தெய்வத்திருமகள்களை கொண்டாடுவோம்! 

Sara Arjun - Zara Zyanna

43

– K Vijay Anandh

தமிழ்த்திரையுலகில், ஒவ்வொரு காலகட்டத்திலும் குழந்தை நட்சத்திரங்களாக பலர் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துக்கொண்டும் தான் இருக்கிறார்கள்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முதல் படத்திலேயே பிரபலமடைந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால், சட்டென்று நமக்கு நினைவுக்கு வருவது களத்தூர் கண்ணம்மா குட்டி கமல்ஹாசன் தான்.  குட்டிபத்மினி, ஶ்ரீதேவி, சுஜிதா,  பேபி ஷாலினி, அஞ்சலி பாப்பாவாக ஷாமிலி முதல் காகா முட்டை, பசங்க படத்திற்காக தேசிய விருது பெற்ற பல குழந்தை நட்சத்திரங்களை நாம் திரைப்படங்களில் பார்த்து ரசித்திருக்கிறோம். என்னை அறிந்தால் படத்தில் அஜீத்குமாரின் மகளாக வந்த  அனிகா சுரேந்திரன்.

இவ்வளவு ஏன் இன்றைய தமிழ்நாடு முதல்வர் விஜய் கூட குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான்.

அந்த வரிசையில்,  தமிழ் சினிமாவில் அறிமுகமான  இந்த சாராக்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். 2011 இல் விஜய் இயக்கத்தில் தெய்வத்திருமகள் படத்தில்  விக்ரமின் மகளாக அறிமுகமான Sara Arjun. 2022 – 2026 இல் செல்ல அய்யாவு இயக்கத்தில் வெளியாகியிருக்கும் கட்டா குஸ்தி  இல் விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி தம்பதியரின் மகளாக நடித்திருக்கும் Zara Zyanna.

இந்த 15 வருடங்களில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமானாலும், தாங்கள் அறிமுகமான முதல் படத்திலேயே தங்களது அழகால் மட்டுமல்ல, அற்புதமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் நிச்சயமாக இந்த இரண்டு சாராக்களும் தான்.

தெய்வத்திருமகள்களை கொண்டாடுவோம்!