இரு, கால் நூற்றாண்டுகளுக்கு சொந்தக்காரர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

95

-K Vijay Anandh

1975இல் இயக்குனர் சிகரம் கே பாலசந்தரால் , அபூர்வ ராகங்கள் என்கிற படம் மூலம் அறிமுகமானவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆறறிவுக்கும் மேல் சிந்திக்கும் ஆற்றல் படைத்தவர்கள் அன்றே ஊகித்திருப்பார்கள், இவர் ஒரு அபூர்வ நடிகர், அபூர்வ திரை நட்சத்திரம் என்று.

அன்றிலிருந்து, தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், பங்களா அத்துடன் ஒரு ஆங்கில படம் என்று 2025 வரை 171 படங்களுக்கும் மேலாக நடித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த், இந்திய திரை வானில் நிகர் இல்லாத சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

கே பாலசுந்தரில் ஆரம்பித்து நெல்சன் வரை ஐந்து தலைமுறை இயக்குனர்கள் இவருக்கு ஆக்சன் கட் சொல்கிறார்கள்.

1975 இலிருந்து 2025 வரை 5 தலைமுறைகள் இவருக்கு ரசிகர்களாய் இருக்கின்றார்கள். இவரை, திரையில் பார்த்தாலும் நிகழ்ச்சிகளில் பார்த்தாலும் நேரில் பார்த்தாலும் ஆரவாரம் செய்து மகிழ்கிறார்கள்.

எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என்று திரை ஆளுமைகள் தமிழக முதலமைச்சர்கள் ஆன நிலையில், அந்த வரிசையில் அவர்களுக்குப் பிறகு இவர்தான் என்று பல லட்சம் பேர் ஆருடம் சொல்லிக் கொண்டிருந்தாலும், அவருக்கு இருக்கும் தெய்வ பலம் மற்றும் மத்தியில் ஆளும் அரசுகளின் ஆதரவு தொடர்ந்து இருந்தாலும், ஏழு கோடி தமிழர்களின் நலம் காக்க எந்நேரமும் உழைக்க வேண்டும் அதற்கு தனது உடல்நிலை ஒத்து வராது என்று பொது வழியில் ஒத்துக் கொண்ட தைரியமும்,  பிறருக்கு வழி விட்ட பெருந்தன்மையும் இவருடையது.

புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு, இவரது படங்களில் இடம்பெறும் பாடல்கள், குறிப்பாக இவரது அறிமுக பாடல்கள், வாழ்க்கையின் தத்துவங்களை உள்ளடக்கியதாய் கேட்பவருக்கு நேர்மறை எண்ணங்களை விதைப்பதாய், சோர்ந்து இருப்பவர்களுக்கு ஒரு உந்துதலை அளிப்பதாய் இருக்கின்றன என்பதில் வியப்பு ஏதுமில்லை.

சமூகத்தில் தனது அடையாளத்தை மறைத்து போலியாக செக்யூலர் வேடமிட்டால்தான், நிலைத்து நிற்க முடியும் என்கிற மூடநம்பிக்கையை தகர்த்து எறிந்த மா மனிதர், மா நடிகர் இவர்.

திரையில் மட்டுமல்ல,  நிஜத்திலும் தான் நம்பும்,  தனது மூதாதையர்கள் தனக்கு அளித்த ஆன்மீக அடையாளங்களை ஒருபோதும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதவர்.

தெற்கே திருவண்ணாமலையும் வடக்கே இமயமலையும் எப்பொழுதும் இருப்பவை தான் என்றாலும், இவரால் அது அதிக உதடுகளால் உச்சரிக்கப்பட்டு வருகின்றன என்றால் அது மிக ஆகாது.

மகான் ஸ்ரீ ராகவேந்திரர், ஜீவசமாதி அடைந்த பின்னரும் பல வருடங்கள் கழித்தும், அவரது ஆஸ்தான சீடர் ஒருவருக்காக எழுந்து வந்து ஆசீர்வதித்து சென்றார் என்பது நடந்த ஒன்று.

உண்மையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாயிலாக ஸ்ரீ ராகவேந்தரை திரையில் தரிசித்தவர்கள் பல கோடி .

அரை நூற்றாண்டிற்கு சொந்தக்காரர் என்று சொல்லி இவரை ஒரு நூற்றாண்டிற்குள் சுருக்கி விட முடியாது.  இவர், இதுவரை இரு நூற்றாண்டுகளின் கால் நூற்றாண்டுகளுக்கு சொந்தக்காரர், இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு ரசிகர்கள் நினைவில் நிற்கும் வித்தைக்காரர்!

அவருக்கு, அவரது ரசிகர்கள் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும்  mysixer.com  பிறந்தநாள் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது!