நம்ம அத்தாச்சியா இது !

ஆடிப்போன ரசிகர்கள்

551

– K. Vijay Anandh

எதுக்குமே லாயக்கில்லாதவர்கள் தான் சினிமாத்துறைக்கு  போவார்கள் என்கிற ஒரு மூடநம்பிக்கை என்றும் நம் சமூகங்களில் நிலவி வருகிறது. ஆனால், இன்றைய தேதியில் பி ஏ , பி டெக்,  ஏன் ஏரோநாட்டில் இன்ஜினியரிங் படித்துவிட்டு கூட திரைப்படத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதற்காக வந்து இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி கும்பகோணம் இதயா கல்லூரியில் BA ஆங்கில இலக்கியம் படித்த கையோடு நடிப்பதற்காக சென்னைக்கு வண்டி ஏறிய தஷ்மிகாவை பற்றி தெரிந்து கொண்ட பொழுது நிறைய ஆச்சரியங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

” ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை முடித்தாலும், தமிழின் மீது எனக்கு தீராத ஆர்வம், தமிழ் சினிமாவின் மீதும் .ஒரு நல்ல நடிகையாக பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன் … வாய்ப்பு தேட ஆரம்பித்து 11 வருடங்கள் ஆகிறது … இதற்கு முன் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் இந்த வருடம் வெளியான வெப்பம் குளிர் மழை மற்றும் ஒரு தவறு செய்தால் ஆகிய இரண்டு படங்கள் என்னை  ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியுள்ளன. அதிலும், வெப்பம் குளிர் மழை படத்தில் இரண்டு மூன்று காட்சிகளை வந்தாலும் அத்தாட்சி அத்தாட்சி என்று ரசிகர்களும் என்னை அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்….” என்கிற தஷ்மிகா தொடர்ந்து, ” இந்த வருடம் எனக்கு சிறப்பான தொடக்கமாகவே அமைந்திருக்கிறது. ஜூன் மாதம் வெளியாகவிருக்கும் இந்தியன் 2 ல் நடித்திருக்கின்றேன் … இரண்டு மலையாள படங்கள் நடிக்கவிருக்கிறேன் … ” என்று முடித்தார்.

மலையாள படங்களில் கவர்ச்சியாக நடிக்கிறீர்களாமே என்று கேட்ட பொழுது, ” ஆம் கதைக்கு முக்கியத்துவம் என்றால் நடிப்பதில் தவறில்லை. அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் தஷ்மிகா தான் என்று தேடி வருகிறார்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது தானே முறை… ” ஆனால் தமிழில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்திலே மட்டுமே நடிக்க ஒத்துக்கொள்கிறீர்களாமே என்று கேட்ட போது , ” தமிழிலும் கதைக்கு தேவைப்பட்டால் ஒரு கண்ணியமான கவர்ச்சி காட்டத் தயார் … ஆனால், அப்படிப்பட்ட நடிகர்களுக்கு ரசிகர்கள் கொடுக்கும் மரியாதையில் மிகக் குறைந்த அளவே நடிக்க அணுகுபவர்கள் கொடுக்கும் பொழுது ஏற்றுக்கொள்ள தயக்கமாக இருக்கிறது … எங்களுக்கும் பொருளாதார தேவைகள் இருக்கத்தானே செய்கின்றது ….” என்று ஆதங்கப்பட்டார்.

கதை கவிதைகள் கட்டுரைகள் எல்லாம் எழுதுவீர்களாமே  என்று கேட்ட பொழுது, ” ஆம் ஆம் பல எழுதி இருக்கிறேன் எழுத்தின் மீது நான் கொண்ட ஆர்வம் மற்றும்  எனக்குள் இருக்கும் குறைந்தபட்ச திறமை ஆகியவை நான் நடிக்கும் படங்களில் எனது கதாபாத்திரத்திற்கு தேவையான வசனங்களை இன்னும் கொஞ்சம் மெருகேற்றிக் கொள்ள உதவுகிறது. இயக்குனர்கள்  அனுமதியுடன் எனக்கான வசனங்களை மெருகேற்றிக் கொள்ளவும் செய்கிறேன். என்னால் முழு படத்திற்கும் வசனங்களும் எழுத முடியும்… இப்போதைக்கு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன் அனைத்து மொழி படங்களிலும் நடிக்க வேண்டும் ….” என்றார்.

மலையாள படங்களில் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தாலும் தமிழில் குயிலி என்ற பெயரில் மதுவிற்கு எதிரான ஒரு புரட்சி செய்யும் போராளி பெண்ணாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் வெளியான இவரது கவர்ச்சி  புகைப்படங்களை பார்த்த, ரசிகர்கள் அட இது நம்ம அத்தாட்சியாடா…. என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம் !!