ஹைக்கூ

Rating 3.5

10

a K Vijay Anandh review

கோழிப்பண்ணை செல்லத்துரை படத்திற்கு பிறகு என்ன ஒரு மாற்றம்,  கடின உடற்பயிற்சிகள் அர்ப்பணிப்பு என்று, ஹைக்கூவில் ஒரு கல்லூரி மாணவனாக அச்சு அசலாக பொருந்திப்போகிறார் ஏகன் ஜோ.

அவ்வளவு அழகான பெண்கள் ,  அந்தக்கல்லூரி அமைந்திருக்கும் இடமே ஏதோ பூமியில் இருந்து கொஞ்சம் மேலே, ஒரு மினி சொர்க்கம் போல இருக்கிறது. அதில் ஆயிரக்கணக்கான தேவதைகளாக மாணவிகள், அப்படி ஒரு கல்லூரி, கடந்த இரண்டு ஆண்டுகளாக கோ எஜுகேஷன் ஆன பிறகும், அங்கே ஒரு மாணவர்  கூட சேராமல் இருந்தது ஆச்சிரியத்திலும் ஆச்சிரியம்.

அப்படி ஒரு கல்லூரிக்கு, நம்ம ஹீரோ நுழைகிறார். ஏற்கனவே படித்த கல்லூரியில் பெண்கள் டாய்லெட்டிற்குள் நுழைந்து ரீல்ஸ் போட்டதால், டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஹீரோ, முற்றிலும் பெண்கள் டாய்லெட்டுகள் மட்டுமே இருக்கும் கல்லூரியில் சேர்ந்து , ஒதுங்க கூட முடியாமல் படும் அவஸ்தை, அவருக்காக ஒரே ஒரு நவீன ஆண்கள் டாய்லெட் நம்ம பேருந்து  நிலையங்களில் வைத்திருப்பார்களே அதைப்போல வைக்க, அத்தனை மாணவியரும் மூன்று தளங்களிலும் நின்று வேடிக்கை பார்க்க, இதுபோன்ற சுவராஸ்யமான காட்சிகள் மிகவும் சாதாரணமாக கடந்து போய்விடுகின்றன.

அத்தனை மாணவிகள், இவர் ஒரு ஆள் காதல் வராமலா இருக்கும்..? ஸ்ரீ தேவியுடன் காதல் மலர்ந்து பிரேக் அப்பும் ஆகிவிடுகிறது.

கதை என்னவோ, பிளாஷ்பேக்காக தான் சொல்லப்படுகிறது. ஃபெமினா ஜார்ஜுடன் அலுவலகத்தில் இன்னொரு காதல்.

என்னடா டி ராஜேந்தரின் மறு அவதாரமா இவர் என்று சந்தேகப்படும் அளவிற்கு,  ஒன்றுக்கு இரண்டு காதலிகள் இருந்தாலும் ஒரு கட்டிப்புடி, ரொமான்ஸ் என்று எதுவுமே இல்லை. சரி கொடுக்கிற  முத்தங்களையாவது நச்சுனு கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்கிறாரா ? என்றால் நெற்றியில் கொடுத்து  வெறுபேற்றுகிறார், படம் பார்க்கும் இளசுகளை.

பழைய காதலிக்கு செய்யாமல் விட்டதை,  புதிய காதலியான தனக்கு செய்கிறாரோ, அப்படி செய்யும் போது ஒவ்வொன்றிலும் அவளையே நினைத்து செய்கிறாரோ என்று உடையும் ஃபெமினா ஜார்ஜின் கதாபாத்திரம் மிகவும் யதார்த்தமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ தேவியும், கல்லூரி காதலியாக மிகவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்.

ஏகன், தன்னால் எந்த ஜென் சி  நடிகர்களுடனும் போட்டி போட முடியும் என்று கெத்தாக வந்து நிற்கிறார். ”பிற்ந்துட்டோம்ங்கிறதுக்காக வேலை செய்யக்கூடாது, பிடிச்ச வேலையைச் செய்யனும்..”  என்கிற ஆரம்பத்தில் இவர் பேசும் வசனத்திலேயே ஓகே ஏதோ, வித்தியாசமாக சொல்லப்போகிறார்கள் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, அதற்கு மாறாக ஒரு திரைக்கதை அமைத்து அசத்தியிருக்கிறார்கள்.

சித்து குமாரின் இசை இனிமாயக இருக்கிறது.

மிகவும் எளியமையான கதைக்களம், அதே நேரம் மிகவும் வலிமையான செய்தியை சொல்லியிருக்கிறார்  இயக்குனர் யுவராஜ் சின்னச்சாமி.  அந்த செய்தி இளசுகளுக்கு மட்டுமல்ல, காதலிக்கும் அத்தனை  ஆண்களுக்கும் பெண்களுக்கும்

ஜைக்கூ படத்திற்கு ஹைக்கூவாகவே விமர்சனம் செய்வதாக இருந்தால்,

உடைந்த காதல்                                                                                                                                                                                      ஒரு குப்பை                                                                                                                                                                                            சுமந்து கொண்டு திரியாதே….

இந்த வாரம் வெளியாகும் ஹைக்கூவை பார்த்துவிட்டு, கரெக்டுதானா ? இல்லையா ? என்று சொல்லுங்கள்!