– K Vijay Anandh
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி ….
என்று சொல்வது போல,
ஆலும் வேல்ஸும் கல்விக்கு உறுதி என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆலங்குச்சி பல் துலக்குவதற்கு மட்டுமல்ல ஆலமரம் கல்வி போதிப்பதிலும் முக்கிய பங்காற்றி வந்திருக்கிறது நமது பாரம்பரியத்தில். பரந்து விரிந்த ஆல மரத்தின் அடியில் அமர்ந்து குரு தனது சீடர்களுக்கு போதிக்கும் எதுவும் பசுமரத்து ஆணி போல பதிந்து விடுவது எதார்த்தம். அறிவியல் கண்கொண்டு நோக்கினால் ஆலமரம் அதிக ஆக்சிஜனை வெளியிடும் மரம். அதன் நிழலில் அமர்ந்து கல்வி கற்றுக் கொள்ளும் பொழுது மாணவர்கள் முழு ஆரோக்கியமாக கல்வியில் கவனம் செலுத்தி கிரகித்துக்கொள்ள முடியும் என்பது புரிந்து கொள்ளக்கூடிய ஒன்று. நமது பழமையான ஓவியங்களிலும் சிற்பங்களிலும் ஆல மரத்தின் அடியில் அமர்ந்திருக்கும் குரு சிஷ்ய பரம்பரைகளை காணலாம்.
ஆலமரம் எவ்வாறு தனது விழுதுகளை பரப்பி பரந்து விரிந்து கொண்டே செல்கிறதோ அதைப்போலவே 1990 களின் ஆரம்பத்தில் ஐசரி கே கணேஷ் ஆல் உருவாக்கப்பட்ட வேல்ஸ் கல்வி நிறுவனம் இந்த 33 ஆண்டுகளில் தமிழக மட்டுமல்லாது, இந்தியாவின் பிற பகுதிகள், லண்டன், துபாய் மற்றும் சிங்கப்பூர் என்று 50க்கும் மேற்பட்ட கல்விச்சாலைகளை நிறுவி 48,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி வருகிறது. பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 8000க்கும் மேற்பட்டவர்கள் வேல்ஸ் குடும்பத்தில் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஆலும் வேல்ஸும் கல்விக்குறுதி, வேல்ஸ் குழுமத்தில் காலடி வைத்து விட்டால் தரமான கல்வி உறுதி என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
அந்த குழுமத்தின் வாரிசுகளான ப்ரீத்தா மற்றும் லஷ்வின்க்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில், வேல்ஸ் குழுமத்தின் மற்றொரு அங்கமான திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துடன் தொடர்ந்து பயணித்து வரும் திரைப்பட பத்திரிகையாளர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டனர்.
ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்வது நாகரீகம் அல்ல என்று நினைத்து சிங்கிள் சைல்ட் கலாச்சாரத்தில் சிக்கிக்கொள்ளும் இன்றைய தலைமுறை போன்று இருந்துவிடாமல், நமது முன்னோர்கள் சொல்லிய 16 செல்வங்களுடன், பல குழந்தை செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ, புதுமணத் தம்பதியினரை திரைப்பட பத்திரிக்கையாளர்கள் வாழ்த்தினர்.

