திடீரென்று ரசிகர்களை சந்தித்த சூர்யா

விஜய் வரவால் ஏற்கனவே அரசியல் களத்தில் காணாமல் போன கட்சிகள் பீதி

8

– K விஜய் ஆனந்த்

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற  சூர்யா ரசிகர்களின் Photoshoot!

அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற Photoshoot நிகழ்வில் 25 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,000 ரசிகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ரசிகர்களை சந்தித்த சூர்யா அவர்கள், ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களின் நலன் குறித்து விசாரித்ததுடன், ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்பை முதன்மையாகக் கருதி, ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்றும் அன்புடன் அறிவுறுத்தினார்.

சூர்யா அவர்களின் இந்த எளிமையான அணுகுமுறையும், ஒவ்வொரு ரசிகரையும் தனிப்பட்ட முறையில் கவனித்துக்கொண்ட விதமும் அங்கு திரண்டிருந்த ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

60 ஆண்டுகளாக இரு கழகங்களும்  மாறி மாறி ஆண்ட தமிழகத்தில், அந்த இருவரைத்தவிர வேறு யாரும் இங்கே ஆட்சிக்கு வரமுடியாது என்கிற நம்பிக்கையை மூட நம்பிக்கை என்று உணர்த்தும் விதமாக, நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து ஒரே ஆண்டில் ஆட்சியை பிடித்த  சி ஜோசப் விஜயின்  எழுச்சி ஒட்டுமொத்த திரைத்துறையினருக்கும் ஒரு பெரிய உத்வேகத்தையும்  நம்பிகையையும் தந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

117 என்கிற பெரும்பான்மை இடங்களை  கைப்பற்ற  முடியாவிட்டாலும், 108 போதும் என்கிற அளவிற்கு திமுகவால் வஞ்சிக்கப்பட்ட  கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையும் இடம் கொடுத்து எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆட்சி நடத்தி வருவதைப் பார்த்த பலரும் மிகவும் ஆச்சிர்யமாக இதனை உற்று கவனிக்கிறார்கள். அந்த வகையில், ஆரம்பம் முதலே விஜய் போன்றே , தனது ரசிகர் மன்றங்கள் மூலம் மக்களுக்கு இயன்றளவு சேவை செய்து வரும் நடிகர்கள் அடுத்தடுத்து அரசியலில் குதிக்க தயாராகிவிட்டார்கள். இவர்களில் தனுஷ் முந்திக்கொண்டு, ரசிகர்களை சந்தித்து, கொடியையும் அறிமுகப்படுத்திவிட்டார்/

அந்த பரபரப்பு அடங்குவதற்குள், இதோ சூர்யாவும் களத்தில் இறங்கிவிட்டார். அகரம் பவுண்டேஷன் மூலம் இத்தனை ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான ஏழை மானவர்களின் கல்விக்கு பெருந்தொன்று ஆற்றியிருக்கும் சூர்யா, பொது வாழ்க்கைக்கு மிகவும் தகுதியானவராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் என்றால் அது மிகையல்ல.  இதோ, சூர்யாவும் , தனது ரசிகர்களை சந்தித்து தனிப்பட்ட முறையில் கருத்துகேட்டிருக்கிறார், அவர்களுடன் மனம் விட்டு பேசியிருக்கிறார்.

தனிப்பட்ட முறையில் எனது கணிப்பு, வரும் தேர்தலுக்குள் இன்னும் சில  தனிக்கட்சி ஆரம்பிக்கலாம், இதுவரை தனது ரசிகர்களை  தனக்காக அரசியலில் ஈடுபடுத்த விரும்பாத அஜித்குமார் கூட ,  தனது நண்பர் சி ஜோசப் விஜய்க்கோ அல்லது சூழல் கருதி வேறு யாருக்கோ பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்கலாம்.

அதிகளவில் கட்சிகளும், தலைவர்களும் உருவாவது நல்லது தானே!