சக்கரவர்த்தி திருமகன்

திராவிட சரக்குகளுக்கு பதிலடி நிகழ்ச்சி

301

-K.Vijay Anandh

தேசிய ஊடகவியலாளர் நல சங்கம் ஏற்பாடு செய்திருந்த சக்கரவர்த்தி திருமகன் எனும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.  தேசிய ஊடகவியலாளர் நலச்சங்க ஜெய கிருஷ்ணன், தினமலர் குழுமத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் ஆன்மீக சொற்பொழிவாளர் டாக்டர் வெங்கடேஷ், இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சமீபத்தில் நடைபெற்ற கம்பன் கழக விழாவில் ராமன் புத்தி சுவாதீனமாக நடந்து கொண்டு வாலியை வதம் செய்தான் என்று பேசி இந்து மக்கள் கொண்டாடும் ஸ்ரீ ராமனை இழிவு படுத்திய வைரமுத்துவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிறப்பு விருந்தினர்கள் தங்களது கருத்துக்களை முன் வைத்தனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கம்பராமாயணம் சுந்தரகாண்டத்தில் இருந்து 30 மற்றும் 31 ஆகிய பாடல்களை மேற்கோள் காட்டி பேசிய டாக்டர் வெங்கடேஷ், ” ராமாயணத்தில் தமிழ் தமிழில் ராமாயணம் …” என்று ஆரம்பித்து மெய்சிலிர்க்க வைக்கும் ஆன்மீக உரையை வழங்கினார். ” அசோகவனத்தில் சிறைபிடிக்கப்பட்டு இருந்த சீதையை பார்த்த கணத்தில் சமஸ்கிருதத்தில் பேசினால் தானும் இராவணனின் ஆள் தான் என்று நினைத்து விட கூடும் என்று நினைத்து தமிழில் அனுமன் ராமாயண கதையை கூறி தான் ராமன் அனுப்பி வைத்த தூதுவன் என்று சீதையிடம் கலையாளியை கொடுக்கின்றான் …. இதனை சுந்தரகாலத்தில் 30 மற்றும் 31 ஆவது பாடல்களில் வால்மீகி குறிப்பிட்டு இருக்கிறார். அனுமனுக்கு தமிழ் தெரியும் சீதைக்கு எப்படி தமிழ் தெரியும்…? ராமன்,  சீதை , லட்சுமணன் ஆகியோர் அகத்தியர் ஆசிரமத்தில் தங்கி இருந்தார்கள் அங்கே அவர்களுக்கு அகத்தியர் மூலம் தமிழ் கற்பிக்கப்பட்டிருக்கலாம்.  இப்படி ராமாயணத்தில் தமிழ் இருக்கிறது என்றால், தமிழகத்திலோ திருப்புல்லாணி, ராமாயணத்தை எழுதிய வால்மீகியின்  பெயரால் வால்மீகி நகர் இன்று பல அடையாளங்கள் காணப்படுகின்றன.

வாலியை மறைந்திருந்து ராமன் கொன்றான் என்கிற குற்றச்சாட்டை வாலியோ வாலியின் மனைவியோ வாலியின் புதல்வனோ வைக்கவில்லை மாறாக சம்பந்தமில்லாதவர்கள் அந்த குற்றச்சாட்டை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதலில் மறைந்திருந்து தன்னைக் கொன்ற ராமனின் மீது வாலிக்கு கோபம் ஏற்பட்டதும், அது குறித்து ராமனிடம் கேள்விகள் கேட்டதும், அந்த கேள்விகளுக்கு ராமன் பதில் சொல்லி முடித்த நிலையில் ஆம் என்னை கொன்றது சரிதான் இது ஒரு சாதாரண செயல்தான் என்று வாலியே ஒத்துக் கொண்டு இறந்து போனதும் ராமாயணத்தில் இருக்கின்றது …. அந்த கேள்விகளில் என்னை கொன்றது ராமனின் செயல் தடுமாற்றம் என்று வாலி குற்றம் சாட்ட இல்லை என்று அங்கேயே ராமனும் மறுத்து, வாலியே ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு சரியான விளக்கமும் கொடுத்துவிட்டார் ” என்று பேசினார்.

அடுத்து பேசிய அர்ஜுன் சம்பத், “எனது திருமண வரவேற்பில் மிகச் சிறந்த ஆன்மீக உரையாற்றிய சுகிசிவம் இன்று திராவிட பேச்சாளராக மாறிப்போனது வேதனை. உலகம் முழுவதும் ஆன்மீக தொண்டாற்றிய நகரத்தார் என்று அழைக்கப்படும் செட்டிநாட்டு மக்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன மேலும் அவர்கள் மத மாற்றங்களுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள் என்பது உச்சகட்ட வேதனை” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

முத்தாய்ப்பாக பேசிய எச் ராஜா , ” இந்து மதத்தையும் இந்து கடவுளர்களையும் யாரேனும் பழித்துப் பேசினால் இந்துக்கள் குறிப்பிடத்தக்க எதிர்வினை ஆற்ற வேண்டும். ஏனென்றால் பிள்ளையார் சிலையை உடைத்த ஈவே ராமசாமியின் வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது, அவருடன் புகைப்படத்தில் இருப்பவர்கள் இந்துக்களா என்று நீதிபதி கேள்வி எழுப்ப, வழக்கு தொடுத்தவர் ஆம் என்று பதிலளிக்க, அப்படியானால் அவர்கள் எந்த விதமான எதிர்வினையும்  ஆற்றவில்லையே , அப்புறம் எப்படி ஹிந்துக்கள் மனம் புண்பட்டதாக எடுத்துக் கொள்ள முடியும் என்று அந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

கம்பன் கழக நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்  என்கிற முறையில், வைரமுத்து ராமனை இழிவுபடுத்தி பேசிய பொழுது நிறுத்து உன் பேச்சை என்று ஜெகத்ரட்சகன் சொல்லி இருக்க வேண்டும்.

ஆரியம் என்று பேசி மக்களை பிளவுபடுத்துபவர்கள் மூளையில் குப்பை நிரம்பி இருக்கிறது என்று அம்பேத்கர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இந்திய ஹிந்துக்களை மதமாற்றுவதற்கு தடையாக இருக்கும் பிராமணர்களை முதலில் ஒழிக்க வேண்டும் என்பதற்காக மிஷனரிகளின் தூண்டுதலோடு ஆரம்பிக்கப்பட்டது திராவிட இயக்கங்களின் பிராமண எதிர்ப்பு கோஷம் என்பதை நான் சொல்லவில்லை, நிக்கோலஸ் பி திரிக்ஸ் என்கிற ஐரோப்பிய எழுத்தாளர் தனது கேஸ்ட்ஸ் ஆஃப் மைண்ட் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் …” என்று பேசினார்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஜெயகிருஷ்ணன் பேசும்பொழுது, ” தினமலரில் பணியாற்ற வேண்டும் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுடன் பயணிக்க வேண்டும் என்பது எனது அம்மாவின் கனவு… ஜெயலலிதாவின் ஆசி பெற்ற நியூஸ் ஜெயில் பணியாற்றிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை தினமலரின் 75வது ஆண்டு விழாவில் நடத்துவது கூடுதல் மகிழ்ச்சி. தினமலர் பத்திரிகை மட்டும் இல்லை என்றால், திராவிட அரசியல்வாதிகளின் தகடு தத்தங்கள் தமிழக மக்களுக்கு தெரியாமலேயே போயிருக்கும். உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் தில்லுமுல்லுகள் முதல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஈ வே ராமசாமி படத்திறப்பு விழா அக்கப்போர் வரை தமிழக மக்களின் கவனத்திற்கு கொண்டு வருவது தினமலரே… ” என்றார்.

நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் கவுன்சிலர் உமா ஆனந்த் உள்ளிட்ட பலரும் திரளாக கலந்து கொண்டனர்.