– K. Vijay Anandh
தண்ணீரில் விளக்கை எரிய வைத்த வள்ளலார் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இதோ | தண்ணீரை பயன்படுத்தி, அடுப்பையும் தெரிய வைத்திருக்கிறார் ஒரு தமிழர். வள்ளலார் எரிய வைத்தது ஆன்மீகம் என்றால் பேளூர் கார்த்திக் ராமலிங்கம் செய்து காட்டியிருப்பது அறிவியலின் உச்சம் என்று சொன்னால் மிகை அல்ல! இதுவருமே தங்களது பெயர்களில் ராமலிங்கத்தை கொண்டிருக்கிறார்கள் என்பது பேரதிசயம்!
HONC Gas Pvt. Ltd. நிறுவனத்தின் சார்பில் நிறுவனத்தின் ஆலையில் HONC Gas Generator குறித்து நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், உலகிலேயே முதல் முறையாக, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் இருந்து நேரடியாக எரியூட்டக் கூடிய பசுமை ஹைட்ரஜன் எரிவாயு உற்பத்தி செய்யும் HONC Gas நிறுவனத்தின் புதிய மாற்றத்திற்கு வித்திடும் செயல்திறன் குறித்து மிகச் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மேம்பட்ட Gyroid Electrolytic Medium (GEM) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி HONC Gas Generator மூலமாக தனித்துவமான ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தி செய்வது எப்படி என்று செயல்விளக்கத்தின் போது விளக்கிக் காட்டப்பட்டது.. மரபு ரீதியான புதைவடிவ எரிபொருள்கள் அல்லது LPG போல அல்லாமல் HONC Gas எரிபொருளை நமக்கான தேவையின்போது உற்பத்தி செய்து கொள்ள முடியும், இதை சேமித்து வைக்க சிலிண்டர்கள் தேவையில்லை மற்றும் எரிவாயு கசிவு அல்லது வெடிக்கும் ஆபத்து போன்றவை முற்றிலுமாக தவிர்க்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், HONC Gas Pvt. Ltd. நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை விஞ்ஞானியுமான பேளூர் ராமலிங்கம் கார்த்திக் பேசும்போது, “இந்த புரட்சிகர தொழில்நுட்பம் ஒரு மாற்று எரிசக்தி மட்டுமல்ல, எரிபொருள் துறையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. வெறுமனே ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் மிகக் குறைவான மின்சாரத்தைக் கொண்டு, தொழிற்சாலைகளுக்கும், வீடுகளுக்கும் முற்றிலும் மாசற்ற தூய்மையான எரிபொருளை நம்மால் உற்பத்தி செய்ய முடியும். HONC Gas பயன்பாடு என்பது வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளைக் கடந்து பல தரப்பட்ட இடங்களில் பயன் தரக் கூடியது. steam turbine generators மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், வாகனங்களுக்கான பாதுகாப்பு நிறைந்த, செயல்திறன் மிக்க, மாசற்ற எரிபொருள்களை வழங்கி ஆட்டோமொபைல் துறையில் ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய திறன் HONC Gas ஜெனரேட்டர்களுக்கு உண்டு. ஆக, வெவ்வேறு துறைகளில் பயன்படுத்தக் கூடிய எல்லாவற்றுக்கும் பொருத்தமான எரிபொருளை HONC Gas மூலமாக உற்பத்தி செய்ய இயலும்.
இந்தப் புதிய கண்டுபிடிப்பை இந்தியாவில் இருந்து உலகிற்கு அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். சமையல் எரிவாயு, தொழிற்சாலைகளுக்கான பாய்லர்கள், பெரிய அளவிலான எரிசக்தி உற்பத்தி கூடங்களிலும் கூட பயன்படுத்தப்படுவதற்கான செயல்திறன் HONC Gas ஜெனரேட்டர்களில் உண்டு. நிலையான எரிசக்தி துறையில் இந்தியாவை உலகை வழிநடத்தும் நாடாக நிலைநிறுத்த வேண்டும் என்ற இலக்கை நோக்கி நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்” என்றார்.
HONC Gas நிறுவனம் அளித்த இந்த செயல்விளக்கம் குறித்து HONC Gas நிறுவனரும், தலைமை விஞ்ஞானியுமான பேளூர் ராமலிங்கம் கார்த்திக், முதன்மை செயல் அதிகாரி முத்துக்குமாரசாமி முத்துரத்னம், மேலாண் இயக்குநர் செந்தில் குமார், நிறுவனத்தின் முதன்மை இயக்குநரும், அரசியல் தலைவர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகருமான R. சரத்குமார், நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநர் பூரணசங்கீதா செந்தில் குமார் பிச்சை ஆகியோர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் தலைவர் S.R.நாகராஜன், வனம் இந்தியா பவுண்டேஷன் செயலாளர் S.K.Y.சுந்தர்ராஜன், ஹீரோ பேஷன் நிறுவனத்தின் S.சுந்தரமூர்த்தி, HONC Gas நிறுவனர் பேளூர் ராமலிங்கம் கார்த்திக் அவரது மனைவி கவிதா கார்த்திக் மற்றும் தொழில்துறை நிபுணர்கள், எரிசக்தி தொழில்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நம் நாட்டின் புதைவடிவ எரிபொருள்களின் இறக்குமதிக்கான தேவைகளை குறைக்கும் விதமாகவும், பாதுகாப்பானதாகவும், மேம்படுத்தக் கூடியதாகவும் இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளது என்று விருந்தினர்கள் பாராட்டு தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
தற்போது உற்பத்தியை பெருக்கவும், அரசு அமைப்புகள், தொழிற்சாலைகள், ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து எல்லோருக்கும் பலன் தரக் கூடிய பாதுகாப்பான, பசுமை எரிபொருள் உற்பத்தியை மேற்கொள்ளவும் HONC Gas Pvt. Ltd. தற்போது தயாராகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.




