயக்குனர் மேல கோடு , பிப் 6 அன்று படம் வெளியான பிறகு இயக்குனர் மதன் என்று குறிப்பிட்டது, சுவராஸ்யமாக இருந்தது.
வித் லவ் சம்பந்தப்பட்ட செய்திகள் தொடரும் …