– K Vijay Anandh
விஜயை நடிகராக அறிமுகப்படுத்தியது அவரது தந்தை SAC..
விக்ரமன் பூவே உனக்காக மூலம் அவருக்கு ஒரு வெற்றிப்பயணத்தை அதாவது விஜய் ஒரு முழுமையான நடிகர் என்கிற அந்தஸ்தை ஏற்படுத்தினார்.
திருமலை மூலம் ஒரு ஆக்ஷன் நடிகராக ரமணா, நடிகர் விஜயை ஆக்ஷன் நடிகராக அடையாளப்படுத்துகிறார்.
அதன்பிறகு பல.இயக்குநர்கள் நடுவில் தரணியின் கில்லி, பிரபுதேவாவின் போக்கிரி, சிவகாசி, திருப்பாச்சி என்று பேரரசு பட்டையை கிளப்புகிறார்.
பாசில் இயக்கிய காதலுக்கு மரியாதை, SJ சூர்யா இயக்கிய குஷி மாபெரும் வெற்றிபடங்களாக அமைந்தது.
இப்படி விஜயை ஒவ்வொரு வீடுகளுக்கும், பலதரப்பட்ட வயதினருக்கும் கொண்டு சென்றதில் இந்த இயக்குநர்கள் முன்னோடிகள் என்றாலும்,
2012 இல் AR முருகதாஸ் துப்பாக்கி படம் மூலம் அடுத்த தளத்திற்கு கொண்டு செல்கிறார். அடுத்தடுத்து, சமூகப்பர்பிரச்சினைகளை மையமாக வைத்து கத்தி, முழுமையான அரசியல் மசாலாவாக சர்க்கார் என்று விஜய் அரசியலுக்கு வருகிறார் என்கிற விஷயம் அரசல் புரசலாக பேசப்படுகிறது.
2013 இல் விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா, விஜய்க்கு தலைவர் ஆகும் ஆசையை விதைத்து இருக்கக்கூடும்.
அட்லீ இயக்கிய மெர்சல், தெறி, பிகிலு முக்கியமான படங்கள்.
இறுதியாக ஹெச் வினோத்குமார் இயக்கிய ஜனநாயகன் வெளியாகாமலே விஜய்க்கு பலவற்றையும் கொடுத்துவிட்டது.
அந்தவகையில், விஜயின் இந்த மாபெரும் அரசியல் வெற்றிக்கு காரணமாக அமைந்ததில், தலைவா படத்தை இயக்கிய விஜய், கத்தி – சர்க்கார் கொடுத்த AR முருகதாஸ் ஆகிய இருவரின் பங்கு குறிப்பிடத்தக்கது.
எந்த ஒரு மாஸ் நடிகனின் உருவாக்கத்திலும் அவர்கள் சமூகத்தில் பெறும் மிகப்பெரிய வரவேற்புகளிலும் , பல இயக்குநர்கள் பல நூறு உதவி இயக்குநர்களின் வியர்வையும் உழைப்பும் இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.
அதுமட்டுமல்லாமல் பல லட்சம் பேர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை வழங்குவதோடு, வெவ்வேறு துறைகளில் படித்து பட்டம் வாங்கியிருந்தாலும் பல ஆயிரம் இளைஞர்களுக்கு சினிமா துறை ஒரு வேடந்தாங்கல் ஆக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பு, விநியோகம், OTT வெளியீடு ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை வேண்டும்.
ஆகவே, திரைப்படத்துறைக்கு பிரத்யேக கவனம் செலுத்தி அந்த துறை ஆரோக்கியமாக செயல்பட தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் ஆவண செய்யவேண்டும்.
முழுமையான சுதந்திரத்துடன் , , எந்த விதமான அரசியல் அழுத்தங்கள் இன்றி, மாபியாக்களின், தனிமனிதர்களின் கட்டுப்பாடுகள் இன்றி செயல்பட வழிவகை செய்யவேண்டும்.
இன்னொருபக்கம், விஜயை,
சி ஜோசப் விஜயாக அறிமுகப்படுத்திய அரசியல்வாதி.
அதுவரை, முழுப்பெயரையும் வெளிக்காட்டாமல் விஜய் என்கிற பெயரிலேயே ரசிகர்கள் மத்தியில் வலம்வந்தவரை, இன்று முதலமைச்சராக பதவியேற்றிருக்கும், சி ஜோசப் விஜயை, சி ஜோசப் விஜய் என்று தைரியமாக பொதுவெளியில் காட்டிக்கொள்ளவும் டைட்டிலில் ஜோசப் விஜய் என்று போட்டுக்கொள்ளவும் காரணமாக இருந்தது பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச் ராஜா என்றால், அதனை யாரும் மறுக்கமுடியாது.