அதிரடி ஆதிவாசிப்பெண்ணாக அஷ்வினி நடிக்கும், கன்னி

மே 17 முதல் திரையரங்குகளில்

18

சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம் .செல்வராஜ் தயாரிப்பில் இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘கன்னி’. இப்படத்தில் அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா க்ரிஷ், ராம் பரதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ராஜ்குமார் ,இசை செபாஸ்டியன் சதீஷ். மே 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் முன்னோட்ட நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய…

அஷ்வினி சந்திரசேகர், “அடர்ந்த காட்டின் நடுவே உயரமான ஜவ்வாது மலை உச்சியில் அமைந்துள்ள எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாத கிராமத்தில் கன்னி படத்தின் படப்பிடிப்பு நடந்தது. ஒவ்வொரு நாளும் லொகேஷன் செல்வதற்கே அரை நாள் தேவைப்பட்டது. ஆகவே, அங்கேயே டெண்ட் அடித்து தங்கி படப்பிடிப்பை நடத்தினோம்…. நாயகியை மையமாக வைத்து படங்கள் வந்திருக்கின்றன. ஆனாலும், அதில் அவர்களுக்கு நாயகன் என்று ஒருவர் வருவார். ஆனால், முழுக்க முழுக்க ஜோடியே இல்லாமல் நாயகியை மையமாக வைத்து இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு குறுகிய காலத்தில் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை… கடினமாக உழைத்திருக்கிறோம்… ரசிகர்கள் நிச்சயம் இப்படத்தை வெற்றிபெறச்செய்வார்கள்..” என்றார்.

கே ராஜன், “ கதைக் கரு  தமிழ்ப் பாரம்பரியம், தமிழ்க் கலாச்சாரம் தமிழ்ப் பண்பாடு ,சித்த வைத்தியம் அனைத்தையும் உள்ளடக்கியது. அப்படிப்பட்ட  அற்புதமான கருவைவைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்.ஒரு காலத்தில் சித்த மருத்துவம் சிறந்து விளங்கியது. பிறகு யாரும் ஏறெடுத்து பார்க்காமல் அலோபதிக்குச் சென்றார்கள்.தலைவலி என்றால் காலுக்கு எக்ஸ்ரே எடுப்பான்.ஏனென்றால் அவனது எக்ஸ்ரே மிஷின் சும்மா இருக்கக் கூடாது.பல டாக்டர்கள் படித்துவிட்டு கோடீஸ்வரர் ஆகி விட்டார்கள். சித்த மருத்துவத்தின் சிறப்பு கொரோனா காலத்தில்தான் தெரிந்தது.அப்போதுதான் படித்தவன், படிக்காதவன் அத்தனை பேரும் அலோபதியை விட்டு விட்டுச் சித்த மருத்துவத்திற்குப் போனார்கள்.சித்த மருத்துவம் தான் பக்கவிளைவுகள் இல்லாதது .ஒரு மரத்தின் இலை, பூ, காய் ,கனி அனைத்தும் மருந்தாகும். அது சத்து தானே தவிர பக்க விளைவுகள் இல்லாதது.இப்பொழுதுதான் சற்று விழிப்புணர்வு வந்துள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் சித்த மருத்துவம் இன்னும் சிறந்து விளங்கும்.அந்த விஷயத்தை இந்தப் படத்தில் அற்புதமாகச் சொல்லி இருக்கிறார் இயக்குநர் சிவா. தமிழ் பண்பாடு சித்த மருத்துவம் பற்றிச் சொல்லியிருக்கும் இந்த ‘கன்னி’  படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.