மூத்தவர் அரசியலுக்கு, இளையவர் சினிமாவுக்கு

109

சண்முகபாண்டியன் நடிக்க வரும் மே 23 ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் படைத்தலைவன். அப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரது தாயாரும், தேமுதிக தலைவருமான பிரேமலதா விஜயகாந்த், “ மூத்தவர் அரசியலுக்கு, இளையவர் சினிமாவுக்கு..” என்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசியபோது, “அரசியல் மேடை இல்லாமல் ஒரு சினிமா சார்ந்த மேடையில் நான் பேசுவது இதுவே முதல்முறை. சண்முக பாண்டியனை இனிமேல் உங்களிடம் ஒப்படைக்கிறேன். தமிழ்நாட்டு மக்களிடமும், சினிமா துறை சார்ந்தவர்களிடமும் ஒப்படைக்கிறேன். கள்ளழகர் படத்தில் நடித்த போது, கேப்டன் யானையோடு நெருக்கமாக பழகி, வீட்டிற்கு யானையை அழைத்து வரவா? என்று கேட்டார், அவ்வளவு பெரிய வீடு இல்லையே என்று கூறினேன். அதேபோன்று தான் சண்முக பாண்டியனும், தற்போது அவருடன் நடித்த மணியன் யானையை வீட்டிற்கு அழைத்து வரக் கேட்டார். இருவரும் யானை வளர்க்கவே விரும்புகின்றனர். நிச்சயம் ஒரு யானையை வளர்ப்போம். கேப்டனின் இடத்தை எனது இரண்டு மகன்களும் நிரப்புவார்கள். விஜய பிரபாகரன் அரசியலிலும், சண்முக பாண்டியன் சினிமாவிலும் தங்களை நிலைநிறுத்திக்கொள்வார்கள். அதில் எந்த ஐயமும் இல்லை. படைத்தலைவன் அனைவருக்கும் பிடிக்கும்..” என்றார்.