மாற்றத்திற்கு தயாராகும் மதுரை மக்கள்

மத்திய மதுரையில் இறங்கிய, சுந்தரன்!

19

– K Vijay Anandh

2026 தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 23 நடக்கவுள்ள நிலையில், தேர்தலுக்கு இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் போட்டியிடும் பல்வேறு கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஒவ்வொரு சட்டமன்ற தேர்தல்களிலும் திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் போட்டியிடுவது வழக்கம்.

இந்த முறை, நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த நிலையிலும் அவரது கட்சியில் கூட அவரைத்தவிர, நடிகர்கள் யாரும் நிற்பதாக தெரியவில்லை.

அந்த வகையில், திரைப்படத்துறையில் இருந்து போட்டியிடும் ஒரே ஸ்டார் வேட்பாளராக இயக்குநர் , நடிகர், தயாரிப்பாளர் சுந்தர் சி, மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். புதிய நீதிக்கட்சி வேட்பாளராக, போட்டியிட்டாலும் அதன் கூட்டணி தலைமையான அதிமுக வின் இரட்டை இலை சின்னத்திலேயே வேட்பாளராக களம் காண்கிறார்.

இவர் மதுரை மத்திய தொகுதியின் வேட்பாளராக அறிமுகமானதிலிருந்தே, எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் பி டி ஆர் தியாகராஜன், வேறு ஊரில் இருந்து வந்து போட்டியிடுகிறார் என்று பேச, அதற்கு காரசாரமான பதிலடியை யாரும் எதிர்பார்க்காதவண்ணம் சுந்தர் சியும் கொடுத்துவருகிறார்.

அதில் உச்சக்கட்டமாக ” மிஸ்டர் க்ளீன் என்று பெயரெடுத்தால் மட்டும் பத்தாது, தொகுதியையும் க்ளீன் ஆக வைத்திருக்க வேண்டும்…” என்று சுந்தர் சி பதிலடி கொடுக்க, ஊடகங்கள் இவர்கள் இருவரின் வார்த்தை போர்களை, தலையங்கமாக்க, தனது வழக்கமான அமைதியான தெளிவான பதிலடிகளால் சுந்தர் சி, அவரே எதிர்பார்க்காத அளவில் , மதுரை மத்திய தொகுதி வாக்காளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற ஆரம்பித்துவிட்டார்.

பூனைக்கு மணி கட்ட ஒருத்தன் வந்துட்டாண்டா … வந்துட்டாண்டா… என்று மதுரை மத்திய தொகுதி மக்களும் ஆர்ப்பரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இன்னொரு பக்கம், மிஸ்டர் க்ளீன் என்று பெயரெடுத்திருப்பதாக நினைத்து கொண்டிருந்த பி டி ஆர் நினைப்பில் மண்ணை அள்ளிப்போடும் விதமாக அவரின் அழுக்கு பக்கங்களை தோண்டி எடுத்து யூடியூபர் மாரிதாசும் வீடியோக்கள் போட ஆரம்பிக்க, களம் மிகவும் எளிதாக சுந்தர் சி பக்கம் மாறிவிட்டதை பார்க்க முடிகிறது.

ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து யாரையும் காலி செய்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த திமுக விற்கு , சுந்தர் சிக்கு ஆதரவாக , பி டி ஆர் கு எதிராக வரும்  சமூக வலைத்தள பதிவுகளை கட்டுப்படுத்த முடியாமல் விழிபிதுங்கும் நிலை.

மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி தவிர வேறு யார் நின்றிருந்தாலும், பி டி ஆர் இவ்வளவு பதற்றம் அடைந்திருக்கமாட்டார், அவரைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களும் இவ்வளவு வேகமாக வெளிவந்து மக்களை சென்றடைந்திருக்காது என்கிற கருத்து மதுரை மத்திய தொகுதி மக்களிடையே நிலவுகிறது.

தினமும், காலை 7 மணிக்கு பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் சுந்தர் சி, இரவு 10 மணி வரை விறுவிறுப்பாக இயங்குகிறார்.

ஒருபக்கம் அவரது உதவியாளர்கள் பத்ரி, பாரதி மற்றும் நடிகர் விச்சு விஸ்வநாத், பி ஆர் வெங்கடேஷ் ஆகியோர் அவரது நிகழ்ச்சி நிரல்களை கவனித்துக்கொள்ள, களத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் குறிப்பாக அதிமுக நிர்வாகிகள் அவரை வழி நடத்த எல்லாவற்றிற்கும் மேலாக செல்லுமிடமெல்லாம் மக்கள் சுந்தர் சி-  கு மிகப்பெரிய வரவேற்பை அளிக்க எதிரி முகாம் ஆடிப்போய் கிடக்கிறது.

மதுரைக்குள் ஓடும் அழகான நதியான கிருதுமால் நதி, இன்று ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கியிருப்பதோடு, சாக்கடையாக ஓடிக்கொண்டிருக்க, அதை எல்லீஸ் நகர் பகுதிக்கு பிரசாரத்திற்கு சென்ற சுந்தர் சியிடம் மக்கள் முறையிட, ” மதுரை என்றாலே மல்லி தான்… அப்படி  மல்லி மணம் வீச வேண்டிய மதுரையை சாக்கடை நாற்றம் அடிக்க வைத்திருப்பது தான் இதுவரை பதவி வகித்தவரின் சாதனை… என்னை ஜெயிக்க வையுங்கள், இவற்றை நான் சரி செய்கிறேன்… அது மட்டுமல்ல, இந்த தொகுதி மக்கள் யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் என்னை அணுக முடியும் என்கிற நிலையில் தான் நான் இருப்பேன்..” என்று உத்திரவாதம் அளிக்க, மக்கள் மிகவும் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

திமுக தலைவர் ஸ்டாலின் மாதிரி தன்னை நோக்கி வரும் யாரையும், எரிச்சலுடன் இடது கையால் தள்ளிவிடாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மிகவும் அன்பாகவும் கண்ணியமாகவும் நடத்தும் சுந்தர் சி, தேர்தலுக்கு முன்பே அத்தொகுதி மக்களின் மனதில்  எம் எல் ஏ வாக சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

முன்னதாக, தனது கட்சி சார்பாக சுந்தர் சி ஐ மதுரைக்கு வேட்பாளராக  அனுப்பியதோடு மட்டுமல்லாமல், அமித் ஷா எப்படி மேற்கு வங்கத்தில் முகாமிட்டிருக்கிறாரோ அதைப்போல, தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் குடும்பம் சகிதமாக மதுரையிலேயே முகாமிட்டிருக்கிறார் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ சி சண்முகம்.

அவருடன், அவரது கட்சியின் மாநில இணை பொது செயலாளர் வேல் நாகராஜ், இளைஞரணி தலைவர் கோகுல் மற்றும் அவரது காரியதரிசிகள் பலருமாக மதுரையில் முகாமிட்டு மிகவும் தீவிரமாக தேர்தல் வேலைகளை கவனித்து வருகின்றனர்.

மதுரை மத்திய தொகுதியில் ஆரம்பித்த மாற்றத்திற்கான நெருப்பு, அநீதிக்கு எதிராக கண்ணகி பற்ற வைத்த நெருப்பை போல,  மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று ஐந்து தொகுதிகளிலும் காட்டுத்தீயாய் பரவி, எதிரிகளை குலை நடுங்க வைத்து, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்துகொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல!