ரத்னகுமார் கோடு

2

இந்த பிரபஞ்சத்தில் ஏற்கனவே இருப்பது தான் என்றாலும் , ஒருவர் கண்டுபிடிக்காத வரை மற்றவர்களுக்கு தெரியாமால் இருந்திருப்பதை , யாரொருவர் கண்டுபிடிக்கின்றார்களோ, அதன் பிறகு அது அவர்கள் பெயரால் அழைக்கப்படும்.

அந்த வகையில் 29 படம் வெளியானபிறகு மெரினா கடற்கரையில் ரத்னகுமார் கோடு என்று ஒன்று உருவாகக்கூடும்.

விது – பிரீத்தி அஸ்ராணி நடிப்பில் , ஷான் ரோல்டன் இசையில் , ரத்னகுமார் இயக்கத்தில் வரும் மே 8 அம தேதி வெளியாகவிருக்கும் படம் 29. இந்தப்படத்தின் அறிமுக சந்திப்பில் , நாயகன் விது மற்றும் நாயகி பிரீத்தி அஸ்ராணி பங்குபெறும் காட்சி ஒன்று திரையிடப்பட்டது.

மெரினா கடற்கரையில் சந்தித்து கொள்ளும் இருவருக்கிடையில் நடைபெறுவதாக அமைந்த அந்த காட்சியில் , நாயகன் ஒரு குறிப்பிடட இடத்தில் நின்றுகொண்டு காற்றின் ஒலியை அனுபவித்துக்கொண்டு இருப்பான் .

அந்த குறிப்பிடட புள்ளியில் நாயகியை நிற்க வைத்து , ” இதுக்கு அந்தப்பக்கம் என்றால் வாகனரைச்சல் , இந்தப்பக்கம் என்றால் கடல் அலைகளின் சத்தம் , ஆனால் , இந்த குறிப்பிடட புள்ளியில் நின்றால் , காற்றின் ஒளி மட்டுமே கேட்கும் ..”என்று கூறுவான். நாயகியும் அந்த இடத்தில் நின்று அவன் சொல்வதை அனுபவித்து மகிழ்வாள்.

ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் வந்துசெல்லும் மெரினா கடற்கரையில் , இப்படி இடம் இருக்கிறது என்று சோதித்த பார்த்து கண்டுபிடித்திருக்கிறார் இயக்குனர் ரத்னகுமார் , இனிமேல் அது ரத்னகுமார் கோடு என்று அழைக்கப்படலாம்!