a K. Vijay Anandh review
அந்தகன் படத்தின் ஹிந்தி உரிமையை தனது மகன் பிரஷாந்திற்காக போட்டியில் ஜெயித்து வாங்கிய தந்தை தியாகராஜனின் நம்பிக்கை , படப்பிடிப்பு ஆரம்பிக்கலாம் என்கிற நிலையில் கொரானா ஊரடங்கு அமலாக, சரியான நேரத்திற்காக காத்திருந்த தயாரிப்பாளர் தியாகராஜனின் நம்பிக்கை, சரியான நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினரை இணைத்து திடடமிடடபடி படத்தை முடித்த இயக்குநர் தியாகராஜனின் நம்பிக்கை, சரியான தேதியில் வெளியிட்டிருக்கும் ஒட்டுமொத்த படக்குழுவினரின் நம்பிக்கை என்று அனைவரது நம்பிக்கையுடன் சேர்த்து ஒரு இடைவெளிக்கு பிறகு வெளியாகும் பிரஷாந்த் படம் வெற்றியடைய வேண்டும் என்று நினைத்த அவரது ரசிகர்களின் நம்பிக்கையும் வென்றிருக்கிறது.
பொதுவாக, நூற்றாண்டை தாண்டி விட்ட சினிமா உலகில் , கதாநாயகனின் மீட்டர் மெதுவாக ஆரம்பித்து இறுதிக்காட் சிகளில் எக்குத்தப்பாக எகிறும். ஆனால், அந்தகனில், லண்டன் செல்லவேண்டும் என்கிற ஒரு பியானோ கலைஞன் பிரஷாந்தின் மீட்டர் இறுதிக்காடசி வரை மிக மிக சமமாக இருப்பது ஆசிரியப்பட வைக்கிறது. எந்த இடத்திலும் துளி கூட அவர், கதையை விட்டு விலகி செல்லவில்லை, முக்கியமாக அந்த கதாபாத்திரத்தை விட்டு விலகிச்செல்லவில்லை. கமல்ஹாசன் , ரஜினிகாந்திற்கு பிறகு 50 வருடங்களை எட்டிப்பிடிக்கபோகும் நடிகர் பிரஷாந்த் தான் என்கிற அனுபவம் ஒவ்வொரு பிரேமிலும் வெளிப்பட்டிருக்கிறது.
பிரியா ஆனந்த் , இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாடர்ன் கேர்ள் ஆக சிறப்பாக நடித்திருக்கிறார். இரண்டாம் பாதியில் கே எஸ் ரவிக்குமார், ஊர்வசி மற்றும் யோகிபாபு கூட்டணி கதையை மிகவும் இயல்பான விறுவிறுப்புடன் நகர்த்துகிறது. படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களும் முழுமையாக பயன்படுத்த பட்டிருக்கிறார்கள். பூவையார் ஆகட்டும் பிரஷாந்த் வீட்டில் வளரும் பூனையாகட்டும், ஒரே ஒரு காட்சியில் பிரஷாந்துடன் பெனஞ்சில் அமரும் ரமேஷ் ரங்கசாமி ( இணை இயக்குநர் ) ஆகட்டும் கசித்தமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் இயக்குநர் தியாகராஜனால்.
வீட்டில் கம்முனு இருக்கும் கணவன் , வெளியே கள்ளக்காதலன் என்று சமுத்திரக்கனியும், அவரது மனைவியாக வனிதா விஜயகுமாரும் அடடாகாசப்படுத்தியிருக்கிறார்கள்.
நவரச நாயகன் கார்த்திக், வேறு ஒரு கதாபாத்திரமாக இல்லாமல், ஒரு நடிகராகவே அதுவும் நடிகர் கார்த்திக்காகவே இமேஜ் பார்க்காமல் இறந்து போகும் அதாவது கொலை செய்யப்படும் காட் சியில் நடித்திருப்பது பாரடடத்தக்க விஷயம்.
சிமியாக வரும் சிம்ரனும், மிரட்டியிருக்கிறார். இவரை விடடால் இந்த கதாபாத்திரத்திற்கு இன்னொருவரை கற்பனை செய்து கூட பார்க்கமுடியவில்லை. தவறாக ஆரம்பித்த ஒன்றிலிருந்து தப்பிக்க படம் முழுவதும் தப்பு தப்பாகவே செய்து கொண்டிருப்பது ரசிகர்களுக்கு பெரிய விருந்து.
சந்தோஷ் நாராயணனின் இசை புதுமையான அனுபவத்தை தருகிறது.
திரையுலகில் பல அப்பா மகன் ஜோடிகளை பார்த்திருக்கலாம் , சினிமாவை வெறித்தனமாக காதலிக்கும் அப்பா மகன் ஜோடியாக , தியாகராஜனும் பிரஷாந்தும் ரசிகர்கள் மனதில் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்பார்கள் என்கிற அளவிற்கு . அந்தகன் வெளியாகியிருக்கிறது.