சட்ட வகுப்பறை, புதுயுகத்தில்

136

தமிழக தொலைக்காட்சிகளில் ஒவ்வொன்றிற்கும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி அதன் சிக்னேச்சர் நிகழ்ச்சியாக அமைந்துவிடும். அந்த வகையில் புதுயுகம் தொலைக்காட்சிக்கு சட்டம் ஒரு வகுப்பறை என்கிற நிகழ்ச்சி இப்படி ஒரு சிக்னேச்சர் நிகழ்ச்சியாக அமையப் போகிறது என்றால் அது மிகையல்ல.

ஆம், ஒரு மனிதன் வீட்டை விட்டு கிளம்பி திரும்பி வீடு திரும்பி வரும் வரை அவன் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். சரி ஒரு இடத்தில் சும்மா அமர்ந்து இருந்தாலும் அவன் கையில் இருக்கும் கைபேசி வாயிலாக சமூக வலைத்தளங்களுக்குள் நுழைந்து ஏதாவது பிரச்சனை வலைக்குள் சிக்கிக் கொள்கிறான். இன்றைய காலகட்டத்தில் நாம் பொது வெளியில் மட்டுமல்ல சமூக வலைத்தளங்களில் பேசும் எழுதும் வார்த்தைகள் சட்டத்திற்கு புறம்பாக அமைந்து ஒருவருக்கு இன்னல்களை வரவழைத்து விடுகின்றன.

அந்த வகையில் இனி, வாழ்க்கைக்கு தேவையான அடிப்படையான சட்டங்களை தெரிந்து கொள்ளும் பொருட்டு புதுயுகம் தொலைக்காட்சியில் சட்டம் ஒரு வகுப்பறை என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

இனி சட்டப்படி பேசுங்கள்… என்கிற டேக் லைனுடன் ….

நீதிமன்றம், சட்டம், தண்டனை போன்ற வார்த்தைகள் இன்றும் பலருக்கு அச்சம் தருவதாக இருக்கிறது. அதோடு இன்றைய ஏஐ உலகில் நாளுக்கு நாள் சைபர் கிரைம் குற்றங்களும், பணம் பறிக்கும் மோசடிகளும் அதிரிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் மக்களுக்கு சட்டம் பற்றிய எளிமையாகச் சொல்லித் தரும் வகையில் புதுயுகத்தில் சட்டம் ஒரு வகுப்பறை என்கிற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. சட்டப்படி பாதுகாப்பாக இருப்பது எப்படி, பாதிக்கப்பட்டவர்கள் மீள்வது எப்படி என்பது போன்ற சட்டம் சார்ந்த கேள்விகளுக்கு பிரபல வழக்கறிஞர்கள் விளக்கம் தருகிறார்கள். புதுயுகம் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாக உள்ளது.

இதன் முதல் நிகழ்ச்சி வரும் புதன்கிழமை அன்று ஒளிபரப்பாக இருக்கின்றது.