– K Vijay Anandh
தமிழகத்தை பொறுத்தவரை அரசியலில் அங்கீகாரம் பெற எம் ஜி ஆர் முதல் விஜய் வரையிலான மாஸ் ஹீரோக்களாக ஆகத்தான் இருக்க வேண்டும் என்கிற ஒரு நம்பிக்கை நிலவி வருகிறது. அதனை மூடநம்பிக்கை என்று உடைத்து எறிந்து இருக்கிறார், நடிகர் சௌந்தரராஜா.. அவரைப் பொறுத்தவரை அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அங்கீகாரங்கள் பெறலாம், தேசத்தைப் பற்றிய பெரிய கனவுகளும் நேர்மையும் இருந்தால் போதும் என்கிற ஒற்றை அளவுகோலுடன்.
சமீபத்தில் தேனி பாராளுமன்ற தொகுதியை உள்ளடக்கிய உசிலம்பட்டி என்கிற அவரது சொந்த கிராமத்தில் தனது தாயாருடன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கு அளித்துவிட்டு வரும் பொழுது பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு மிகவும் தைரியமாகவும் நேர்மையாகவும் பதிலளித்து, அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆர்வமுள்ள சக நடிகர்களுக்கும் ஏன் சாதாரண மனிதர்களுக்கும் கூட ஒரு உத்வேகத்தை அளித்திருக்கிறார்.
அந்த பேட்டியில், ” விஜய் அண்ணா என் உடன்பிறவாத சகோதரன் அவரை அரசியலுக்கு வரவேற்கிறேன். கொஞ்சம் பொறுங்கள் மிகப்பெரிய விஷயங்கள் நடக்கும். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், நேர்மையும் தேசபக்தியும் இருந்தால் போதும்நேர்மையும் தேசபக்தியும் இருந்தால் போதும். என்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று கேட்டீர்கள், இதோ நான் வாக்களித்த வாக்குச்சாவடி கள்ளர் உயர்நிலைப்பள்ளி என் தந்தை படித்த பள்ளி இன்னும் அப்படியே தான் இருக்கிறது. அதே நேரம் இந்தப் பகுதியில் தேர்தலில் வென்ற சேர்மன் எம் எல் ஏ மற்றும் அமைச்சர்கள் ஆகியோரின் வீட்டிற்கு சென்று பாருங்கள். அவர்களது வீடு எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கிறது என்பது தெரியும். இங்கே, கல்வி , மருத்துவம், சுகாதாரம், விவசாயம் மற்றும் வேலை வாய்ப்பு ஆகிய ஐந்து துறைகளையும் சீர்படுத்தி விட்டால் போதுமானது.. ஓட்டு போடுவது என்கிற எனது கடமையை நான் செய்து விட்டேன். இனி அரசியல்வாதிகள் அவர்களது கடமையை தேசபக்தியுடனும் நேர்மையுடனும் செய்ய வேண்டும் … ” என்று அதிரடியாக பேட்டி கொடுத்திருக்கிறார் சௌந்தரராஜா.
கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் விஜய் அரசியலில் அடி எடுத்து வைத்த நிலையில், திரைப்படத்துறையில் உள்ள சங்கங்களின் மூலம் புரட்சிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் விஷால் அடுத்து அரசியலுக்கு வருவார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், சமூக சேவையை தன் கடமையாக கருதி செயல்பட்டு வரும் ராகவா லாரன்ஸ் ஒரு நாள் அரசியலுக்கு வரக்கூடும் என்று சந்தேகிக்கும் நிலையில், அவ்வப்போது அதிரடி கருத்துகளை தெரிவித்து வரும் சிம்பு கூட அரசியலுக்கு வரக்கூடும் என்கிற பேச்சு அடிப்படை நிலையில் இந்த நால்வரின் சாதனைகளை இன்னும் எட்டிப் பிடிக்க போராடிக் கொண்டிருக்கும் வளர்ந்து வரும் நடிகரான சௌந்தரராஜாவை அவர்களுக்கு நிகராக நாளைய நம்பிக்கை நட்சத்திர அரசியல்வாதிகள் என்கிற தலைப்பில் ஸ்டார் டொமைன் எனும் பத்திரிகை பெருமைப்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், திரைப்படத்துறையில் தனது இலக்கை எட்டிப் பிடிக்க தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பில் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருக்கும் சௌந்தரராஜாவிற்கு, மலையாள திரை உலகம் தனது கதவுகளை திறந்து இருக்கிறதுதனது கதவுகளை திறந்து இருக்கிறது
இவரது 40வது படம், “கட்டிஸ் கேங்” மலையாள சினிமாவில் இவர் நடிக்கும் முதல் படம். ஓசியானிக் மூவீஸ் தயாரிப்பில் ராஜ் கார்த்தி எழுத்தில் அறிமுக இயக்குனர் அனில் தேவ் இயக்கத்தில், மம்மூட்டி நடித்த “ராஜாதி ராஜா” , “ஸ்கை லாக்” போன்ற வெற்றி படங்களின் இயக்குனர் அஜய் வாசுதேவின் கிரியேட்டிவ் இயக்கத்தில் மலையாள நடிகர் உன்னி லாலு & சௌந்தரராஜா இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சஜின், பிரேமலு அல்தாஃப், பிரமோத் மற்றும் பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். நிகில் ஒளிப்பதிவில் பிஜிபால் இசையமைத்த இப்படத்தை சுபாஸ் தயாரித்துள்ளார்.

சௌந்தரராஜாவை நடிப்பிலும் அரசியலிலும் ஜெயிக்க வாழ்த்துவோம் !