வஞ்சகம் இல்லாமல் வாழ்த்திய விஜய்சேதுபதி

சக நடிகர்கள், தொழில் நுட்பகலைஞர்களை

105

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் ACE திரைப்படம் வரும் மே 23 அன்று வெளியாகவிருக்கும் நிலையில், படத்தின் இயக்கு நர் உள்ளிட்ட தொழில் நுட்பகலைஞர்கள் மற்றும் சக நடிகர்களை வஞ்சகம் இல்லாமல் வாழ்த்தினார் விஜய்சேதுபதி.

இயக்குனர் ஆறுமுகம் பற்றி…

நான் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் என்னை நம்பி, என் திறமையை நம்பி என்னைப் படத்தில் சிபாரிசு செய்தவர் ஆறுமுகம். இருக்கும்போது வரும் உதவிகள் வேறு, ஆனால் நம்மை யாரென்றே தெரியாத காலத்தில், நம் மீது யாரோ ஒருத்தர் வைக்கிற நம்பிக்கைதான் மிகப்பெரியது. இந்தப்படம் அவருக்கு பெரிய அங்கீகாரத்தை கொடுக்கும்…

இசையமைப்பாளர் ஜஸ்டின் பற்றி..

எனக்கு இவரை ரொம்பப் பிடிக்கும். ஏனென்று தெரியாது. அவர் மியூசிக் டைரக்டர், நன்றாக இசையமைப்பாளர் என்பதால் இல்லை. அவரைச் சந்தித்த முதல் நாளிலிருந்தே அவரை எனக்குப் பிடிக்கும். ஒரு முறை கீரவாணி அவரைப் பத்தி பேசியதாவது கேட்டேன். அவர் கூட பிறந்திருந்தால், அவர் வீட்டு ஆட்கள், எவ்வளவு சந்தோஷப்படுவாங்களோ எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்தது. நம்ம வீட்டு பிள்ளையைப் பத்தி இன்னொருத்தர் பேசுறது ஒரு மிகப்பெரிய ஆளுமை பேசுறதுங்கறது, எனக்கு பெரிய சந்தோஷமா இருந்தது. ஜஸ்டினோட ஒர்க் இந்த படத்துல மிகப் பிரமாதம், ரொம்ப அழகா செய்து தந்துள்ளார்.

ருக்மணி பற்றி..

ருக்மணி மிகத் திறமையான நடிகை. மலேசியாவில் ஒரு இடத்தில் ஷீட் செய்தோம், அந்த இடத்தை பற்றிய வரலாறே சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி எனக்கேட்டேன், இங்கே வருவதால், இந்த இடம் பற்றி படித்து விட்டு வந்தேன் என்றார். இதிலிருந்தே உங்களுக்கு தெரியும் படத்திற்காக அவர் எவ்வளவு தயாராகியிருப்பார் என்று, மிக அற்புதமாக நடித்துள்ளார்.

யோகிபாபு பற்றி..

யோகிபாபு இந்தப்படத்தில் இன்னொரு ஹீரோ. அவரைப்பற்றி சமீபத்தில் தவறான செய்திகள் வருகிறது. அது உண்மையில்லை, அவர் நல்ல மனிதர். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் அவரை எல்லோரும் ரசிப்பார்கள். இந்தப்படம் கண்டிப்பாக

சக நடிகர்கள் பற்றி..

கே ஜி எஃப், அவினாஷ் சார் பார்க்க தான் கரடு முரடு, ஆனால் மனதில் ரொம்ப ஸ்வீட்டான ஆள். க்யூட்.பப்லு இவர் நல்லவரா? கெட்டவரா? என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் மிக நல்ல ரோல் செய்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் கிரண் பற்றி…

நான் காந்தி டாக்கீஸ் படம் செய்யும் போது பழக்கம், அவர் இப்படத்தில் அருமையாகச் செய்துள்ளார். கலை இயக்குநர் மிக அப்பாவியான மனிதர், இப்படி ஒரு மனிதருடன் தான் இருக்க வேண்டும் அந்தளவு நல்லவர். இப்படத்தில் சூப்பராக செய்துள்ளார்.

எடிட்டர் பென்னி ஆலிவர் பற்றி..

அவர் சீக்கிரம் இயக்குநர் ஆவார் என நம்புகிறேன், அந்தளவுக்கு அனைத்தையும் அறிந்து வைத்திருப்பவர்..

கலை இயக்குநர் பற்றி..

மிக அப்பாவியான மனிதர், இப்படி ஒரு மனிதருடன் தான் இருக்க வேண்டும் அந்தளவு நல்லவர். இப்படத்தில் சூப்பராக செய்துள்ளார்.