Sing Geetham

Rating 5/5

21

a K Vijay Anandh review

GenZ என்று அழைக்கப்படும் இன்றைய தலைமுறை படைப்பாளிகள் நம்மை ஆச்சரயப்படுத்தும் விதமாக மிகவும் வித்தியாசமான சிந்தனையோடு  திரைப்படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு சற்றும் சளைக்காத வண்ணம் இதோ என்னுடன் மோதிப் பாருங்கள் என்று சவால் விடும் அளவிற்கு நான்கு தலைமுறைகளாக படங்கள் இயக்கிக் கொண்டிருக்கும் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், Sing Geetham  திரைப்படத்தை  கொடுத்திருக்கிறார்.

இதுவும் ஒரு KGF போலத்தான், ஆனால் வன்முறைகள் எதுவும் இன்றி காதல் படம் முழுக்க வசனங்களுக்கு பதிலாக பாடல்கள் என்று ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

கதாநாயகனின் அறிமுக காட்சியிலேயே இயக்குனர் தனது அனுபவ முத்திரையை பதித்து ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறார்.

எல் நினோ என்கிற வெப்ப புயல் அச்சுறுத்தல் சர்வதேச நாடுகளை பதம் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், மரங்கள் நடுவதின் அவசியத்தை மிகவும் வித்தியாசமான பாணியில் சொல்லி அசத்து இருக்கிறார் இயக்குனர்.

அவ்வளவு பெரிய பொட்டல் காட்டில், ஒரே ஒரு மரம் அதனை பாதுகாக்கும் கதாநாயகி, குபேர கடவுள், அந்த கடவுளின் வாகனமான கீரிப்பிள்ளை, தங்கச் சுரங்கம் என்று வித்தியாசமான களங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.

தங்கத்தின் மீது கொண்ட தீராத ஆசையால் தங்கள் வளத்தை தாங்களே குழி தோண்டி புதைக்க இருக்கும் மக்கள், பாட்டு நோயால் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது, எல்லாம் உணர்ந்து திருந்தி வழக்கமான பேச்சு மொழிக்கு வருகிறார்கள்.

கிளைமாக்ஸ் இல், ஒரு விருந்தின தோட்டத்தோடு வரும் விஜய் தேவரகொண்டா அங்கே முளை விடும், ஒரு செடியை நசுக்க பார்க்க ஆடல் நோயால் அவதிப்பட்டு கொள்கிறார்.

கடைசியில் அங்கிருந்து தப்பிச்சென்றும் விடுகிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் துள்ளல் இசை படத்திற்கு பெரிய பலம்.

படத்தின் இடைவேளை நேரங்களில் மற்றும் படம் முடியும் நேரங்களில், படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பாடிக்கொண்டே இருப்பது ரசிகர்களையும் தொற்றி கொள்ளும்.

வீட்டுக்கு போகலாமா… காரை எடு சீக்கிரம் போகலாம்… சாப்பிட்டுவிட்டு போகலாமா… ஹோட்டலுக்கு போ … ஒரு கட்டு கட்டலாம்….

லாலா லாலா லா…லா … லாலா லாலா லா…

என்று பாடிக் கொண்டே செல்வார்கள், அதுவே இந்த படத்தின் வெற்றி!!