– K Vijay Anandh
சென்னையின் முதல் என்கிற அடையாளத்துடன், சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் சர்வதேச அளவில் கல்வி சேவைக்கு என்று புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நீல் கேசவ் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை , Sagehill Creative Pathway School ஐ தொடங்கி இருக்கிறார்கள்.
40 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த இடத்தில், சர்வதேச தரத்தில் வகுப்பறைகள், தங்கும் விடுதிகள், உணவு எடுத்துக் கொள்ளும் அறைகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் என்று இந்த பள்ளி நிறுவப்பட்டிருக்கின்றது.
கடந்த 20 ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் உறைவிடங்கள் ஆகியவை சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி இருக்கின்றது. அப்படிப்பட்ட வசதிகள் தங்களது குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி முறைகளிலும் இருக்க வேண்டும் என்கிற ஆர்வமும் பணக்காரர்கள் மட்டுமன்றி நடுத்தர வர்க்க மக்களையும் தொற்றிக் கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்டவர்களுக்கு சரியான தீர்வாகவும் அவர்களது குழந்தைகளை, அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் சர்வதேச குடிமக்களாக ஆக்கும் பொருட்டு Sagehill Creative Pathway School தொடங்க இருக்கிறது.
வரும் ஜனவரி 2026 இல் திறப்பு விழா காணவிருக்கும் Sagehill Creative Pathway School குறித்தான அறிமுக பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.
இதில், இந்தக் குழுமங்களில் தலைவர் ராமதாஸ், பள்ளியின் நிறுவனர் மற்றும் இயக்குனர் சந்தீப் வாசு | போர்டு உறுப்பினர் சதீஷ்குமார் ஆகியோருடன் ஆலோசகர் நந்தகுமாரும் கலந்து கொண்டார்.
வகுப்பிற்கு 25 மாணவர்கள் என்கிற அடிப்படையில், மிகவும் பாதுகாப்பான வகுப்பறைகள் , சுற்றுப்புறச் சூழல்கள், மாணவர்களுக்கு முழுமையான போஷாக்கை வழங்கக்கூடிய உணவுகள் என்று இந்தப் பள்ளிக்கூடம் நிறுவப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
மேலும், தாய்மொழி தமிழுடன், ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழி அத்துடன் ஆங்கிலம் பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகள் என்று குறைந்தது ஐந்து மொழிகளில் அங்கு பயிலும் மாணவர்கள் பேசவும் எழுதவும் சிறந்து விளங்கும் வகையில் கல்வி போதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
திறமையான மற்றும் அனுபவம் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மாணவர்களின் உடல் நலன், மன நலன் ஆகியவற்றை சீராக பராமரிக்கும் பொருட்டு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் ஆலோசகர்கள் முழு நேரமும் பணியாற்றுவார்கள்.
விசாலமான மைதானங்களை கொண்டிருப்பதால், ஒவ்வொரு மாணவர்களும் அவர்களது விருப்பமான விளையாட்டுகளை தேர்ந்தெடுத்து பயிற்சிகளை பெறுவதற்கான வசதிகள் இந்த பள்ளியில் அமைந்திருக்கின்றன.
நவீனகால குழந்தைகளுக்கான புதிய பாதையை வடிவமைக்கும் வகையில் சென்னையின் முதல் 100% ரெசிடென்ஷியல் கேம்பிரிட்ஜ் பள்ளி ‘சேஜ்ஹில் என்று தெரிவித்தார் சந்திப் வாசு.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “நவீனகால கல்வி முறையில் துணிச்சலான புதிய பார்வையை வழங்கும் வகையில் சென்னை புறநகரில் முதன்முறையாக ரெசிடென்ஷியல் பள்ளியாக உருவாகியுள்ளது ’சேஜ்ஹில்’. சமகால குடும்ப வாழ்க்கையின் யதார்த்தங்களுடன் பெற்றோர் ஒத்துழைப்புடன் கூடிய பள்ளியாகவும் இது இருக்கும். நகர வாழ்க்கையில் தொழில்- குடும்பம் என்ற இரட்டை குதிரையில் பெற்றோர்கள் சவாரி செய்து வர குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான நடைமுறை சிக்கல்களை சமநிலைப்படுத்த இருவருக்குமான இடமாகவும் ‘சேஜ்ஹில்’ இருக்கும்.
சர்வதேச கல்விமுறை, புதுமையாக்கம், கலாச்சார ஆய்வு மற்றும் நடைமுறை பயன்பாடு ஆகியவற்றை இணைக்கும் அணுகுமுறையை ‘சேஜ்ஹில்’ கொண்டுள்ளது. மாணவர்களை தேர்வுகளுக்கு மட்டுமே தயார்படுத்தாமல் வாழ்க்கை, அறிவுதிறன், படைப்புத் திறமை, எதிர்கால உலகத்திற்கு ஏற்றாற்போல நேரடி கள அனுபவங்களையும் கொடுத்து அவர்களை ‘சேஜ்ஹில்’ தயார்படுத்துகிறது.
சென்னையின் கல்வி வடிவமைப்பில் இருந்து ‘சேஜ்ஹில்’லை தனித்துவமாக்குவது அதன் ‘Co-Parenting Value Delivery Engagement Model’. அதாவது, பள்ளியை விட்டு குழந்தை தள்ளி இருக்கும்போதும் பெற்றோரை குழந்தைகளின் வளர்ச்சியுடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தினசரி புகைப்படங்கள், வாராந்திர காட்சிப்படுத்தல்கள், மாதந்தோறும் ஆக்டிவிட்டீஸ், பிரதிபலிப்புகள் மற்றும் காலாண்டு கொண்டாட்டங்கள் மூலம் பெற்றோர் அந்த சமயத்தில் இல்லாவிட்டாலும் இந்த நிகழ்வுகள் மூலம் அதை அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது. இந்த அமைப்பு ஒரு கூடுதல் அம்சமாக சேர்க்கப்படாமல், பள்ளியின் அடிப்படை விஷயங்களில் ஒன்றாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கல்விக்கு அடிப்படையான நம்பிக்கையை இது வலுப்படுத்துகிறது.
முழுமையான ரெசிடென்ஷியல் பள்ளியாக மட்டுமல்லாமல், அதற்கும் அப்பாற்பட்ட வீடு- பள்ளி சூழலை ‘சேஜ்ஹில்’ வழங்குகிறது. அங்கு குழந்தைகள் சுதந்திரம், அக்கறை, நம்பிக்கை, மற்றும் பொறுப்பையும் கற்றுக்கொள்கிறார்கள். பயிற்சி பெற்ற வழிகாட்டிகளால் வழிநடத்தப்படும் இந்தப் பள்ளியில் மாணவர்கள் உறவுகள், படைப்பாற்றல் மற்றும் நேர்மறையான சூழலில் வளர்கிறார்கள்.
நீலகேசவ் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையால் ஆதரிக்கப்பட்டு, ஸ்ரீமதி நீலம்மாள் மற்றும் ஸ்ரீ கேசவலு நாயுடு ஆகியோரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும் ’சேஜ்ஹில்’ கல்வி, குணநலன் மற்றும் சேவை ஆகியவற்றை பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. குடும்பங்களுக்கும் நவீன பெற்றோர்களுக்கும் எப்போதும் இல்லாத அளவுக்கு பள்ளிகளின் இணக்கம் தேவைப்படும் இந்தக் காலக்கட்டத்தில் வளரும் குழந்தைகளின் ஆர்வத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான தூரத்தைக் குறைக்கும் ஒரு பள்ளியாக இது செயல்படும். ஒவ்வொரு குழந்தையும் தெளிவு, சமநிலை மற்றும் தைரியத்துடன் வளரும் ரெசிடென்ஷியல் பள்ளிதான் ‘சேஜ்ஹில்’..” என்றார்.
தங்களது குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியை வழங்குவதை தலையாய கடமையாக நினைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு Sagehill Creative Pathway School ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என்றால் மிகை ஆகாது.
மாணவர்கள் சேர்க்கைக்கு
9043222748 / 04427240000 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
www.sagehill.in என்கிற இளையதளத்திலும் விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.


