ஆரிக்கு Go, விஷாலுக்கு No சொன்ன தயாரிப்பாளர்

86

– K Vijay Anandh

பி மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நடித்த ஒரு நொடி படமும், ஹரி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் ரத்னம் படமும் ஒரே நாளில் அதாவது வரும் ஏப்ரல் 26 ல் வெளியாகின்றன.  ஒரே நாளில் வெளியாகவிருக்கும் இந்த இரு படங்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்பும் கடந்தவாரம் ஒரே நாளில் நடந்தன.

ஒரு நொடி நிகழ்ச்சியில் நடிகரும் சமூக ஆர்வலருமான ஆரி அர்ஜுனன் கலந்து கொண்டு, தேர்தலில் ஓட்டளிப்பவர்களுக்கு கோவிட் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படுவது போல சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என்று பேசினார். ஒரு நொடி திரைப்படத்தை வெளியிடும் கிரியேட்டிவ் எண்டெர்டெயின்மெண்ட் தனஞ்சயன் இறுதியாக பேசவந்தபோது, “ மிகவும் சரளமாக 25 நிமிடங்களுக்கு மேல், சமூகப்பிரச்சினைகளை பேசி ஆரி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். அவர், பேசாமல் அரசியலுக்கு சென்று விடலாம்…” என்றார்.

அந்த நிகழ்ச்சி முடிந்து ஒரு மணி நேர இடைவெளியில் விஷாலின் ரத்னம் பட விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தனஞ்செயன், “ விஷால், இப்பொழுது தான் மார்க் ஆண்டனி வெற்றியின் மூலம் 100 கோடி வசூலை தொட்டிருக்கிறார். தொடர்ந்து அவர் 200, 300, 500 என்று தொடவேண்டும்… அதற்கு தொடர்ந்து நடிக்க வேண்டாம். அவர் அரசியலுக்கு செல்லக்கூடாது..” என்றார்.

ஒரு மணி நேர இடைவெளியில் ஒரு நடிகர் ஆரியை அரசியலுக்கு சென்றுவிடுங்கள் என்றும் இன்னொரு நடிகர் விஷாலை அரசியலுக்கு செல்லவேண்டாம் என்று சொல்கிறாரே தனஞ்செயன் என்று இரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் வியப்படந்தனர்.