அரண்மனை 4 இல் அசத்திய அப்பாவும் மகனும்

SB ராமதாஸ், பாலசுப்பிரமணியன்

134

சுந்தர் சி இயக்கத்தில், கடந்தவாரம் வெளியாகி வெற்ரிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அரண்மனை 4 திரைப்படத்தில் இரண்டாவது யூனிட் இயக்குராக பணியாற்றிகொண்டே,  இரண்டாவது பாதியில் கே எஸ் ரவிக்குமார் கூடவே வரும் காவலராகவும் நடித்திருப்பார் SB ராமதாஸ். இவர், கேப்டன் விஜயகாந்தை வைத்து பேரரசு மற்றும் சுந்தர் சி யை வைத்து ஆயுதம் செய்வோம் ஆகியபடங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிடெக் ஐடி படித்துவிட்டு ஐடி துறையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் இவரது மகன் பாலசுப்பிரமணியனும் அரண்மனை 4 படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார்.  முதல்பாதியில் படத்தின் ஆரம்பத்தில் வரும் முக்கியமான சண்டைக்காட்சி முழுவதும் லவ்வர் பாயாக கோவை சரளாவுடனும் அவரது காதலியுடன் சேர்ந்து செய்யும் கலாட்டாக்கள் படத்தில் ஆரம்பிக்கப்போகும் காமெடி ரயிலின் முதல் பெட்டியாக அமைந்திருந்தது என்றால் மிகையல்ல. இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து செய்த ரீல்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் மிகவும் பிரபலம்.

சுந்தர் சி அறிமுகப்படுத்திய நடிகர்கள் மோதிரக்கையால் குட்டுப்பட்டவர்கள் எனலாம். அந்த வகையில் இவருக்கும் அடுத்தடுத்து படவாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளதால், மே மாதத்துடன் ஐடி கம்பெனிக்கு குட் பை சொல்லிவிட்டு  முழு நேரமாக நடிக்கலாம் என்கிற முடிவுக்கு  வந்திருக்கிறார், அதற்கு இயக்குநரான அவரது தந்தையும் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார். இது குறித்து SB ராமதாஸிடம் கேட்டபோது, “ஆமாம்… அவர் முழு நேர நடிகராவதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி… மேலும்,  கேப்டன் மற்றும் சுந்தர் சி ஆகியோரை இயக்கிய நானே, பாலசுப்பிரமணீயனுக்கான நல்ல கதையுடன் காத்திருக்கிறேன், தயாரிப்பாளர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்… கூடிய விரைவில் நல்ல செய்தி வெளிவரும்..” என்றார்.

பாலசுப்பிரமணியன் திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்ததற்கு அவரது தந்தையும் இயக்கு நருமான SB ராமதாஸ் காரணமென்றால், ”  நான் எனது அண்ணனும் மறைந்த தமிழக அரசு விருதுபெற்ற வசனகர்த்தாவுமான சிவராம் காந்திஅவர்க்ளின் கையைப்பிடித்துக்கொண்டு தான் திரைப்படத்துறைக்கே வந்தேன்..” என்று தனது மூத்த சகோதரனை மறக்காமல் நினைவுகூறுகிறார்.

சிவராம் காந்தி, 1999இல் ஆனந்தப்பூங்காற்றே படத்திற்காக தமிழக அரசின் சிறந்த வசனகர்த்தாவுக்கான விருதை முன்னாள் முதல்வர் மு.கருணா நிதி கையால் வாங்கியவர் என்பதும், சரத்குமார் நடித்த சாமுண்டி உள்ளிட்ட 10 படங்களுக்கு மேல் வசனகர்த்தாவாக பணியாற்றியவர் என்பதும், 40 க்கும் மேற்பட்ட படங்களில் சிறு சிறு வேடமேற்று நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SB Ramadas