இம்ப்ரஸ் செய்யும் கவிதா S

இவர் ஒரு இன்ஸ்பிரேஷனும் கூட...

254

தனியார் இணையதளத்தில் பத்திரிக்கையாளராக தனது பணியை ஆரம்பித்த எஸ் கவிதா படிப்படியாக முன்னேறி இன்று மிகப்பெரிய நாளிதழ் ஒன்றில் திரைப்பட பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். இந்த பயணத்தில் அவர் குறும்படங்கள் தயாரித்தல்,  ஆவண படங்கள் தயாரித்தல்,  இசை ஆல்பம் தயாரித்தல் என்று படிப்படியாக முன்னேறி இன்று ஒரு முழு நீள திரைப்படம் தயாரிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்.

நடுவில் இவர் இல்லாத திரைப்பட விழா மேடைகளே  இல்லை எனும் அளவிற்கு, அனைவருக்கும் பிடித்தமான நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வருகிறார்.  சம்பந்தப்பட்ட படங்களின் குழுவினரை அவர் பிரபலமானவராக இருந்தாலும் சரி அல்லது புதுமுகமாக இருந்தாலும் சரி அழகு தமிழில் இவர் வர்ணித்து பேச அழைக்கும் பொழுது அழைக்கப்படுபவர்களுக்கு ஒரு புது உற்சாகம் பிறக்கும் என்றால் மிகையல்ல. நிறைய சாதித்தும் உரிய அங்கீகாரம் கிடைக்காத கலைஞர்கள் இவர் பேசும் அந்த நான்கு வார்த்தைகளை அங்கீகாரமாக நினைத்துக் கொண்டு நெகிழ்வதும் உண்டு.  அறிமுக கலைஞர்களாக மேடை ஏறுபவர்கள் இவரது வார்த்தைகளில் புது உற்சாகம் பெற்று நிறைய சாதிக்க வேண்டும் என்கிற தன்னம்பிக்கை பெறுவதும் உண்டு.

திரைப்படத்துறையில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு படிப்படியாக முன்னேறி உச்சத்தை தொட முடியும் என்பதற்கு – கலைத்துறையில் அடியெடுத்து வைக்கும் புதியவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக வலம் வருகிறார் கவிதா எஸ் என்றால் அது மிகையல்ல.

இவரது Impress Films வாயிலாக வரும் படைப்புகள் பலரையும் Impress செய்யட்டும்!