Ram and Leela

Rating 4/5

24

a K Vijay Anandh review

முன்று மாதங்களில் கிட்டத்தட்ட ஒரே கதைக்களத்துடன் கூடிய இரண்டாவது படம்.  அதே 12 மணி நேரத்திற்கு ஒரு முறை  ஏற்படும் பாலின மாற்றம், அதே காதல், அதே குழப்பம்! ஆனாலும், ரியோ ராஜின் , ஒரு அப்பாவித்தனமான உடல்மொழி மற்றும் அறிமுக இயக்குனர் ராமச்சந்திரன் கண்ணனின் அட்டகாசமான திரைக்கதை, வரிடிகாவின் வசீகர அழகு என்று ராம் அண்ட் லீலா படத்தை அனைவரும் விரும்பும் படமாக மாற்றியிருக்கிறது.

பஞ்சதந்திரத்திற்கு பிறகு அதிகமாக ராம் ராம் என்று உச்சரிக்கும் தமிழ் படம் இது தான். போதாக்குறைக்கு  கிரேசி மோகனுக்கு நன்றி எல்லாம் வேறு போட்டு படத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அயோத்தியில் தன் சொந்த இடத்தில் உருவான ஆலயத்தில் குடிகொண்ட குழந்தை ராமரையெல்லாம் பார்க்கும் போது, இது தமிழ் சினிமா தானா என்று எண்ணத்தோன்றுகிறது.

ரியோ ராஜ் படங்களை நன்கு கவனிப்பவர்களுக்கு ஒன்று தெரியும்., அவருக்கு படம் ஆரம்பிக்கும் போதே  திருமணம் ஆகும், ஆகிவிடும். இந்தப்படத்தில் அப்படியே உல்டாவாக, அவருக்கு கல்யாணம் செஞ்சுக்க பொண்ணே கிடைக்காத மாதிரி கதை ஆரம்பிக்கும்.

இவரை ஒருதலையாக இவருக்கு தெரியாமலே காதலிக்க ஆரம்பிக்கும் லீலா, ஆறு மணிக்கு மேலும் ராம் ஆக  ரியோ ராஜை பின் தொடர்வது தான் இந்தப்படம் அந்தப்படத்தில் இருந்து  வேறுபட்டு இருப்பதற்கு ஒரு சாட்சி, அது மட்டுமல்லாமல், லீலாவின் குடும்பத்தினரையெல்லாம் வேறு காட்டி , மிகவும் நம்பகத்தன்மையான திரைக்கதையாக வழங்கியிருக்கிறார்கள்.

நான் ஒரு போராளியாக்கும் என்று ரியோ ராஜ் சொல்லுமிடங்கள் அழகு.

கடைசில ஒன்னு சொல்லுவாரே பார்க்கலாம், ” பகல்ல நான் அவளை வைச்சுக்கனும்… இராத்திரி அவன் என்னை வைச்சுக்கனுமா..? ” அல்டிமேட்.

வர்டிகா, ஒரு அழகான மெழுகு சிலைபோல இருக்கிறார். ரியோ ராஜை இன்ன காரணத்திற்காக காதலிக்க ஆரம்பித்தார் என்று ஒரு அழுத்தமான காரணத்தை மட்டும் சொல்லியிருந்தால் செமயாக இருந்திருக்கும்.

வர்டிகாவின் இரவு உருவமாக ஆணாக வரும்,  பாலாஜி தியாகராஜன் தயாளனும் அற்புதமாக நடித்திருக்கிறார்.

ரியோ ராஜின் தங்கையாக வரும் தாஃபியா அபு,  நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில்  வசீகர தங்கச்சியாக வலம்  வந்திருக்கிறார்.

ஆணோ ,  பெண்ணோ  யாரை வேண்டுமானாலும் காதலிங்க, ஆனால், ஒரு 24 மணி நேரம்  கூடவே இருந்து அவர் உங்களுக்கு ஏற்ற பாலினம் தானா என்பதை கன்பர்ம் பண்ணிக்கிட்டு காதலை தொடருங்க, ஏன்னா என்ன வேணா  நடக்கலாம்!