பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, சென்னையில் அதன் முதல் விவாத நிகழ்வான மைத்ரி: பெண்களுக்கான முதல் பிரத்தியேக நிகழ்ச்சியினை வெளியிட்டது!

89

மும்பை, இந்தியா:

இந்தியாவில் திரை ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, சென்னையில் அதன் முதல் விவாத நிகழ்வான மைத்ரி: பெண்களுக்கான முதல் பிரத்தியேக நிகழ்ச்சியினை வெளியிட்டது. பொழுதுபோக்கு துறையில் பெண்களுக்கான சுதந்திரமான வெளியினை உருவாக்குவதன் நோக்கத்தில் கடந்தாண்டு துவங்கிய இந்த செயல்பாட்டில், இந்திய ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த பெண்கள் ஒன்று கூடி அவர்களின் அனுபவங்கள், சவால்கள் மற்றும் வெற்றிகளைப் பற்றி விவாதித்தனர், மேலும் இத்துறையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான அவர்களின் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில் இந்தியப் பொழுது போக்கு துறையில், ஆதிக்கம் செலுத்தும் முன்னணி பெண் ஆளுமைகளான ஐஸ்வர்யா ராஜேஷ், மாளவிகா மோகனன், மது போன்ற விருது பெற்ற நடிகர்கள் முதல், படைப்பாளி, எழுத்தாளர், என முத்திரை பதித்த பெண்கள் வரை இந்தியாவின் பல்வேறு பொழுதுபோக்குத் துறைகளைச் சேர்ந்த எட்டு பிரபல பெண்கள் இந்த அமர்வில் கலந்து கொண்டனர். ஷோரன்னர் மற்றும் தயாரிப்பாளர் ரேஷ்மா கட்டாலா, எழுத்தாளர் மற்றும் இயக்குநர் சுவாதி ரகுராமன், மற்றும் ஒளிப்பதிவாளர் யாமினி யக்னமூர்த்தி, அபர்ணா புரோஹித், கிரியேட்டர் – மைத்ரி & இந்தியா ஒரிஜினல்ஸ், பிரைம் வீடியோவின் தலைவர் மற்றும் ஸ்மிருதி கிரண், மைத்ரி & நிறுவனர், போல்கா டாட்ஸ் லைட்பாக்ஸின் படைப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர். .

இந்த  அமர்வின் சிறப்பம்சங்கள் இப்போது மைத்ரியின் YouTube சேனலில் வெளியானது.

இந்நிகழ்வினில் தனிப்பட்ட நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்ட, பங்கேற்பாளர்கள் திரைப்படத் துறையில் தற்போதுள்ள பாலின இயக்கவியல், பெண் தொழில் வல்லுநர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், ஸ்டீரியோடைப், வண்ணம், வயது வித்தியாசம் மற்றும் பலவற்றைப் பற்றி விவாதித்தனர். ஆச்சரியப்படும் விதமாக, பெண்கள் கேமராவுக்கு முன்னால் அல்லது அதற்குப் பின்னால் பணிபுரிந்தார்களா.? அல்லது தயாரிப்பில் அல்லது கார்ப்பரேட் பாத்திரங்களில் பணிபுரிந்தார்களா..? என்பதைப் பொருட்படுத்தாமல், பிரச்சினைகள் எவ்வாறு ஒரே மாதிரியாக இருந்தன என்பதைக் குறிப்பிட்டனர். முக்கிய விவாதமாக பெண்ணியம் மற்றும் அதிகாரமளித்தலின் உண்மையான சாராம்சமும் இடம்பெற்றது. பாலின சமத்துவம் என்பது உண்மையில் என்ன? அதற்கான அர்த்தம் என்ன? என்பதும் விவாதிக்கப்பட்டது.  அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒரு சுவாரஸ்யமான விசயம்  என்னவென்றால், தொழிலில் ஒரு குறிப்பிட்ட பாத்திரம்  அல்லது வேலையை.. பெண் சார்ந்த அல்லது ஆண் சார்ந்ததாகக் குறிப்பதை நிறுத்தும்போது  மட்டுமே உண்மையான சமத்துவத்தை அடைய முடியும்.  பெண்களின் வயது அவர்களின்  தனிப்பட்ட மற்றும் தொழில்சார் வளர்ச்சித் திறனை பெரும்பாலும் கட்டுப்படுத்துகிறது, மேலும் அது ஒருவரின் வீடு மற்றும் சமூகச் சூழலில் இந்த கருத்து முழுமையாக உள்வாங்கப்பட்டால் மட்டுமே மாற்றம் நிகழும்  என்பதைக் குழு முழுமையாக ஒப்புக்கொண்டது.

பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதில், அவர்களின்  வயது, உடல் அளவு, தோல் நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் புதிய வாய்ப்புகளை உருவாக்கி, படைப்பாளிகள் அனைத்து வகையான தனித்துவமான கதைகளையும் கூறுவதில் ஸ்ட்ரீமிங் தளங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதையும் இந்த உரையாடல் எடுத்துக்காட்டியது.

“சமமான பிரதிநிதித்துவம் என்பது  உத்வேகம் மிக்க  இளம் பெண்களுக்கு ஒரு புதிய உலகத்தைத் திறக்கிறது, மேலும்  பெண்கள் பல நிலைகளில் செல்வாக்கு  கொண்டிருப்பது மிகவும் முக்கியமானது, அத்தகைய தளங்களில் இது மேலும் பல பெண்களுக்கான  புதிய வாய்ப்பினை வழங்கும்“ என்று  கூறினார் அபர்ணா புரோஹித், கிரியேட்டர்  – மைத்ரி & இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர், பிரைம் வீடியோ மேலும் அவர் கூறுகையில்… “மாற்றம் என்பது படிப்படியான செயல் என்பதை நாங்கள் அறிவோம். எனவே, நாடு முழுவதும் இந்த விவாதங்களைத் தொடர்ந்து நடத்துவது எங்களுக்கு முக்கியம், மேலும் எங்களது முதல் அமர்வைச் சென்னையில் நடத்தியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஒரு வருடமே ஆன போதும், மைத்ரி நிகழ்வு சரியான திசையில் மாற்றத்தைச் செலுத்தி இருக்கிறது. படைப்பாளிகள்  தங்கள் படைப்புகளை எழுதும் போதோ அல்லது திட்டமிடும்போதோ.. பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் பற்றி உரையாடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதுபோன்ற உரையாடல்களை அடிக்கடி நடத்த வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பேசிய மைத்ரியின் படைப்பாளரும், போல்கா டாட்ஸ் லைட்பாக்ஸின் நிறுவனருமான ஸ்மிருதி கிரண் கூறும்பொழுது.., “பெண்கள் எந்த அச்சமும் இல்லாமல் தங்களுக்கான குரலை வீரியமாக எழுப்பக்கூடிய  மறுக்க முடியாத தேவை உள்ளது. பெண்கள் தங்கள் அனுபவங்களைத் தயக்கமின்றி பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் சூழலை உருவாக்குவது, தொழில் அல்லது சமூக நிலைகளில் எந்த மாற்றத்தையும் செயல்படுத்துவதற்கான முதல் படியாகும். இதனால்தான் நாம் உரையாடலை இடைவிடாமல் தொடர வேண்டும். மைத்ரி  இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது, நாளை இந்தியாவின் வேறொரு பகுதியில் நடக்கும்” என்று சிலிர்க்கிறார். உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு மூலம்  பல்வேறு மாநிலங்களில் உள்ள பெண்களைத் தொடர்ந்து இணைப்போம்.

பிரைம் வீடியோ அதன் உள்ளடக்கம் மற்றும் தயாரிப்புகள் மற்றும் படைப்பாற்றல் சமூகத்தில் அதன் கூட்டாளிகளுடன் பன்முகத்தன்மை, சமநிலை மற்றும் உள்ளடக்கத்தை (DEI) மேம்படுத்துவதில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது. Maitri: Female First Collective உடன், பிரைம் வீடியோ பொழுதுபோக்கு துறையில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.