உயிர்காக்கும் மருத்துவர் பார்வையில்

Bastar - The Naxal Story

236

கேரளா ஸ்டோரி புகழ் அடா சர்மா அதிரடியான நக்சல் ஒழிப்பு பாதுகாப்பு படை வீரராக நடிக்க,  சுதிப்டோ சென் இயக்கியிருக்கும் பஸ்டர் த நக்சல் ஸ்டோரி படத்தின் சிறப்பு திரையிடலில் தேசியவாதிகள் பலர் கலந்து கொண்டனர்.

படத்தை பார்த்தவர்களுள் ஒருவரான லைப் லைன் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ராஜ்குமார் JS தன்னுடைய கருத்தை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறும் பொழுது, ” ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த கால
கட்டத்தில் மத்திய மாகாணம் ( Central Province ) – த்தில் சத்தீஸ்;கர், ஜார்கண்ட் ல் அடங்கிய பகுதி, பாஸ்தர் என்ற ஒரு சிறு கிராமம்.  இந்திய வரைபடத்திலும் உலக வரைபடத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

1910 & 1911 இந்த இரண்டாண்டு காலத்தில் நடந்த இரு நிகழ்வுகள் இந்திய நாட்டையே நிலைகுலைய வைக்கும் ஒரு பேரதிர்ச்சியை
ஏற்ப்படுத்தின. 1910ல் குண்டுவார் எனும் பழங்குடி இனத்தலைவன் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடும் நடவடிக்கைகளை
தொடங்கிவைக்கும் வித்தினை விதைத்தான். 1911ல் வீரவாஞ்சிநாதன் ஆஷ் துரையை மணியாச்சி சந்திப்பில் சுட்டுக் கொன்றான். இந்த இரண்டு நிகழ்வுகளும் இந்திய விடுதலை போராட்ட  வீரர்களுக்கு உத்வேகத்தையும் துணிச்சலையும் கொடுத்து உதவின.

துரதிஷ்டவசமாக, சுதந்திரம் பெற்ற பிறகு 50, 60 ஆண்டுகளில் நாட்டையும் அரசிற்கு எதிரான செயல்பாடுகளையும் ஊக்குவிக்கவும்  இதே  பாஸ்தர் போராட்டம் மையப்புள்ளியாக அமைந்துவிட்டது. அந்நிய சக்திகளான சீனா
போன்ற நாடுகள் கம்யூனிசம் என்ற பெயரில் நாட்டில் ஊடுருவி இளைஞர்களிடையே வன்முறையுணர்வுகளை தூண்டிவிட்டு வன்முறை புரட்சியில் ஈடுபடுத்தினர்.
போலீசார்  மீது வன்முறைகளை   ஏவினதோடு மட்டுமல்லாமல் அந்தப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட வந்த காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களையே பொதுமக்கள் மத்தியில் வில்லன்களாக சித்தரித்து விட்டனர்.  அது முதல் காவல்துறையினரும் ராணுவத்தினரும் மக்களின் பார்வையில் எதிரிகள் ஆகிவிட்டனர்.

நக்சலைட்டுகளுக்கு எதிரான அந்தப் போராட்டம் சமீபத்தில் முடிவுக்கு வந்து மக்களும் நக்சலைட்டுகளின் பொய்பிரச்சாரத்தினை  இன்று புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.

அந்தப் பகுதிகளில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கேரளா ஸ்டோரி என்ற படத்தின் இயக்குநர் கொடுத்த புதிய பரிசாக  இந்த பாஸ்தர் திரைப்படத்தை பார்க்க முடிகிறது.

ஓவ்வொரு இந்தியனும் மரக்காமல் பார்க்க
வேண்டிய படம் இந்த பாஸ்தர். கம்யூனிசம், மாவோயிசம், லால்சலாம், சிவப்பு வந்தனம் போன்ற சொற்றொடர்களைக் கொண்டு மக்கள் மனதை மாற்றி அரசிற்கு எதிராக
எவ்வளவு கொடுமைகள்!

ஒரு பக்கம் போலீசார்களையும் குறிப்பாக சிறப்பு காவல்படை  இவர்களை கண்டிக்கவும் இவர்கள் செயல்பாட்டை முடக்கவும், நீதி மன்றங்களில் வழக்குகளை தொடர்ந்தனர்.
இன்னொரு பக்கம் ஊடகம் முதலியவற்றையும் தொலைக்காட்சி நிறுவனங்களையும், நாளிதழ்களையும் விலைபேசி தங்களுக்குச்
சாதகமான கட்டுரைகளையும், கதைகளையும், எழுதச் செய்தனர்.

வேறொரு பக்கம் கல்லூரிகளில் ஊடுருவி, கல்லூரி விழாக்கள், இசைவிழாக்கள் முதலியவற்றை நடத்தினர், இவற்றை நடத்த ஏராளமான பணம் வேண்டுமே?
எதிரிநாடான கம்யூனிசத்தின் கடைசி கோட்டையான அண்டை நாடு கருப்பு பணத்தை நினைக்கவே முடியாத அளவில் அனுப்பி இச்செயல்கள் நடைபெறுகின்றன.

இந்தத் திரைப்படத்தில் வழக்கு காட்சிகள் ஊடாக ஒரு முக்கியமான செய்தி வெளிவருகின்றது. பாக்கிஸ்தானுடன் தொடுத்த போரில் மாண்டவர்கள் மூவாயிரத்தி சொச்சமே. ஆனால், தேசத்திற்கு உள்ளாகவே தவறான நோக்கத்துடன் ஊக்குவிக்கப்படும் தீவிரவாத செயல்களினால்  தொடர்ந்து  கொலை, குண்டுவெடிப்பு போன்றவற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை பன்னிரண்டாயிரத்துக்கும் மேல்  என்பது அதிர்ச்சியாக இருக்கிறது அதிர்ச்சியாக இருக்கிறது

சிவப்புக் கொடிதான் இந்த மண்ணில் மிளிர வேண்டும். இந்திய மூவர்ணம் இங்கு நாட்டலே துரோகச் செயல் அதற்குத் தண்டனையே
மரண தண்டனை என்கிற தேசத் துரோகம் என்ற நக்சலைட்டுகளின் கொடூர கோட்பாட்டை இந்த படம்

படம் ஹிந்தியில் இருந்தாலும் ஒவ்வொரு உணர்ச்சி மிகுந்த காட்சிகளும் மொழி தெரியாதவர்களுக்கு கூட புரியும் அளவிற்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது . ஆகவே ஒவ்வொரு தமிழர்களும் தங்களது குடும்பத்தினர் குறிப்பாக குழந்தைகளுடன் கட்டாயம்  இந்தப் படத்தைபார்க்க வேண்டும்.

வன்முறைக்கும் தேசதுரோகத்திற்கும் சொற்கள் தேவையில்லை இந்தப்படத்தைப்
பார்க்கும் பே து எப்படி அப்பாவி  குடிமக்கள் சீனாவிலும், ரஷ்யாவிலும் கம்போடியாவிலும், நமது இந்தியாவிலும் கம்யூனிசம்
என்ற நிலையைக்கொண்டு அநியாயமாக கொல்லப்பட்டனர் என்பது
வெளிப்படை.. கம்யூனிசம்   கோலோச்சும்  அண்டை மாநிலமான கேரளத்தில் நடந்த படுகொலைகளை யாரும் மறுக்க இயலாது.

ஆமாம் படகாட்சிகள் இரத்தத்தில் தோய்ந்துள்ளன. ஆனால் இது
உண்மை, முற்றிலும் உண்மையான சம்பவங்களைக் கொண்டு
எடுத்தபடம் .

இந்த கம்யூனிசு கனவினால் இந்தியாவில் மத்திய மாகாணங்கள் பிளவுபட்ட வேளையில் 2014 க்கு பின் அமைந்த புதிய மத்திய அரசின் ஈடுபட்டால் அங்கு இருக்கும் 19 கிராமங்களில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்து என்பது
இப்படத்தில் வரும் பின்குறிப்பு மற்றும் நிதர்சனம்.

ஒரு நொடி கூட நம்மை நம் கண்களை விட்டு எடுக்க முடியாத அளவிற்கு நம்மை ஈர்த்து வைக்கிறது இந்த திரைப்படம். இது வெறும் திரைப்படம் அல்ல, அப்பாவி இந்தியர்களின் இரத்தத்தால் குறிக்கப்பட்ட ஒரு சோக வரலாற்று குறிப்பு .

வெறும் பொழுதுபோக்கு படங்கள் மட்டுமல்லாமல், பஸ்டர் த  நக்சல் ஸ்டோரி போன்ற படங்களை  தமிழர்கள் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அது பற்றிய விவாதங்களையும் நண்பர்களுடனும் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடனும் ஏற்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அடுத்த தலைமுறை முற்றிலுமாக பாதுகாக்கப்படும் …” என்றார்.

Bastar The Naxal Story மார்ச் 15 ஆன இன்று வெளியாகிறது.