குருநாதர் கொடுத்த கொடை

ரெட்ட தல டைட்டில்

180

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு, அருண் விஜய் நடிக்கும் “ரெட்ட தல” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பிரமாண்டமாக நடந்த நிகழ்வில் ரெட்ட தல முதல்பார்வையை இயக்குநர் மோகன் ராஜா வெளியிட்டார். ரெட்ட  தல படத்தை  மான் கராத்தே, கெத்து இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார்.

டைட்டில் மற்றும் முதல்பார்வை குறித்து இயக்குநர்க் கிரிஷ் திருக்குமரனிடம் கேட்டபோது, “தயாரிப்பாளர், ஃபர்ஸ்ட் லுக் தனித்துவமாக இருக்க வேண்டும் எனச் சொன்ன போது, ஒரு கான்செப்ட் வைத்து உருவாக்கலாம் என இந்த ஐடியாவை அருண் விஜயிடம்  சொன்னேன். இரண்டு மிருகங்கள் ஒன்றை ஒன்று அடித்து சாப்பிட நினைக்கிறது அது தான் கரு என்றேன். எல்லோருக்கும் பிடித்திருந்தது. பாபி சார், மனோஜ் சார் எவ்வளவு செல்வானாலும் பராவாயில்லை, இதைத்தான் எடுக்கனும் என்றார்கள். அருண் விஜய் உடம்பை வில்லாக வளைத்து, இதற்காக உழைத்துள்ளார்..எங்களது கடின உழைப்பு வீண்போகவில்லை…. முதல்பார்வையை பார்த்த அனைத்து தரப்பினரும் பாராட்டினர்…. அருண் விஜய்க்கு இது ஒரு மைல்கல் படமாக இருக்கும்…” என்றார்.

இந்த டைட்டில் உங்களது குரு நாதருடையதாமே என்று கேட்டபோது, “ ஆமாம்… உண்மையில் என் கதைக்கு நான் வைத்திருந்த டைட்டில் வேறு…. அந்த டைட்டிலை தயாரிப்பாளரிடம் சொன்னபோது, வேறு ஏதாச்சும் வைத்திருக்கின்றீர்களா என்று கேட்டார்… ஏ ஆர் முருகதாஸ் இன் அனுமதி இல்லாமலே அவர் வைத்திருந்த ரெட்ட தலை எனும் இந்த டைட்டிலை சொன்னேன்… இதை எப்படியாவது வாங்குங்கள் என்று தயாரிப்பாளர் சொல்லிவிட்டார்… அதே நேரத்தில் ஏ ஆர் முருகதாஸ்இன் பிறந்த நாள் வந்தது… கேக்கை கட் செய்து ஊட்டிவிட்டு சார் உங்க ரெட்ட தல டைட்டில் வேண்டுமென்றேன்… அவரது பிறந்த நாள் பரிசாக எனக்கு அதை கொடுத்துவிட்டார்…. என் குருவிற்கு நன்றி..” என்றார்.

ஓவர் நைட்டுல ரெட்ட்  தல ஆகிட்டீங்களே என்று அருண் விஜயிடம் கேட்டபோது, “ தமிழகத்தில் இரண்டு தல, ஒன்று அஜித் இன்னொன்று தோனி… நிஜமாகவே இந்த டைட்டில் எனக்கு கிடைத்த போது மிகவும் மகிழ்ந்தேன்… அவர்களின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, நான் அனைவருக்குமே பிடித்தமானவனாகவே இருக்கின்றேன்… சமூகவலைத்தளங்களில் எனது ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவர்களது ரசிகர்களுன் ரெட்ட தல முதல்பார்வைக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். வழக்கமாக ஒவ்வொரு படத்திற்கும் செய்கிற மெனக்கெடல்களுடன் இந்த டைட்டிலுக்கு நியாயம் சேர்க்கவேண்டும் என்பதற்காக கொஞ்சம் அதிகமாகவே உழைக்கத்தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறேன்..” என்றார்.