ஒத்த ஓட்டு முத்தையா

2.5/5

143

a K Vijay Anandh review

கலைஞனுக்கு வயது இல்லை, அவன் ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரத்திற்கும் கலைஞனின் வயதிற்கும் சம்பந்தமில்லை.

ஒத்த ஓட்டில் வெற்றியை பறிகொடுக்கும் வாக்காளர்களுக்கு கேள்விப்பட்டிருக்கிறோம் இந்த முத்தையா ஒரு தேர்தலில் வாங்கிய ஓட்டே ஒன்றே ஒன்றுதான்.அதனால் தான, அவர் ஒத்த ஓட்டு முத்தையா .

இரண்டு கழகங்களையும் சகட்டுமேனிக்கு கலாய்த்து தள்ளி இருக்கிறார் கவுண்டமணி. ஒரு கட்டத்தில் அவரது வசனமே அவருக்கும் பொருந்தி போகிறது.வாங்குற அஞ்சு பத்துக்கு இதெல்லாம் தேவையா என்பது போல, சம்பந்தமே இல்லாமல் அடிப்படையே தெரியாமல் தணிப்பூர் என்று தேசிய அளவில் மூக்கை நுழைத்து இருக்கிறார்.

அவருக்கு மூன்று மகள்கள் என்று இருந்திருக்கலாம் ஆனால் மூன்று தங்கைகளாம். அவர்களுக்கு ஒரே வீட்டில் பிறந்த மூன்று சகோதரர்களாக மாப்பிள்ளை பார்க்கும் படலம்  கலகலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆர் கே நகர் என்பது போன்ற ஒரு ஜி கே நகர் இடைத்தேர்தல், அந்த சம்பவங்களை எல்லாம் தமிழகம் தமிழக வாக்காளர்கள் மறந்து விட்டார்கள்.   இன்றைய தலைமுறைக்கு நினைவு படுத்தக் கூடாத சம்பவங்கள். அத்துடன் கூவத்தூர் அரசியல் அசிங்கங்களை எல்லாம் ஆவணப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, அரசியல் அசிங்கங்களை நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கவுண்டமணியின் கலைப்பயணம் கலாய்த்தலிலேயே பயணித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, முற்றிலும் மாறுபட்ட ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து தனது கலைப் பயணத்தை அவர் முழுமையான ஒன்றாக மாற்றுவார் என்று நம்புவோம்.