a K Vijay Anandh review
தக் லைஃப் கமல்ஹாசனின் ஹேர் ஸ்டைல் காதலா காதலா கமல்ஹாசனின் மேனரிசம் என்று சந்தானத்தின் லுக் & மேனரிசம் செம்மயாக இருக்கிறது.
தியேட்டருக்கு வரவழைக்கப்பட்டு திரையில் ஓடும் படத்திற்குள் மாட்டிக்கொள்ளும் சந்தானம் மற்றும் குடும்பத்தார் படம் முடிவதற்குள் எப்படி மீண்டு நிஜ உலகிற்கு வருகிறார்கள் என்பதே கதை.
மிக மிக நன்றாக யோசித்து அற்புதமாக அமைக்கப்பட்ட கதைக்களம், ஒரு பிரமாண்ட சொகுசு கப்பல். ஆனால், திரைப்படவிமர்சகர்களை பழிவாங்குவது என்கிற அபத்தமான ஓட்டை விழுந்து விடுகிறது. மிகக்குறைவான எண்ணிக்கையில் இருக்கும் திரைப்பட விமர்சகர்கள் குறிப்பாக வீடியோ ரிவ்யூவர்களால் இந்த உலகமோ சினிமா உலகமோ குடிமுழுகிப்போய்விடப்போவதில்லை. சினிமாவை திட்டி ஆடியோ போடுபவனையும் வீடியோ போடுபவனையும் வாண்டடா சினிமாவுக்குள்ள ஏற்றிவிட்டு அழகுபார்க்கும் அவலம் ஒழிந்தால் போதும்!
அதைத்தவிர வேறு ஏதாச்சும் யோசித்து இணைத்திருக்கலாம். ஏனென்றால், அதைத்தவிர அனைத்தும் நிறைவாகவும் விறுவிறுப்பாகவும் திகில் மற்றும் நகைச்சுவை இணைந்து அற்புதமாக பயணிக்கிறது திரைக்கதை.
நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் மற்றும் கெளதம் வாசுதேவமேனன் கச்சிதமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர். மொட்டை ராஜேந்திரன், கணேஷ் மற்றும் மாறனும் தான்.
நிழல்கள் ரவி தனது கிளாசிக் மேனரிசங்களை அவிழ்த்து விட்டிருக்கிறார். கஸ்தூரி , யாஷிகா ஆனந்துடன் இணைந்து மாடர்ன் உடையில் ஜாம்பிக்களை வசீகரிக்கும் போது காட்சிகள் அட்டகாசம்.
அவர் கிண்டிய அல்வாவை அவருக்கே ஊட்டுவது போல, கெளதம் வாசுதேவமேனனையும் யாஷிகா ஆனந்தையும் ராகவன் – மாயா வாக ஆக்கி அதகளம் செய்திருக்கிறார்கள்.
குடும்பபாங்கில் இருந்து ஆட்டோக்கார அப்பாவும் அம்மா தங்கையும் மாடர்ன் உலகிற்கு மாறிப்போன வேதனையை காட்டுமிடங்களில் சந்தானம் வெறித்தனமாக காமெடி செய்திருக்கிறார்.
கிக் பாக்ஸிங் ஸ்டெப்ஸ், ஒரு வித்தியாசமான வசன உச்சரிப்பு , தக் லைஃப் கமல்ஹாசன் ஹேர் ஸ்டைல் என்று வேற லெவலில் நடித்திருக்கிறார் சந்தானம்.
கீதிகா திவாரி, நாயகியாக நன்றாகவே நடித்திருக்கிறார்.
துணைமாப்பிள்ளை போல செல்வராகவனின் துணைப்பேயாக வரும் டி என் பி கதிரவன் வரும் காட்சிகளும் அபாரம்.
தீபக் குமார் பதேயின் ஒளிப்பதிவு மற்றும் ஆஃப்ரோவின் இசையும் அற்புதம்.
தியேட்டர், செல்வராகவன், புரஜக்ஷன், திரை, காட்சிகள், நடு நடுவே பிளாஷ்பேக் என்று மாறி மாறி வரும் மிகவும் வித்தியாசமாக காட்சிகளை எழுதி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் எஸ் பிரேம் ஆனந்த்
Devil’s Double Next Level, திரைக்கதை அமைக்கப்பட்ட விதத்தில் நிஜமாகவே இது வேற லெவல்.