ஆழியை துரத்தும் தாய்க்கிழவி

கலகலப்பூட்டிய சரத்குமார்

96

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் மையக்கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் தாய்க்கிழவி

படத்தை வாழ்த்தி பேசிய சரத்குமார், ” 50 ஆண்டுகள் திரைப்பத்துறையில் கோலோச்சிக் கொண்டிக்கும் ராதிகா வுக்கு வாழ்த்துகள். ஒரு பெண் இந்த சாதனையை படைப்பது ரசிகர்களின் ஆதரவு இல்லாமல் சாத்தியமில்லை. 50 வது ஆண்டில் , ஒரு படத்தில் டைட்டில் கதாபாத்திரமாக நடிப்பது மிகவும் அரிதானது, ராதிகாவின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாகவே அதைப் பார்க்கிறேன். தாய்க்கிழவி, பெண்கள் தற்சாரபு, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பேசுகிறது. அப்படிப்பட்ட படம் கொடுத்த , சிவகார்த்திகேயன் குழுவினருக்கு பாராட்டுகள்.

ஒரு ஊரையே தன் மக்களாக பார்த்துக் கொள்ளும் தெய்வத்தாய் தான் தாய்க்கிழவி. அந்த கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார் ராதிகா.

கமல் ரசிகராக இந்தப் படத்தில் நடித்த சிங்கம் புலி உள்ளிட்ட நடிகர்களுக்கும் சட்டையை கிழித்து கொண்டு நடித்த நடிகருக்கும் ( முக ஸ்டாலின் ஞாபகம் வருகிறதா, இவர் அவர் இல்ல ) வாழ்த்துகள்.

1994 இல் இதே பிப்ரவரி 24 ஆம் தேதி ஒரே நாளில் எனது இரண்டு படங்கள் வெளியாகி 100 நாள் ஓடியது.

அதைப்போல, தாய்க்கிழவியுடன் நான் நடித்த ஆழி வெளியாகிறது. ஆழி 100 நாள் ஓடுமோ இல்லையோ, தாய்க்கிழவி 100 நாள் ஓடும். அவர் வெற்றி பெறுவது நான் வெற்றி பெறுவது போலத்தான்….” என்று பேசினார்.

தாய்க்கிழவி, பிப் 20 வெளியாகும் திட்டம் இருந்ததால், தனது ஆழி படத்தை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்க சொன்னதாகவும், தாய்க்கிழவியும் ஆழியைத் துரத்திக் கொண்டு பிப் 27 வந்து போட்டியில் குதித்திருப்பதாகவும், இது கணவன் – மனைவிக்கிடையிலான ஆரோக்கியமான போட்டி  என்றும் கலகலப்பூட்டினார்.