ஹிந்துமத விரோத அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பணமாக திகழ்பவரும் பாரதத்தை 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வழி நடத்திக்கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச் ராஜா, திரையுலகில் தனது காலடியை எடுத்து வைத்திருக்கிறார்.
ஹெச்.ராஜா வை முன்னணி கதாபாத்திரமாக்கி, கந்தன் மலை என்கிற படம் உருவாகிறது. சமீபத்தில் வெளியாகி திராவிட ஆட்சியாளர்களின் போலி மதச்சார்பின்மை மற்றும் போலி சமூக நீதியை கிடுக்கிப்பிடி பிடித்த கிடுகு படத்தை இயக்கிய வீரமுருகன் இந்தப்படத்தை இயக்குகிறார்.
தேசவிரோத சக்திகளுக்கு மட்டுமல்ல, பல இடதுசாரி சினிமாக்காரர்களுக்கும் ஹெச்.ராஜா என்றாலே ஒரு கிலிதான். இந்த நிலையில், அவரே முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வந்திருப்பது, பலருக்கும் மேலும் கிலியை ஏற்படுத்தும் என்றால் அது மிகையாகாது.
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட அனைத்து மலைகளுமே கந்தன் மலை தானே! இவர்கள் எடுக்கப்போகும் படம் எந்த கந்தன் மலை பற்றியதாக இருக்கப்போகிறதோ என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் எகிறியிருக்கிறது.
கந்தன் மலை படத்தின் முதல்பார்வை போஸ்டரை தமிழக பாஜக தலைவரும் திருநெல்வேலி சட்டமன்ற பாஜக எம் எல் ஏ வுமான நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்.